கடுமையான இருமல், வலியால் அழும் குழந்தைகள் என- கிளினிக் முழுவதும் நிரம்பி வழிகிறது. மதியம், கிளினிக்கின் காத்திருப்புப் பகுதியில் உள்ள ஒரே பெஞ்ச் எடுக்கப்பட்டு, நோயாளிகள் இப்போது மருந்துகளின் அட்டைப்பெட்டிகளில் அமர்ந்துள்ளனர்.
கடந்த வாரம் தலைநகரின் மிகவும் மாசுபட்ட பகுதியான - முண்ட்காவில் உள்ள பக்கர்வாலா ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக் தான் இது.
இங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) அபாயகரமான அளவு 400ஐத் தொட்டது.
மேற்கு தில்லியில் உள்ள தொழில்துறைப் பகுதியான முண்ட்கா, அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 6 க்கு இடையில்- ஏழு நாள் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 446.43 ஐ பதிவு செய்தது
நவம்பர் 5 அன்று, அதிகபட்சமாக 480 ஐ தொட்டது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் படி, 201 முதல் 300 வரையிலான காற்றின் தரக் குறியீடு (AQI) “மோசம்”, 301-400 “மிகவும் மோசமானது”. 401-450 என்பது "கடுமையானது" மற்றும் அதைவிட உயர்ந்த அளவு "கடுமையான பிளஸ்" பிரிவில் உள்ளது.
மொஹல்லா கிளினிக்கிற்குள் இப்போது கூட்டம் அதிகமாகிவிட்டது. இதில் பெரும்பாலான நோயாளிகள் அருகிலுள்ள சேரி காலனியில் வசிப்பவர்கள், பெரும்பாலும் முண்ட்கா தொழில்துறை பகுதியில் அல்லது தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள் மற்றும் வீட்டு வேலை செய்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/c9Jky6v7erpnN1zME9EJ.jpg)
உள்ளே, டாக்டர் அம்ருதா நாடார் ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதிக்கிறார், மருந்துகளை பரிந்துரைக்கும் முன், அவரது நர்சிங் அசிஸ்டெண்டிடம் அறிகுறிகள் - எடை மற்றும் ரத்த அழுத்தம் - ஆகியவற்றைக் குறிப்பெடுக்கச் சொல்கிறார்.
பெரும்பாலான நோயாளிகள் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் வருகிறார்கள்… இப்போது ஐந்து-ஆறு நாட்களாக இப்படித்தான் இருக்கிறது. இந்த கிளினிக்கில் வழக்கமாக ஒரு நாளைக்கு 80-100 நோயாளிகள் வருகிறார்கள்; இப்போது நாங்கள் சுமார் 150-160 ஐப் பார்க்கிறோம், என்கிறார் டாக்டர் நாடார்.
இவர் முண்ட்காவில் உள்ள மற்றொரு மொஹல்லா கிளினிக்கிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு இந்த கிளினிக்கிற்கு மாற்றப்பட்டார்.
அவர்களில் பலர் COPD மற்றும் ஆஸ்துமா நோயாளிகளாக இருந்தாலும், அவர்களின் நிலை மோசமடைந்து வருவதை நாம் இப்போது காண்கிறோம். காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாச பிரச்சனைகளுடன் வரும் பல புதிய நோயாளிகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம்.
/indian-express-tamil/media/media_files/ZA5xi0BTycvIW9jk3qMy.jpg)
மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு, bronchodilators கொடுக்கிறோம். இது நுரையீரலில் உள்ள தசைகளைத் தளர்த்தி, சுவாசப்பாதைகளை விரிவுபடுத்துவதன் மூலம் சுவாசத்தை எளிதாக்கும் ஒரு வகை மருந்தாகும்.
கடந்த வாரம் 50 நோயாளிகளுக்கு bronchodilators பரிந்துரைத்தேன். கடுமையான பாதிப்பு உள்ளோர், சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன என்று டாக்டர் அம்ருதா கூறினார்.
/indian-express-tamil/media/media_files/GcZWNbkSa8muRi9NG5cR.jpg)
இன்று அவரது நோயாளிகளில் ஒருவர் ஜெயேஷ் லால். 12 வயதாகும் சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், பேச முடியாமல் தவித்துள்ளார்.
சிறுவனின் தாய் தேவி கூறுகையில், ஜெயேஷ் கடந்த 3-4 நாட்களாக தூங்க முடியாமல் சிரமப்படுகிறார். நான் அவனை ஒரு பூசாரியிடம் அழைத்துச் சென்றேன்... எங்கள் பகுதியில் உள்ள மற்ற குழந்தைகள் குணமடைந்தனர், ஆனால் அவரது இருமல் நிற்கவில்லை, அதனால் நான் அவரை இங்கு அழைத்து வந்தேன், என்று கூறுகிறார்.
தேவி முண்ட்காவில் சாலையோரக் கடையை நடத்தி வருகிறார், அங்கு அவர் பானைகள் மற்றும் பாத்திரங்களை விற்கிறார்.
வெளியில் காத்திருந்த 20 வயது கல்லூரி மாணவி தமன்னா, இரண்டு வாரங்களுக்கு முன்பு பருவம் மாறியதில் இருந்து தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது, ஆனால் இப்போது அது மோசமாகிவிட்டது. எனக்கு இப்போது பயங்கரமான தலைவலி உள்ளது. ஆரம்பத்தில், இது ஒரு சாதாரண காய்ச்சல் என்று நான் நினைத்தேன், ஆனால் இது போகவில்லை, என்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக, சமையல் வேலைக்கு செல்லும் 45 வயதான அஷ்மா கட்டூன், தானும் இருமல், சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டதாக கூறுகிறார்.
எனக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது, அது எனக்கு வேலை செய்வதை மிகவும் கடினமாக்கியுள்ளது. இ-ரிக்ஷாவில் பயணிக்கும்போது தலை வெடித்துவிடும் போல் இருக்கும். காற்று மிகவும் மோசமாக உள்ளது, என்று அவர் கூறுகிறார்.
Read in English: Inside a mohalla clinic in Delhi’s most polluted neighbourhood: cough, cold and headaches are common complaints
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“