பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பேசிய, ‘பாலியல் துன்புறுத்தலால்’ பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைக் கேட்டு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக, டெல்லி போலீசார், அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
“காஷ்மீரில் அவர் ஆற்றிய உரையில் கற்பழிக்கப்பட்ட சில அறியப்படாத பெண்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த பெண்களின் விவரங்களைக் கோரி நாங்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம், இப்போது அதைப் பற்றி அவரிடம் விசாரிப்போம், ”என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
“காஷ்மீரில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில அறியப்படாத பெண்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த பெண்களின் விவரங்களைக் கோரி நாங்கள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். இப்போது அதைப் பற்றி அவரிடம் விசாரிப்போம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி என்ன பேசினார்?
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
“நான் நடந்து செல்லும் போது, நிறைய பெண்கள் அழுது கொண்டிருந்தார்கள்… அவர்களில் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக என்னிடம் சொன்னார்கள், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர், அவர்கள் தங்கள் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டதாக சிலர் சொன்னார்கள். நான் அவர்களிடம் கேட்டபோது நான் காவல்துறையிடம் சொல்ல வேண்டும், அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் எனக்கு தெரிய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் நான் காவல்துறையிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் இன்னும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று சொன்னார்கள்.” என்று ராகுல் காந்தி பேசினார்.
பாரத் ஜோடோ யாத்ராவின் போது பேசிய, பாலியல் துன்புறுத்தலால்' பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக, டெல்லி சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் இல்லத்திற்கு வந்தார்.
ராகுல் காந்தி இல்லத்திற்கு வந்த டெல்லி சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு காவல் ஆணையர் எஸ்.பி ஹூடா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது: “ராகுல் காந்தியிடம் பேசுவதற்காக இங்கு வந்துள்ளோம். ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் ராகுல் காந்தி அறிக்கை ஒன்றை அளித்தார். யாத்திரையின் போது பல பெண்களை சந்தித்ததாகவும், அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தன்னிடம் கூறியதாகவும்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அவரிடமிருந்து விவரங்களைப் பெற முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.
இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, பாரத் ஜோடோ யாத்ராவின் போது அவரது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்ற கருத்து அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை மற்றும் 45 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு திடீர் அவசரம் ஏன் என கேள்வி” எழுப்பி டெல்லி காவல்துறையின் நோட்டீஸுக்கு நான்கு பக்க முதற்கட்ட பதிலை அனுப்பினார்.
ஐந்து நாட்களில் மூன்றாவது முறையாக டெல்லி போலீஸ் குழு அவரது கதவைத் தட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் 10 புள்ளிகள் கொண்ட பதிலை அளித்தார். ஜனவரி 30-ம் தேதி அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக டெல்லி போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்க 8 முதல் 10 நாட்கள் அவகாசம் கோரினார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.