Advertisment

கலவர பூமியான டெல்லி : நெஞ்சை பதற வைக்கும் படங்கள்

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை தேசிய தலைநகரம் வன்முறையைக் கண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi Violence, CAA protest

Delhi Violence, CAA protest

Delhi Violence : டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் தற்போது வரை போலீஸ்காரர் உட்பட 17 பேர் பலியாகியிருக்கிறார்கள். மாஜ்பூர், குரேஜி காஸ், ஜாப்ரபாத், சந்த்பாக், பஜான்பூரா, கர்டாம்புரி ஆகிய பகுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு, கல் வீச்சு சம்பவங்களால் டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. அதன் படத்தொகுப்பை இங்கே தருகிறோம்.

Advertisment

delhi violence caa protesters வடகிழக்கு டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 150 பேர் காயமடைந்து, ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (படத்தில் : கஜூரி காஸ் பகுதியில் தீ பிடித்த கார்) (படம் - கஜேந்திர யாதவ்)

delhi violence caa protesters வடகிழக்கு டெல்லியில் உள்ள மஸ்பூர்-பப்பர்பூர் மெட்ரோ பகுதியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கல் வீச்சு மற்றும் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. (படம் - கஜேந்திர யாதவ்)

delhi violence caa protesters வடகிழக்கு டெல்லியின் மஸ்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் எந்தத் தடையும் இன்றி வன்முறை தொடர்ந்தது. சாலையில் இரண்டு குழுக்கள் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். (படம் - பிரவீன் கண்ணா)

delhi violence caa protesters வடகிழக்கு டெல்லியில், குறிப்பாக மஸ்பூர், கர்தாம்பூரி, சந்த் பாக் மற்றும் தயால்பூர் பகுதிகளில் கலவர கும்பல்கள் வாகனங்கள், வீடுகள் மற்றும் கடைகளை எரித்தன. (படம் - பிரவீன் கண்ணா)

delhi violence caa protesters பாதைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலவர கும்பல் கலகம் செய்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பிரதான சாலைகளில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். (படம் - பிரவீன் கண்ணா)

praveen khanna, delhi violence caa protesters சிஆர்பிசியின் பிரிவு 144 பாதிக்கப்பட்ட பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் ஆயுதமேந்திய 1,000 போலீஸார், தலைநகரின் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். (படம் - பிரவீன் கண்ணா)

praveen khanna, delhi violence caa protesters ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று வரை தேசிய தலைநகரம் வன்முறையைக் கண்டுள்ளது. இளைஞர் குழுக்கள் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில், தடிகள் மற்றும் குச்சிகளோடு சுற்றித் திரிந்தனர். (படம் - பிரவீன் கண்ணா)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment