டெல்லி பட்டினிச் சாவு ( Delhi starvation deaths )
டெல்லி பட்டினிச் சாவு : டெல்லி மந்தவளி பகுதியில் ஒரு சிறிய அறையில் மூன்று பெண் குழந்தைகளுடன் கூடிய ஒரு குடும்பம் வசித்து வந்தது.
ஜூலை 26ம் தேதி, அவ்வீட்டின் உரிமையாளர் அக்குழந்தைகளின் அப்பாவினை பார்க்க வீட்டிற்குள் சென்றிருக்கிறார். வீட்டிற்குள் சென்ற போது மூன்று பெண் குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
அவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்த போது மூவரும் உயிரிழந்துவிட்டனர் என்று அறிவித்தனர் மருத்துவர்கள்.
மான்சி (8), பரோ (4), ஷிகா (2) இம்மூன்று குழந்தைகளுக்கும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இக்குழந்தைகள் வெகு நாட்கள் உணவில்லாமல் தவித்து வந்திருப்பதையும், பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.
இக்குழந்தைகளின் சாவு குறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியா கூறியதைப் பற்றி படிக்க
டெல்லி பட்டினிச் சாவு - அக்குழந்தைகளின் அம்மா மனநிலை பற்றி மருத்துவர்கள் கருத்து
அக்குழந்தைகளின் அம்மா மனநிலை சரியில்லாதவர் மேலும் அக்குழந்தைகளின் அப்பா, இக்குழந்தைகள் இறந்த நாளிலிருந்து தலைமறைவாக உள்ளார். அக்குழந்தைகளுக்கு அவர் விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறை மத்தியில் நிலவி வருகிறது.
டெல்லி பட்டினிச் சாவு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் பீனா சிங்கினை மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அம்மா பீனா சிங்கிற்கு இண்டெல்க்சுவல் டிசாடர் ( intellectual disorder ) பிறப்பிலிருந்தே இருக்கிறது என்றும், அவரை கவனித்துக் கொள்ளவே ஒருவர் தேவைப்படுவர் என்றும் அவரை பரிசோதித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளவோ குழந்தை பெற்றுக் கொள்ளவோ சரியான மனநிலையில் இவர் ஒரு போதும் இருந்ததில்லை. இவருக்கு திருமணம் செய்து வைத்ததே தவறு என்றும் அம்மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
பீனா சிங்கிற்கு இருக்கும் குறைகளை களைய இது நாள் வரை அவரை மருத்துவமனைக்கே யாரும் அழைத்துச் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.