டெல்லியில் சிறுவன் ஒருவனை தாக்கும் கும்பலை எதிர்த்தவரை அக்கும்பல் சுமார் 50 முறை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
டெல்லியில் உள்ள கான்பூரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது வண்ணப்பொடி நிரம்பிய பலூனை தங்கள் மீது எரிந்ததால் கோபமடைந்த கும்பல், சிறுவன் ஒருவனை தாக்கியுள்ளது. அதனைக்கண்டு அவ்வழியாக சென்ற ஆசிஷ் என்பவர், அவர்களை தாக்கி சிறுவனைக் காப்பாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், இச்சம்பவத்தால் கோபமடைந்த அக்கும்பல் நேற்று முன்தினம் ஆசிஷை இரும்புக் கம்பியால் பலமுறை தாக்கியுள்ளது. மேலும், கத்தியால் சுமார் 50 முறை தாக்கியதாக கூறப்படுகிறது. அக்கும்பலுடன், சுமார் 20 பேர் இணைந்து ஆசிஷை தாக்கியதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
Advertisment
Advertisements
இதன்பின், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடலில் கத்தியால் குத்தியதால் சுமார் 50 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.