அமித் ஷாவின் தொலைபேசி இணைப்புகளை மோசடி செய்த நபர்கள் கைது

உள்துறை அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சருக்கு பிறகு தான் புரிய ஆரம்பித்தது.

உள்துறை அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும் அமைச்சருக்கு பிறகு தான் புரிய ஆரம்பித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CAA rules applicants must submit proof of religion

CAA rules applicants must submit proof of religion

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குடியிருப்பு மற்றும் அலுவலக லேண்ட்லைன் எண்களை ஒரு செயலியின் மூலம்  'மோசடி' செய்ததாக,உப்கார் சிங் (47), ஜக்தார் சிங் (42) என்ற இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

உள்துறை அமைச்சர் தொலைபேசியை மோசடி செய்து, ஹரியானா மின்வாரிய மந்திரி ரஞ்சித் சிங் சவுதாலா விடம் கட்சி நிதியில் இருந்து மூன்று கோடி  கேட்கப்பட்டதை தொடர்ந்து இந்த மோசடி வெளியில் வந்துள்ளது. ரஞ்சித் சிங்  முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில் "டிசம்பர் முதல் வாரத்தில் உள்துறை அமைச்சரின் சிறப்பு கடமை அதிகாரி (ஓ.எஸ்.டி) சதீஷ்குமாரின் புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் முடிக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்தார்".

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள கிரேஸி கால் என்ற ஆப் மூலம் அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலாவிற்கு அடிக்கடி  தொலைபேசி அழைப்பு வந்தபோது தான் சந்தேகம் வர ஆரம்பித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

மேலும், போலீசார் இது குறித்து விவரிக்கையில், பாஜக கட்சியின் மூத்த அதிகாரியாக என்று தன்னை அறிமுகப்படுத்திய ஒருவரிடமிருந்து ஹரியானா அமைச்சருக்கு பல அழைப்புகள் வந்தன. அவர், ‘கட்சி நிதிக்காக’ ரூ .3 கோடி கோரியதாகவும்  கூறப்படுகிறது. டெல்லி கிருஷ்ணா மேனன் மார்க்கில் உள்ள ஷாவின் இல்லத்திலிருந்து தான் அழைப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இருந்தாலும்,  அமைச்சருக்கு பலமுறை அழைப்புகள் வந்ததில் சந்தேகம் ஏற்படவே, அவர் அமித் ஷாவின் சிறப்பு கடமை அதிகாரியான  (ஓ.எஸ்.டி) சதீஷ்குமாரின் அணுகினார். அலுவலகத்திலிருந்து அத்தகைய அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் , யாரோ ஒருவர் மோசடி செய்து வருவதாகவும்  அமைச்சருக்கு  பிறகு தான் புரிய ஆரம்பித்தது.  உள்துறை அமைச்சர் ஷாவின் ஓ.எஸ்.டி பின்னர் டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிடம் முறையாக புகார் கொடுக்கப்பட்டது , ”என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, டி.சி.பி (சிறப்பு கலத்தின் புது தில்லி ரேஞ்ச்) பிரமோத் சிங் குஷ்வா விசாரணை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளது.

“தொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு ஆப்பின் மூலம் அழைப்புகள் வந்ததை குழு முதலில் கண்டறிந்தது. அந்த ஆப் இந்தியாவில் தடை செய்யப்படிருந்தாலும், ஓபரா வலை உலாவியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.  வியாழக்கிழமை, தொலைபேசியில் பேசிய  மோசடியாளர்களிடம்  ஹரியானா பவன் அருகே வருமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜக்தார் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் உபிகார் சிங்கை கைது செய்ய போலீசார் சண்டிகரில் சோதனை நடத்தினர். அவர் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

விசாரணையின்போது, ​​ஹரியானா மாநிலத்தின் சிர்சாவைச் சேர்ந்த ஜக்தார், தோல் ஜாக்கெட்டுகள் வியாபாரம் செய்து வருவதாகவும் , உப்கார் சிங் சண்டிகரைச் சேர்ந்தவர் என்றும், டாக்ஸி ஸ்டாண்டை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

"சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட  இருவரும் ஒரு பொதுவான நண்பரின் அலுவலகத்தில் ஒரு நில ஒப்பந்தத்திற்காக முதல் முறையாக சந்தித்து இருக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்த சில காட்சிகளை மனதில் வைத்து, ஒரு அமைச்சரை ஏமாற்ற முடிவு செய்தனர்.  பிஎச்டி பட்டம் பெற்ற உப்கார், தொலைபேசி அழைப்பு ஏமாற்றுதல் பற்றி அறியத் தொடங்கினார். இதற்கிடையில், ஜக்தார் அமைச்சர் ரஞ்சித் சிங்கின் தொலைபேசி எண்களையும் பெற்றிருக்கிறார்.  பின்பு, உப்கார் அமித் ஷா தொலைபேசி நம்பரின் மூலம் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார், ”என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தனக்கு இதுபோன்ற அழைப்பு எதுவும் வரவில்லை என்று ரஞ்சித் சிங் மறுத்துள்ளார். “யாரும் என்னிடம் பணம் கோரவில்லை. நான் அமைச்சரின் எந்த அதிகாரியையும் அணுகவில்லை. நான் ஒரு அமைச்சரவையின் மந்திரி, இதுபோன்ற எந்த சம்பவமும் எனக்கு நடக்கவில்லை. எந்த நிதிகளுக்காகவும் என்னை அணுகவில்லை, ”என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன், இன்ஸ்பெக்டர்கள் உமேஷ் பார்த்வால் மற்றும் நீரஜ் குமார் தலைமையிலான குழு கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Amit Shah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: