Advertisment

200 விமானங்களில் பயணம்... கோடிக் கணக்கில் நகை, பணம் திருட்டு... டெல்லியைச் சேர்ந்த நபர் கைது!

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணம் செய்து சக பயணிகளிடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
flyght

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (ஐ.ஜி.ஐ) விமான நிலைய போலீஸ் குழு நகைகளைத் திருடிய நபர் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லியைச் சேர்ந்த இந்த நபர் தனது இறந்த சகோதரரின் பெயரில் பயணிகளிடம் இருந்து திருடுவதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் டெல்லியில் உள்ள நகைக்கடை வியாபாரிக்கு மதிப்புமிக்க பொருட்களை கொடுத்ததாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Delhi man took over 200 flights to steal jewellery and cash worth crores from co-passengers; arrested

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச (ஐ.ஜி.ஐ) விமான நிலைய போலீஸ் குழு நகைகளைத் திருடிய நபர் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தது. அவர் 2005 முதல் ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளைக் குறிவைத்து திருட்டுகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.

விமானப் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குறித்து போலீசார் கூறுகையில், ராஜேஷ் கபூர் (40) திருடுவது பெரும்பாலும் விமான நிலையத்தில் போர்டிங் சமயத்தின்போது, கைப்பைகளை எடுத்துச் செல்லும் வயதான பெண் பயணிகளை குறிவைத்து ஈடுபட்டுள்ளார். இறந்த அவரது சகோதரர் ரிஷி கபூரின் அடையாளத்தை பயன்படுத்தி, அவர் கவனிக்கப்படாமல் பயணம் செய்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவர், பொருளைத் திருட்டுக் கொடுத்தவர்களுடன் நெருக்கமாக இருக்க அடிக்கடி இருக்கைகளை மாற்றினார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவுக்குச் சென்ற 2 பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் முறையே ரூ. 7 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகளைப் பறிகொடுத்த சம்பவங்கள் உட்பட தொடர் திருட்டு சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் சுதாராணி பதூரியின் நகைகள் திருடப்பட்டது. அமிர்தசரஸில் இருந்து தலைநகர் டெல்லி செல்லும் விமானத்தில் வரேந்திரஜீத் சிங்கின் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டன.

போலீசாரின் விசாரணையில், ஐதராபாத், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர். இரண்டு விமானங்களிலும் கபூர் இருப்பது போலீசாரின் சந்தேகத்தை எழுப்பியது. விமான நிறுவனங்களில் இருந்து அவரது எண்ணை அதிகாரிகள் கண்காணித்தபோது, அது வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி எண் என தெரியவந்தது. அவரது அசல் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பப் பகுப்பாய்வை போலீஸார் மேற்கொண்ட அவரது அழைப்புப் பதிவு விவரங்கள் (சி.டி.ஆர்) அவர் பஹர்கஞ்சில் வசித்ததாகவும், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட காலத்திற்கு தனது செல்போனை இயக்கியதும் தெரியவந்தது.

ராஜேஷ் கபூரின் புகைப்படம் பின்னர் வெளியிடப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் தேடுதலை நடத்தினர். அவருக்கு சொந்தமான ரிக்கி டீலக்ஸ் விருந்தினர் மாளிகையில் அவரது வீட்டு வாசலுக்கு காவல்துறையை அழைத்துச் சென்றது. பின்னர், ராஜேஷ் கபூர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் மூலம் கணிசமான அளவு திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கூடுதலாக, கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த ஷரத் ஜெயின் (46) கைது செய்யப்பட்டதில், கபூரிடமிருந்து திருடப்பட்ட நகைகளைப் பெறுபவராக அவர் ஈடுபட்டது தெரியவந்தது. ஜெயின் ஒத்துழைப்பால் அவரது நகைக்கடையில் இருந்து உருகிய தங்கம் மற்றும் வைரம் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.

ராஜேஷ் கபூரின் விமானப் பயண பதிவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் அவர் 200-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணம் செய்ததால், இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இதே போன்ற வழக்குகளில் அவர் ஈடுபட்டது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

டெல்லி, சென்னை, ஹைதராபாத், சண்டிகர், பெங்களூர், மும்பை மற்றும் அமிர்தசரஸ் போன்ற இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமான நிறுவனங்களில் யாருக்கும் சந்தேகம் வராதபடி, பெண் பயணிகளின் பைகளில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதை ராஜேஷ் கபூர் ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவரின் பயண விவரங்களின் பட்டியலுடன் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று காவல்துறை துணை ஆணையர் (ஐ.ஜி.ஐ) உஷா ரங்நானி கூறினார்.

“இதன் மூலம், இன்னும் சில வழக்குகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டவரின் பயண வரலாறும் கடந்த ஒரு வருடமாக ஆய்வு செய்யப்பட்டு, இதே போன்ற பிற வழக்குகளில் அவர் ஈடுபட்டுள்ளதை மேலும் வெளிக்கொணர வேண்டும். மேலும், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று ரங்நானி மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment