/indian-express-tamil/media/media_files/6TDQ78yVBBzK3wg9DYBP.jpg)
4 மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதன் பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை சிறப்புப் பிரிவு கண்காணித்து வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில், ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் மற்றும் 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Delhi Police seize cocaine and marijuana, worth more than Rs. 5000 crore in biggest drug bust
இதுகுறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தெற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் இருந்து சிறப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நான்கு பேரை போதைப்பொருளுடன் கைது செய்தனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை 5000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும்.” என்று கூறினார்.
"பண்டிகைக் காலம் என்பதால், போதைப்பொருள் தேவை அதிகமாகியுள்ளது. இவை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) விநியோகிக்கப்பட இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பிறகு, சிறப்புப் பிரிவு குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். போதைப்பொருள்-பயங்கரவாத கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
“இந்த போதைப் பொருட்கள் தென் அமெரிக்காவிலிருந்து, மத்திய கிழக்கு வழியாகவும், கஞ்சா தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கும் வந்தது. பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவை வந்த வழித்தடங்களில் முழுமையான விசாரணை நடந்து வருகிறது” என்று விஷயத்தை அறிந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
முக்கிய குற்றவாளியான வசந்த் விஹாரைச் சேர்ந்த துஷார் கோயல் (40) என்பவருக்குச் சொந்தமான பப்ளிகேஷன் தொழிற்சாலையில் இந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவால் அவரது தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அந்த இடத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.