/tamil-ie/media/media_files/uploads/2021/09/arrest-2-2.jpg)
டெல்லி காவல்துறை, குஜராத்தின் காந்திநகரில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தை (FSL) அணுகியதன் மூலம், ரோகிணி சிறை கைதி சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐபோன் 12 ப்ரோவின் ஆப்பிள் ஐடி திறக்கப்பட்டுள்ளது. FSL அதற்காக சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு (EOW) மோசடி தொடர்பாக மலையாள நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தது. "நாங்கள் லீனாவை MCOCA வின் கீழ் கைது செய்துள்ளோம். மேலும், விசாரணை நடந்து வருகிறது, ”என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். லீனா மரியா பால் தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி மற்றும் மெட்ராஸ் கஃபே படத்தில் நடித்திருக்கிறார். இந்த லீனா மரியா பால் சுகேஷின் காதலி என்று போலீசார் கூறினர்.
சர்வதேச சிம் கார்டைப் பயன்படுத்தி ரோகிணி சிறைக்குள் இருந்து மூன்று பாலிவுட் நடிகைகளுக்கு சுகேஷ் அடிக்கடி அழைப்பு விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் 200 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சுகேஷ் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆரில், தனது கணவரின் வழக்கில் உதவி செய்வதாக உறுதியளித்த பின்னர், ஒரு மத்திய மந்திரி கேட்கிறார் என்று "சட்ட செயலாளர்", "உள்துறை செயலாளர்" என்று கூறி சுகேஷ் 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அதிதி கூறினார்.
சுகேஷ், சட்டத்துறை மற்றும் உள்துறை செயலாளர் என்று கூறியதை போலீசார் உறுதி செய்தனர். ரன்பாக்ஸியின் முன்னாள் விளம்பரதாரர் மற்றும் சிவேந்தரின் சகோதரர் மல்விந்தர் மோகன் சிங்கின் மனைவியிடம் ரூ .4 கோடி மோசடி செய்ததாக மிரட்டி பணம் பறித்தல், மோசடி மற்றும் கிரிமினல் சதி ஆகியவற்றுக்கான புதிய எஃப்.ஐ.ஆர் கடந்த வாரம் EOW மூலம் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகேஷ் தனது சிறை தொடர்புகளிலிருந்து ஐபோனைப் பெற்றதாகவும், தொலைபேசியின் அமைப்புகள் சென்னையில் ஒரு விற்பனையாளரால் செய்யப்பட்டதாகவும் போலீஸிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. "அவர் தனது ஆப்பிள் மற்றும் ஐக்ளவுட் ஐடிகளைப் பற்றி தனக்கு தெரியாது என்று கூறுகிறார். புலனாய்வு குழு, அனைத்து நிறுவனங்களையும் அணுகிய பிறகு, இப்போது சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும் காந்திநகர் தடயவியல் துறையை அணுகியுள்ளது. சுகேஷின் சில ஹவாலா ஆபரேட்டர்கள் உட்பட அனைத்து கும்பல் உறுப்பினர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க ரெய்டுகள் நடந்து வருகின்றன ”என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆகஸ்ட் 25 அன்று சுகேஷின் முந்தைய மூன்று மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் வழக்குகளில் விவரங்களை சேகரிப்பதாக முதலில் அறிவித்தது. சுகேஷை MCOCA இன் கீழ் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சிறைக்குள் இருந்து தொலைபேசிகளைப் பயன்படுத்தி சுகேஷ், மிரட்டி பணம் பறித்தல் மோசடி நடத்துவதை நாங்கள் கண்டறிந்தோம். ரோகிணி சிறையில் இருந்து நாங்கள் சுகேஷை கைது செய்தோம். மேலும், அவரது இரண்டு கூட்டாளிகளான பிரதீப் ராம்தானி மற்றும் தீபக் ராம்னானி; இரண்டு சிறை அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர் சுபாஷ் பத்ரா மற்றும் உதவி சிறை கண்காணிப்பாளர் தரம் சிங் மீனா; மற்றும் கன்னாட் பிளேஸில் RBL இல் மேலாளராக இருக்கும் கோனாட் பொட்டர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான அவினாஷ் குமார் மற்றும் ஜிதேந்தர் நருலா ஆகியோரையும் கைது செய்துள்ளோம். என EOW கூடுதல் ஆணையர் ஆர்கே சிங் கூறினார்.
EOW இன் சிறப்பு புலனாய்வுக் குழு சுகேஷ் இரண்டு தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் தனது ஐபோனில் ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் சிம் கார்டையும், தனது பழைய நோக்கியா கைபேசியில் உள்ளூர் சிமையும் பயன்படுத்தி வந்தார். அவர் கடந்த ஒரு வருடமாக இந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார். உள்ளூர் சிம் வடகிழக்கு டெல்லியில் வசிப்பவரின் போலி ஐடியில் வாங்கப்பட்டது, ஆனால் முகவரி போலியானது. சுகேஷ் பல கட்டணச் செயலிகளைப் பயன்படுத்தி ஏமாற்று அழைப்புகளைச் செய்து கொண்டிருந்தார் மற்றும் சில சிறை அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் சுகேஷின் சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையின் போது, சுகேஷ் சிறை அதிகாரிகளுடனான தனது நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தினார். மேலும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அவர்களுக்கு ரூ.65 லட்சம் தருவதாக கூறினார். "இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ரோகிணி சிறைக்கு மாற்றப்பட்டபோது அவர் ஒரு சிறை அதிகாரியுடன் ஒப்பந்தம் செய்ததாக சுகேஷ் கூறினார். சிறை அதிகாரி சுகேஷின் கூட்டாளியிடம் இருந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு பணத்தை சேகரித்துள்ளார்,” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சுகேஷ் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டவர். அன்மையில் சென்னையில் இவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
அதிதி சிங் தனது எஃப்.ஐ.ஆரில் தனது கணவர் சார்பாக, கொரோனா நெருக்கடியின் போது தனது கணவர் நாட்டிற்கு சேவை செய்ய பல்வேறு அரசு அதிகாரிகளை அணுக முயற்சித்ததாக கூறினார். அதிதி அரசுக்கு எழுதிய கடிதங்களை சுகேஷ் எப்படி அறிந்து கொண்டான் என்பதை அறிய எஸ்ஐடி முயன்றது. ஷிவிந்தரும் அவரது சகோதரரும் அடைக்கப்பட்ட திகார் சிறையில் சுகேஷூம் இருந்தது கண்டறியப்பட்டது. "ஷிவிந்தருடன் உரையாடிய பிறகு சுகேஷ் விவரங்களைப் பெற்றுள்ளார் மற்றும் அவரிடமிருந்து அதிதியின் எண்ணையும் எடுத்துக் கொண்டார்" என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.