டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 63 பேரில் 53 பேருக்கு, எவ்வித வெளிநாட்டு பயணங்களோ அல்லது வெளிநாட்டு பயணிகளிடம் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரமோ கிடையாது என அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரிவித்தனர்.
மூத்த சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், " மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் மீண்டும் பாதிப்புக்குளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஏதேனும் பயண வரலாறு உள்ளதா அல்லது வெளிநாட்டுப் பயணிகளுடன் தொடர்பு இருந்ததா என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள். ஓரிரு நாளில் அதனை கண்டுபிடித்துவிடுவோம்" என தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 பேரில் 31 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என்பதை செய்தியாக வெளியிட்டிருந்தோம். ஆனால்,அவர்களுக்கு வெளிநாட்டு பயண வரலாறும், வெளிநாட்டு பயணிகளுடன் தொடர்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை பதிவான ஒமிக்ரான் பாதிப்புகளில், 63 பேரில் 11 பேர் மட்டுமே வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது, ஒமிக்ரான் தற்போது சமூக பரவலாக மாறியிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அதிகாரி, " கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும், 25க்கும் குறைவான CT மதிப்புள்ள அனைத்து பாசிட்டிவ் கேஸ்களையும் வரிசைப்படுத்தி வருகிறோம். மரபணு பரிசோதனையில் தான் ஒமிக்ரான் தொற்றை கண்டறியமுடியும் என்றார்.
டெல்லியில் பதிவாகும் பாதிப்புகள், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலும், கல்லீரல் மற்றும் பிலியரி சயின்சஸ் நிறுவனம் மற்றும் லோக் நாயக் மருத்துவமனையில் உள்ள இரண்டு மாநில ஆய்வகங்களிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
Ct மதிப்பு வைரஸைக் கண்டறியக்கூடிய சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. CT மதிப்பு குறைவாக இருந்தால், வைரஸ் பாதிப்பு அதிகம். 5 க்கும் குறைவான CT மதிப்பு கொண்டவர்களின் மாதிரிகள், வரிசைப்படுத்தப்படுவதற்கு போதுமானதாக இருப்பதை குறிக்கிறது.
மற்றொரு அதிகாரி கூறுகையில், "ஆரம்பத்தில், அனைத்து ஒமிக்ரான் பாதிப்புகளும் சர்வதேச பயணிகளில் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த வாரம், சமூகம் ரீதியாக கண்டறியப்பட்டு வருகிறது. இந்த 52 வழக்குகளும், சாதாரண பொதுமக்களிடம் கண்டறியப்பட்டது தான். என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil