மாலை 2.30 மணி நேர நிலவரப்படி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஆம் ஆத்மி கட்சி 61 இடங்களில் முன்னிலையில் . பாஜக 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் இன்னும் தனது கணக்கை திறக்கவில்லை.
டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் தங்களுது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அதில் சில வற்றை இங்கே காணலாம்.
இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்த டெல்லி மக்கள் - பிரஷாந்த் கிஷோர்
டெல்லி தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் ஆம் ஆத்மி கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆம் ஆத்மி கட்சிக்கான தேர்தல் வியூகங்களை வகுத்ததில் பிரஷாந்த் கிஷோருக்கு முக்கிய இடம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்ததற்காக' டெல்லி மக்களுக்கு நன்றி என்று பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் எதிரொலிக்கும் பா.சிதம்பரம் : ஆம் ஆத்மி வென்றது, ஏமாற்று, சித்து வேலைகள் தோற்றது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாழும் டெல்லி மக்கள் பாஜகவின் பிளவுபடுத்தும், ஆபத்தான அரசியலை தோற்கடித்துள்ளனர்.
2021, 2022 ஆம் ஆண்டுகளில் பிற மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்மாதிரியாக விளங்கிய டெல்லி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்
வகுப்புவாத அரசியலை மக்கள் நிராகரித்தனர்: மு.க ஸ்டாலின்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையிடத்தில் முன்னிலை இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வகுப்புவாத அரசியலை மக்கள் நிராகரிப்பர் என்பதற்கான நிரூபணம் தான் இந்த தேர்தல் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் கூட்டாட்சி உரிமைகள், பிராந்திய வளர்ச்சியும் தான் இந்தியாவை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு போதுமான நம்பிக்கையை கொடுக்கவில்லை- கவுதம் கம்பீர் : டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஒப்புக் கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர் ,"தேர்தல் முடிவுகளை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டெல்லி மக்களுக்கும் வாழ்த்துக்கள். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால், டெல்லி மக்களை நம்ப வைக்க முடியவில்லை . அரவிந்த் கெஜ்ரிவால் தலைமயின் கீழ் டெல்லி வளர்ச்சியடையும் என்று நம்புகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: அரவிந்த் கெஜ்ரிவாலை நான் வாழ்த்துகிறேன். மக்கள் பாஜகவை நிராகரித்துள்ளனர். வளர்ச்சி மட்டுமே செயல்படும், CAA, NRC மற்றும் NPR நிராகரிக்கப்படும்.
வெறுப்பு அரசியலுக்கு முற்றுபுள்ளி: திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். வெறுப்பு அரசியலுக்கு மக்களிடம் பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து ஷர்மிஸ்தா முகர்ஜி: காங்கிரஸ் உயரக் குழு தாமதம் காங்கிரஸ் தோல்வியை உறுதி செய்தது என்று கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தில்லி மஹிலா காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததால் தோல்வியின் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
சரத் பவார்: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 'பெரும் வெற்றியை' அடைந்ததற்காக அரவிந்த் கெஜரிவால் ஜி மற்றும் ஆம் அட்மி கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையிடத்தில் முன்னிலை இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வகுப்புவாத அரசியலை மக்கள் நிராகரிப்பர் என்பதற்கான நிரூபணம் தான் இந்த தேர்தல் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் கூட்டாட்சி உரிமைகள், பிராந்திய வளர்ச்சியும் தான் இந்தியாவை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.