சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில், 50 வயதான மனோஜ் கதுரியா, மத்திய டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகரில் உள்ள ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்கு முன்னால் வெள்ளம் தேங்கிய சாலையில் தனது காரை ஓட்டிச் சென்றார்.
அவர் அங்கிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இதை செய்த பின் ஒரு நாள் கழித்து, அவர் விளைவுகளை எதிர்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
பயிற்சி மையத்தின் முன்னால், அங்கிருந்த கேட்டையும் தாண்டி தேங்கி இருந்த வெள்ளத்தில், தண்ணீர் தேங்கிய சாலையில் கதுரியா காரை ஓட்டிச் சென்று தண்ணீர் அலையை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மாணவர்கள் சிக்கி இருந்த நிலையில் வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் அதில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
பயிற்சி மையத்தின் மாணவர்களில் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவில், கதுரியா தண்ணீர் தேங்கிய சாலையைக் கடந்து சென்றார். இதனால் தண்ணீரில் வேகம் ஏற்பட்டு பயிற்சி மையத்தின் கேட் இடிந்து விழுந்தது. பின்னர் அந்த கார் மறுமுனை வழியாக சென்றது.
கதுரியா சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினார். அவர் கூறுகையில், சாலையில் எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை. வாகனத்தின் வேகம் மணிக்கு 15 கி.மீ.-ல் சென்றது. அங்கு தண்ணீர் 2.5 அடி உயரத்திற்கு தேங்கி இருந்தது.
பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை , இந்த வழக்கில் கதுரியா உட்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியது. இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப எஃப்.ஐ.ஆரில் பட்டியலிடப்பட்டுள்ள அதே பிரிவுகளின் கீழ் கதுரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் - பிரிவுகள் 105 (கொலைக்கு சமமான செயல், ஆனால் கொலை இல்லை), 115 (2) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், அவரது வாகனமும் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளம் ஏற்பட ஒரு காரணம். வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கதுரியாவின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: Who is the driver of the SUV that drove past coaching centre?
காவல் துறையினரின் கூற்றுப்படி, கதுரியா அவரது கணக்காளரை இறக்கிவிட்டு மையத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.
பயிற்சி மையத்தில் உள்ள அடித்தள கட்டடத்தின் உரிமையாளர்கள் பர்விந்தர் சிங், சரப்ஜித் சிங், ஹர்விந்தர் சிங் மற்றும் தேஜேந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் சகோதரர்கள். இவர்களுடன் கதுரியாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு 14 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“