/tamil-ie/media/media_files/uploads/2020/04/nizamuddin.jpg)
tablighi jamaat, markaz nizamuddin meeting, markaz nizamuddin meeting, டெல்லி, தப்லிகி ஜமாஅத், மர்காஸ் நிஜாமுதீன் மாநாடு, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் தற்கொலை முயற்சி, 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி, delhi meeting participated person covid19 positive,covid19 positive person tried suicide attempt, delhi hospital, coronavirus
டெல்லி மர்காஸ் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மர்காஸ் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தப்லிகி ஜமாஅத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணகானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு சமூகப் பரவல் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி தபிலிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர், வடகிழக்கு டெல்லி தில்ஷாத் கார்டனில் உள்ள ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6வது அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் வைக்கப்பட்டார்.
People from Markaz Nizamuddin were admitted on 6th floor. One of them tried to commit suicide today. We successfully saved him. We're taking all possible measures to tighten security so that such incidents don't repeat: Hospital Admin,Rajiv Gandhi Super Speciality Hospital, Delhi
— ANI (@ANI) April 1, 2020
கொரோனா பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் செவ்வாய்க்கிழமை காலை தான் இருந்த ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 6வது மாடியின் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக வந்த மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றினார். கொரோனா பாதிப்பால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மனநல மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்தனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அனைவரையும் மருத்துவமனையின் 6வது மாடியில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அவரை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டார்கள். இதுபோல தற்கொலை முயற்சி சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கொரோன நோயாளிகளுக்கு காற்றோட்டம் அவசியம் என்பதால் அங்கே இருந்த ஜன்னல்களை மூடவிலை” என்று தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.