Congress MP Jothi Mani interview in tamil: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமலாக்க இயக்குனரகம் முன் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் அமலாக்க இயக்குநரகத்துக்கும் எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்டோரின் மீது டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
நேற்று காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், தமிழ்நாட்டின் கரூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி, டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர், தனது ஆடைகளை அவர்கள் கிழித்தார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அவர் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி உங்கள் வீடியோ கிளிப்பை வெளியிட்டது. உண்மையில் என்ன நடந்தது?
நான் உட்பட எங்கள் கட்சியின் பெண் எம்.பி.க்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இன்று நமது அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அமைதியான முறையில் பேரணியாக புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் கட்சி பெண்கள். எதிர்ப்பு தெரிவிப்பதற்கான நமது ஜனநாயக உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம். டெல்லி போலீசார் எங்களிடம் கொடூரமாக நடந்து கொண்டனர். சில துணை ராணுவ வீரர்களும் இருந்தனர். என்னையும் மற்றவர்களையும் இழுத்துச் சென்றார்கள். அவர்கள் கொடூரமான சக்தியைப் பயன்படுத்தினார்கள். ஏறக்குறைய பத்து பேர் என்னைத் தூக்கிச் சென்று என்னையும் மற்றவர்களையும் ஒரு பேருந்தில் தள்ளினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். 60 முதல் 70 போலீசார் வரை அங்கு இருந்தனர். தண்ணீர் தர ஒரு மணி நேரம் மறுத்தனர். நாங்கள் தண்ணீர் வாங்க முயன்றோம் ஆனால் அவர்கள் வாட்டர்வாலாவை மிரட்டி வெளியே அனுப்பினர். பெண் எம்.பி.யாக இருந்தாலும் சரி, பெண் அல்லது எந்த அரசியல் கட்சியின் எம்.பி.யாக இருந்தாலும் சரி, இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இது நாம் விரும்பும் ஜனநாயகம் அல்ல.
உங்கள் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது?
என் ஆடைகளை போலீசார் கிழித்தெறிந்தனர். நேற்றும் அவ்வாறே செய்தார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதற்காக போராட்டம் நடத்துகிறோம்? எந்த அடிப்படையும் இல்லாமல் எங்கள் தலைவரை (ராகுலை) அழைக்கிறீர்கள். ஒரு சிறு குழந்தை கூட PMLA சட்டத்தை புரிந்துகொள்கிறது… உங்களுக்கு திட்டமிடப்பட்ட குற்றம் தேவை. சில புலனாய்வு அமைப்பு FIR பதிவு செய்ய வேண்டும். திட்டமிட்ட குற்றம் என்ன என காங்கிரஸ் கடந்த மூன்று நாட்களாக கேள்வி எழுப்பி வருகிறது. எந்த நிறுவனம் எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது? FIR எங்கே? எப்ஐஆர் நகலை எங்களுக்குக் காட்டுங்கள். குறைந்தபட்சம் அவருக்கு (ராகுலுக்கு) கொடுங்கள். எனவே எந்த அடிப்படையும் இல்லாமல் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறீர்கள், ED ஐ உங்கள் மடி நாயாக பயன்படுத்துகிறீர்கள். அவரது தாயார் (சோனியா காந்தி) மருத்துவமனையில் உள்ளார். அவர்களுக்கு உடம்பு சரியில்லை. ஒரு மகன் அவர்களைப் போய்ப் பார்த்துக் கொள்ள முடியாது. இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமா? அவர்கள் இன்று எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்துள்ளனர்.
அந்த வீடியோவையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காங்கிரசை விடுங்கள், எந்த அரசியல் கட்சியும் ஜனநாயகத்தின் உயிர்நாடி. அப்படி கட்சி அலுவலகத்தில் நுழைய முடியாது. எனது பதவி எனது கண்ணியம், எனது கட்சியின் கண்ணியம். அவர்கள் எப்படி எங்கள் அலுவலகத்திற்குள் நுழைகிறார்கள்?
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பிறகு எங்கு அழைத்துச் செல்லப்பட்டீர்கள்?
அவர்கள் எங்களை நரேலா வெளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நீங்கள் இன்னும் ஸ்டேஷனில் இருக்கிறீர்களா?
இப்போதுதான் வீட்டை அடைந்தேன். இரவு 11 மணிக்குத்தான் எங்களை விட்டுச் செல்வார்கள் என்று அவர்கள் (காவல்துறையினர்) கூறியதால் நாங்கள் அவர்களுடன் சண்டையிட்டோம். மாலை 6 மணிக்குப் பிறகு பெண்களை காவலில் வைக்க முடியாது என்று அவர்களிடம் கூறினோம். நாங்கள் புறப்படுவோம்…நீங்கள் விரும்பினால், பலத்தைப் பயன்படுத்தி எங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இந்த சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளீர்களா?
மக்களவையில் எங்கள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மக்களவை சபாநாயகரிடம் இது குறித்து எடுத்துரைத்துள்ளார். நாளைக்கு புகார் கொடுக்கலாம்னு யோசிக்கிறோம். எங்கள் ராஜ்யசபா எம்பியான ஜெபி மாதரும் நானும் நேற்றும் போலீசாரால் தாக்கப்பட்டோம். இந்த மாதிரியான அடக்குமுறைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் காங்கிரஸ்காரர்கள்.
ஆங்கிலேயர்களின் கொடூரப் படையை எதிர்த்துப் போராடிய வரலாறு நமக்கு உண்டு. அவர்களின் தோட்டாக்களுக்கு நெஞ்சைக் காட்டினோம். இது ராகுல் காந்தியோ, என்னோ, காங்கிரஸ் கட்சியோ பற்றிய கேள்வி அல்ல. இந்த புல்டோசர் ராஜ் யாரையும் எதையும் செய்ய முடியும். அவர்கள் நாளை எந்த ஊடக நிறுவனத்திலோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திலோ கூட நுழையலாம். எனவே இந்த போராட்டம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை காக்க. இது காங்கிரஸுக்கோ, ராகுலுக்கோ அல்ல.
இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை போராடுவோம். தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை. நாளை, பாஜகவைச் சேர்ந்த யாரேனும் அல்லது பாஜக மூத்த தலைவர் அல்லது அமைச்சரின் உறவினர்கள் மீதும் புகார் அளிக்கலாம். காங்கிரஸ் பாரத யாத்திரை மேற்கொள்ளப் போகிறது என்பதற்காக இதையெல்லாம் செய்கிறீர்கள். அந்த யாத்திரைக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார். அதானிக்கு மின் உற்பத்தி நிலையத்தை வழங்குமாறு இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப நினைக்கிறார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.