டெல்லி முதல் துபாய், பாங்காக் வரை: உளவு பார்த்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு பாக்., உளவுத்துறை நிதி கொடுத்தது எப்படி?

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி ஆய்வாளர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி ஆய்வாளர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

author-image
WebDesk
New Update
Delhi to Dubai & Bangkok

டெல்லி முதல் துபாய், பாங்காக் வரை: உளவு பார்த்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு பாக்., உளவுத்துறை நிதி கொடுத்தது எப்படி?

உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், ஹரியானா, டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. (National Investigation Agency) அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனையின் முடிவில், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இந்தியாவிற்குள் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய முறைகளை என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சி.பி.ஆர்.எஃப்-ன் உதவி துணை ஆய்வாளர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு மே 27 அன்று என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானிய உளவு அதிகாரிகள் (PIOs) இந்தியாவில் உளவுக் காரியங்களுக்குப் பணம் அனுப்பப் பயன்படுத்திய பெரியளவிலான நிதியியல் வலைப்பின்னல் வெளிப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மூலம் இந்தப் பணம் எவ்வாறு இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்த குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏ. தயாரித்து வருகிறது.

பணப் பரிவர்த்தனையின் 3 வழிகள்:

1. வர்த்தகத்தின் மூலம் பணமோசடி (Trade-based money laundering):

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், நகைகள் போன்ற பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன. புலவாமா தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து நேரடியாகப் பொருட்களை இறக்குமதி செய்ய 200% வரி விதிக்கப்பட்டது. இதனால், இந்த துபாய் புரோக்கர்கள் மூலம் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள சில்லறை வியாபாரிகளிடம், தங்கள் நிறுவன கணக்கிற்குச் செலுத்தாமல், தனி நபர்களுக்கு UPI மூலம் பணத்தை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பணப்பரிவர்த்தனைகள் ரூ.3,500 முதல் ரூ.12,000 வரை சிறிய அளவில் இருந்ததால், கடை உரிமையாளர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல், இது பொருட்களுக்கான கட்டணம் என நினைத்து பணத்தை அனுப்பியுள்ளனர். இந்த சிறிய தொகைகள் உண்மையில், உளவு காரியங்களுக்கான ரகசிய தகவல்களை அளித்த நபர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

2. ஹவாலா (Hawala) நெட்வொர்க்:

மோதி ராம் ஜாட்டின் கணக்குகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பணப் பரிவர்த்தனை வழியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலர் வங்காக் (Bangkok) நகரில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபர்கள் சுற்றுலாப் பயணிகளை அணுகி, மிகக் கவர்ச்சிகரமான மாற்று விகிதத்தில் தாய்லாந்து பணத்தைப் பெற்று, அதற்குச் சமமான இந்திய ரூபாயை சுற்றுலாப் பயணிகளின் இந்திய வங்கிக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். இதன் மூலம், முறையான அந்நியச் செலாவணி வழிகளைத் தவிர்த்து, உளவுக் காரியங்களுக்கான ரகசிய பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர்.

3. சட்டவிரோத உள்நாட்டு பணப் பரிவர்த்தனை நெட்வொர்க்:

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மொபைல் போன் விற்பனையாளர்கள், தங்கள் கடைகளில் பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குகின்றனர். பொதுவாக, தினசரி கூலி வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பணம் அனுப்புவதற்காக இந்த சேவையைப் பயன்படுத்துவார்கள்.

சட்டப்பூர்வமான பணப் பரிவர்த்தனைகள் OTP மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இருப்பினும், சில கடைக்காரர்கள், கூடுதல் பணம் பெற்றுக்கொண்டு, தங்கள் தனிப்பட்ட கணக்குகள் மூலம் பணத்தை மாற்றியுள்ளனர். இதில், பணம் அனுப்புபவரின் அடையாளம் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த வழியைப் பயன்படுத்தி, பாகிஸ்தானிய உளவுத்துறை அதிகாரிகள், தங்கள் அடையாளம் தெரியாமல் மோதி ராம் ஜாட்டிற்குப் பணம் அனுப்பியுள்ளனர்.

மோதி ராம் ஜாட் தனது மற்றும் தனது மனைவி கணக்குகள் மூலம் அக்டோபர் 2023 முதல் ஏப்ரல் 2025 வரை பாகிஸ்தானிய உளவுத்துறை முகவர் 'சலீம் அகமது'-விடமிருந்து ரூ.1.90 லட்சம் பெற்றுள்ளார். இந்த ரகசியப் பணப்பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த, NIA 8 மாநிலங்களில் 15 இடங்களில் சோதனை நடத்தி பலரிடம் விசாரணை செய்துள்ளது. இந்தச் சோதனைகளின் மூலம், பாகிஸ்தானிய உளவுத்துறை இந்தியாவுக்குள் பணம் அனுப்புவதற்காகப் பயன்படுத்திய இந்த சிக்கலான நிதியியல் நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Crpf

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: