Advertisment

தாத்தாவின் ஓய்வூதிய பணத்தை வீணடித்த 15 வயது பேரன்: பப்ஜியால் நடந்த சோகம்

வங்கி கணக்கில் வெறும் ரூ .275 மட்டும் மீதமிருப்பதாக வந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

author-image
WebDesk
New Update
தாத்தாவின் ஓய்வூதிய பணத்தை வீணடித்த 15 வயது பேரன்: பப்ஜியால் நடந்த சோகம்

ஆன்லைன் விளையாட்டான பப்ஜி (PUBG-Player Unknown's Battlegrounds) இல் தனது தாத்தாவின் மொத்த ஓய்வூதிய பணத்தையும் செலவிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக உள்ளது என்ற காரணத்தால் மத்திய அரசு சில நாட்களுக்கு முன் PUBG விளையாட்டை தடை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

கடந்த மே மாதத்தில், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஒருவர் (65 வயது) தனது வங்கி கணக்கில் வெறும் ரூ .275 மட்டும் மீதமிருப்பதாக வந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, டெல்லி திமர்பூர்  காவல் நிலையம் மற்றும் வடக்கு மாவட்ட சைபர் செல்லிடம்  புகாரளித்தார். புகாரில், தனது அனுமதியின்றி தனது வங்கிக் கணக்கில் இருந்த தொகை மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெர்வித்தார்.

வழக்கு சைபர் சைபர் கிரைம் செல்லுக்கு  இந்த மாதம் மாற்றப்பட்டது. ​​ விசாரணையில், அவரின் 15 வயது பேரன் ஓய்வூதியக் கணக்கிலிருந்து ரூ .2,34,497-ஐ , ஆன்லைன் விளையாட்டான பப்ஜிக்குப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

மார்ச் 7 மற்றும் மே 8 க்கு இடையில் முதியவரின் டெபிட் கார்டிலிருந்து ஒரு பேடிஎம் கணக்கிற்கு ரூ .2,34,497 மாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது . கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன்," சில மாதங்களாக பப்ஜி விளையாடுவதாகவும், விளையாட்டு தொடர்பான சில அம்சங்களை  வாங்க விரும்பியதால் தாத்தாவின் டெபிட் கார்டைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

அவர் தனது தாத்தாவின் தொலைபேசியிலிருந்த OTP  தொடர்பான குறுஞ்செய்திகளை நீக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

பப்ஜி விளையாட்டை  மத்திய அரசு தடை செய்யப்படுவதற்கு முன்பு அவர் ‘ஏஸ் லெவல்’ தரத்தை (Ace rank )அடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment