உத்தரப் பிரதேசத்தில் இருந்து உயிரியல் பட்டதாரி ஒருவர் தனது கனவுகளைத் துரத்துவதற்காக டெல்லியில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்றார்; சிவில் சர்வீசஸ் கோச்சிங்கிற்கு அமைதியாக சென்ற கேரளாவைச் சேர்ந்த ஜேஎன்யு ஆராய்ச்சி மாணவர்; தெலுங்கானாவில் உள்ள தனது பெற்றோரை தவறவிட்ட ஒரு ஐஏஎஸ் ஆர்வலர் என 3 பேர் இந்தத் துயரத்தில் சிக்கினர்.
சனிக்கிழமை மாலை, இந்த மூன்று பேரின் வாழ்க்கையும், அவர்களின் கனவுகளும், டெல்லியின் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள பிரபலமான ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தின் அடித்தளத்தில் முடிந்துப்போனது.
பலத்த மழை மற்றும் பயிற்சி மையத்தின் அடித்தளத்தை மூழ்கடித்த உடைந்த வடிகால் நீர் புகுந்து, உத்தரப் பிரதேசத்தின் ஸ்ரேயா யாதவ் (25), கேரளத்தின் நிவின் டால்வின் (28), தெலங்கானாவின் தன்யா சோனி (25) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
காஜியாபாத்தில் ஸ்ரேயாவுடன் தங்கியிருந்த மாமா தர்மேந்திர யாதவ், “ஒருவேளை, அவளுடைய வாழ்க்கை இங்கேயே முடிந்துவிடும் என்று எழுதப்பட்டிருக்கலாம்” என்றார்.
மேலும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் உள்ள பிணவறை முன் ஒரு இரவில் காத்திருந்து சோர்ந்து போன அவர், "அவளுடைய உடலை எங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்" என்றார்.
ஸ்ரேயா அம்பேத்கர் நகரில் உள்ள பர்சாவா ஹாஷிம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பால் கடை நடத்தி வரும் ராஜேந்திர யாதவ் மற்றும் சாந்தி தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. சுல்தான்பூரில் உள்ள கல்லூரியில் உயிரியலில் பிஎஸ்சி முடித்த பிறகு, இந்த ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார் மற்றும் நுழைவுத் தேர்வில் தனது முதல் முயற்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க
ஸ்ரேயா யாதவ்வின் சகோதர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப்பெற்று கலெக்டர் ஆக வேண்டும் என்பதில் ஸ்ரேயா உறுதியாக இருந்தார். அவரின் கல்விச் செலவுக்காக எங்களின் தந்தை வங்கிக் கடன் வாங்கினார்” என்றனர்.
டெல்லியில் உள்ள சவக்கிடங்கில், ஜேஎன்யுவில் இருந்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், நிவின் டால்வின் உடலை அடையாளம் காண காத்திருந்தனர். “அவர் ஐஏஎஸ் பயிற்சிக்கு சேர்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. இன்று காலை தெரிந்து கொண்டோம்,” என்று ஒரு நண்பர் கூறினார், டால்வின் விஷுவல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கேரளாவில் உள்ள மலயாட்டூரில், டால்வினின் குடும்பம் வசிக்கும் இடத்தில், அவரது பெற்றோர் அவரது மரணம் குறித்து கவலைப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், சமஸ்கிருத பல்கலைகழகத்தின் பேராசிரியரான டால்வினின் தாயார் லான்ஸ்லெட், தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சம்பவம் குறித்து அறிந்தார்.
“அவர் தவறவிட்ட அழைப்புகளுக்காக தனது மொபைல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அழைப்புகளில் ஒன்றை அவள் திருப்பி அனுப்பியபோதுதான் அந்த சோகம் அவளுக்குத் தெரியவந்தது” என்றார் நண்பர் ஒருவர்.
டெல்லியிலிருந்து மூன்றாவது தொலைபேசி அழைப்பு, செகந்திராபாத்தைச் சேர்ந்த சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) துணைப் பொது மேலாளரான தன்யா சோனியின் தந்தை விஜய் குமாருக்குச் சென்றது.
அப்போது, குமார், அவரது மனைவி மற்றும் மற்றொரு மகள் ரயிலில் லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்தனர். "தன்யாவுக்கு பெரிய கனவுகள் இருந்தன, மேலும் உந்துதலாக இருந்தாள். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் கோச்சிங் சென்டரில் பணியில் சேர்ந்தார்.
இது குறித்து அவரின் தந்தை, “நாங்கள் அழிந்துவிட்டோம். அவள் இறந்த விதத்தை நினைத்து கலங்குகிறோம். நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை, ”என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“