டெல்லி தேர்தல் முடிவு எதிரொலி: தலித் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தடுமாறிய பா.ஜ.க

டெல்லி மக்கள் தொகையில் 36 தொகுதிகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமான தலித் மக்கள் வசிக்கின்றனர். 12 தனித் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi BJP

டெல்லியில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனாலும், தலைநகரில் தலித் வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.க-வினர் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. 12 தனித் தொகுதிகள் கொண்ட டெல்லியில், 8 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், தலித் வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் மற்ற இடங்களிலும், பா.ஜ.க பெரும்பாலும் தோல்வியை தழுவியது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Delhi seats with high Dalit numbers, BJP is still struggling

 

Advertisment
Advertisements

டெல்லி மக்கள் தொகையில் 36 தொகுதிகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமான தலித் மக்கள் வசிக்கின்றனர். இதில், பா.ஜ.க வென்ற 21 இடங்களில், 8 தொகுதிகளில் தலித் மக்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றனர். மேலும், தலித் மக்கள் 25 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் மூன்று இடங்களில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது.

மற்றொரு புறம், தலித் மக்கள் தொகை 20 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் 10 தொகுதிகளிலும், 25 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. குறிப்பாக, திரிலோக்புரி தொகுதியில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் தலித் மக்கள் வசிக்கும் நிலையில், இங்கு பா.ஜ.க-வின் வெற்றி வித்தியாசம் வெறும் 392 வாக்குகள் மட்டுமே இருந்தது.

2020 சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது, தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் 36 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் ரோஹ்தாஸ் நகரில் மட்டுமே பா.ஜ.க வென்றது. அதே தொகுதியை பா.ஜ.க மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இங்கு 19.9 சதவீதம் தலித் மக்கள் வசிக்கின்றனர்.

பவானா, சுல்தான்பூர் மஜ்ரா, மங்கோல் பூரி, கரோல் பாக், படேல் நகர், மதிப்பூர், தியோலி, அம்பேத்கர் நகர், திரிலோக்புரி, கோண்ட்லி, சீமாபுரி, கோகல்பூர் உள்ளிட்ட 12 இடங்களை ஆம் ஆத்மி கடந்த முறை வென்றது.

தேர்தல் ஆணையம் தரவுகளின்படி, டெல்லியில் உள்ள மக்கள்தொகையில், பின்வரும் தொகுதிகளில் தலித் மக்கள் அதிகப்படியாக வசிக்கின்றனர். அந்த வகையில், சுல்தான்பூர் மஜ்ரா (44%), கரோல் பாக் (41%), கோகல்பூர் (37%), மங்கோல் பூரி (36%), திரிலோக்புரி (32%), அம்பேத்கர் நகர் (31%), சீமாபுரி (29%), மதிப்பூர் (29%), 727%), பவானா (24%) மற்றும் படேல் நகர் (23%) ஆகிய இடங்களில் தலித் மக்கள் அதிகமாக உள்ளனர்.

இது தவிர, ராஜீந்தர் நகர் (22%), வசீர்பூர் (22%), துக்ளகாபாத் (22%), பல்லிமாறன் (22%), நங்லோய் ஜாட் (21%) மற்றும் நரேலா (21%) போன்ற தொகுதிகளிலும் கணிசமான அளவில் தலித் மக்கள் உள்ளனர்.

மற்ற 18 தொகுதிகளில் தலித்துகள், மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.

இந்த முறை, தனித்தொகுதிகளான மங்கோல் பூரி, திரிலோக்புரி, மடிபூர் மற்றும் பவானா ஆகிய இடங்களைத் தவிர, 20 சதவீதத்திற்கும் அதிகமான தலித் மக்கள் வசிக்கும் வசீர்பூர், ராஜிந்தர் நகர், நங்லோய் ஜாட் மற்றும் நரேலா ஆகிய இடங்களை பா.ஜ.க வென்றது. இவை அனைத்திலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

ரோஹினி (6%), கரவால் நகர் (8%), லக்ஷ்மி நகர் (9%), காந்தி நகர் (11%), பதர்பூர் (12%), விஸ்வாஸ் நகர் (13%) மற்றும் கோண்டா (13%) ஆகிய தலித் மக்கள் தொகை குறைவாக உள்ள தொகுதிகளில் ரோஹ்தாஸ் நகரைத் தவிர்த்து, கடந்த முறை பா.ஜ.க வென்ற எட்டு இடங்களும் கிடைத்தன.

1998 முதல் 2013-ஆம் ஆண்டு வரை முதலில் காங்கிரஸ் கட்சியினருக்கு, பின்னர் ஆம் ஆத்மி கட்சிக்கும் தலித் மக்கள் வாக்களித்ததாக நம்பப்படுகிறது.

1998 தேர்தலில் பாஜக 15 இடங்களில் வெற்றி பெற்றபோது, ​​அதில் ஒன்று கூட தனித் தொகுதியாக இல்லை. 2003 இல், அதன் செயல்திறனை 20 இடங்களாக மேம்படுத்தியபோது, ​​இரண்டு தனித் தொகுதிகள் கிடைத்தன. 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டிலும், தனித் தொகுதிகளில் அதன் எண்ணிக்கை தலா இரண்டாக இருந்தது.

தலித்துகள் மத்தியில் அதன் ஆதரவை வலுப்படுத்த, 12 தனித் தொகுதிகளை தவிர்த்து இரண்டு பொதுத் தொகுதிகளிலும் தலித் வேட்பாளர்களை பா.ஜ.க களமிறக்கியது. ஆனால், இதில் கணிசமான அளவில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

டெல்லி தேர்தலுக்கு முன்னதாக, தேசிய தலித் அமைப்புகளின் தலைவர் அசோக் பார்தி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். அதன்படி, ஆம் ஆத்மி அரசு அறிவித்த சில திட்டங்களால், அக்கட்சி தலித் தொகுதிகளில் வாக்குகளை பெற்றது என இதில் தெரியவந்தது.

"குறிப்பாக தலித் பெண்கள் மத்தியில் இந்தத் திட்டங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. மேலும், தலித்துகள் கல்வி முன்னேற்றத்தை விரும்பும் சமூகம் என்பதால், அரசு பள்ளிகள் மற்றும் சுகாதார மேம்பாடு உள்ளிட்டவை அவர்களால் பாராட்டப்பட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டில் உள்ள அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளின் ஒரு பகுதியாக இல்லை என்பதை வாக்காளர்களிடையே நம்ப வைக்க முடிந்தது" என அவர் தெரிவித்துள்ளார். 

"தலித் மக்களிடையே பா.ஜ.க-விற்கு முற்றிலும் ஆதரவு இல்லை எனக் கூற முடியாது. நான்கு தனித் தொகுதிகளில் பா.ஜ.க வென்றுள்ளது. தலித் மக்களுக்கு பா.ஜ.க-வினர் எதிரானவர்கள் என காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது" என பா.ஜ.க எம்.பி யோகேந்தர் சந்தோலியா தெரிவித்துள்ளார்.

- Deeptiman Tiwary, Jatin Anand

Bjp Aam Aadmi Party

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: