Anand Mohan J
டெல்லியில் முகம்மது ஜூபைர் என்ற இஸ்லாமியர் மீது கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து மண்டியிட்ட போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டெல்லி சந்த் பாக் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஜூபைர். கட்டட தொழிலாளியான இவர் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை, தொழுகைக்காக வெளியே சென்ற அவர், குழந்தைகளுக்காக இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திடீரென்று அவரை சூழந்த ஒரு கும்பல், அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. தன்னை தாக்கவேண்டாம் என்று அவர் கெஞ்சிய நிலையிலும் கூட அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றது. ஒருகட்டத்தில், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அவர் தாக்குலுக்கு உள்ளானபோது ராய்ட்டர் போட்டோகிராபர் எடுத்த இந்த போட்டோ, தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜூபைர் கூறியதாவது, ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், சிகிச்சைக்குப்பின் கண்விழித்தேன். தன்னால் என்ன நடந்தது என்பதை யூகிக்க முடியவில்லை ,இந்த போட்டோ தான், அன்றைய வலி நிறைந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது.. அவர்கள் என்னை பயங்கரமாக தாக்கினர். நான் வேண்டாம் என்று கெஞ்சியபின்னர் தான் அவர்கள் என்னை மேலும் கொடூரமாக தாக்கினர். அவர்களில் சிலர், கபில் மிஸ்ராவின் ( டில்லி பா.ஜ., தலைவர்) பெயரை சொன்னார்கள். எனக்கு இதற்குமேல் எதுவும் ஞாபகம் இல்லை. எனது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நம்புகிறேன். அவர்கள் இந்த போட்டோ பார்ப்பதை நான் விரும்பவில்லை. எனக்கு இன்னும் கால்களில் அதிக வலி உள்ளதாக கூறினார்.
டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஜூபைர், இந்தர்புரியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பின் பாதுகாப்பு கருதி, அவர் குடும்பத்துடன் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றுவிட்டார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த ஜூபைரை அவரது சகோதரர், பாதுகாப்பு கருதி நேரில் சென்று சந்திக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்குமாறு ஜூபைரின் சகோதரரிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூற அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
யார் மீது நான் புகார் அளிக்க?. அந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல் மீதா?. நாங்கள் சிறு குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களால் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. நாங்கள் இங்கு வாழ்வதற்காகவே பெரும்போராட்டம் நடத்தி வருவதாக ஜூபைரின் சகோதரர் கூறினார்.
எனக்கும் இந்து நண்பர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் தற்போது எனக்கு நிகழ்ந்த இந்த நிகழ்வு பெரும் வலியை தந்திருப்பதாக முகம்மது ஜூபைர் தெரிவித்ததுமனதை உருக்குவதாக இருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.