டெல்லியில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 300 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அதிகாரி, ” மரணமடைந்தவர்கள் வயது முதிர்ந்தவர்கள். மேலும் அவர்கள் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் டெல்லி
இந்நிலையில் மரணமடைந்த இருவருக்கும், சிறுநீரகம் மற்றும் இதய நோய் பாதிப்பு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வயதானவர்கள் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும் என்று டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் XBB.1.16 என்ற வேரியண்ட் தற்போது அதிகமாக பரவுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் 204 பேர் இந்த வேரியண்டால் பாதிக்கபட்டனர். பிப்ரவரி மாதத்தில் 138 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஜனவரி மாதத்தில் வெறும் இருவர் மட்டுமே இந்த வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 105 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர். மேலும் 660 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil