scorecardresearch

”கலவரத்தால் பிரிந்தோம்… துயரத்தால் இணைந்தோம்” – டெல்லியில் உறவினர்களை இழந்த குடும்பத்தினர்

இது தொடர்ந்தால் பெற்றவர்கள் தங்களின் பிள்ளைகளையெல்லாம் இழந்து நிற்பார்கள். பாஜக முன்னாள் எம்.எல்.ஏவை உடனே கைது செய்ய வேண்டும் – மகனை இழந்த தந்தை

”கலவரத்தால் பிரிந்தோம்… துயரத்தால் இணைந்தோம்” – டெல்லியில் உறவினர்களை இழந்த குடும்பத்தினர்

Astha Saxena , Jignasa Sinha

Delhi Violence Families of dead say divided in violence : வடகிழக்கு டெல்லியின் மருத்துவமனைகள் எல்லாம் துயரத்தில் மூழ்கியிருக்கிறது. ஆம்… துயரத்திற்கும், இழப்பிற்கும் மத பாகுபாடுகள் கிடையாது.

கலவரத்தில் தன்னுடைய மூத்த மகனை கலவரத்தில் இழந்த ஹரி சிங் சோலான்கி (69) , குரு தேக் பகதூர் மருத்துவமனையின் பிணவறையின் வெளியே அமர்ந்திருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு சென்ற ராகுல் சோலான்கி (26) கழுத்தில் குண்டடி பட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவால் தான் இந்த பகுதியில் கலவரம் மூண்டது என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சிலரோ அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று கரவால் நகரின் முன்னாள் எம்.எல்.ஏவான மிஸ்ரா “சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசினார். மேலும் டெல்லியின் ஜஃப்ராபாத், சாந்த் பாக் சாலையில் உள்ள போராட்டக்காரர்களை நீக்கும்படி காவல்துறையினருக்கு இறுதி உத்தரவு ஒன்றினையும் பிறப்பித்தார்.

மேலும் படிக்க : ”பாரத் மாதா கீ ஜே” சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் – ஹிமாச்சல் முதல்வர்

இது தொடர்ந்து கொண்டே இருந்தால் பெற்றவர்கள் தங்களின் பிள்ளைகளையெல்லாம் இழந்து நிற்பார்கள். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ உடனே கைது செய்யப்பட வேண்டும் என்று சோலான்கி அறிவித்தார். ராகுலை நாங்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்த போது யாருமே அனுமதி தரவில்லை. நாங்கள் குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு அவனை கொண்டு வரும் போது அவன் உயிரிழந்திருந்தான் என்று அவர் அறிவித்தார். ராகுலின் இளைய சகோதரி மும்பையில் இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றுகிறார். அவருக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

வடகிழக்கு டெல்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 13 நபர்கள் கொல்லப்பட்டனர். டெல்லி காவல்துறையை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் (42),  ஷாகித் கான் (22), தீபக்(34), முதாஸ்ஸிர் கான் (35) மற்றும் முகமது ஃபுர்கான் (32)  ஆகியோர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Delhi Violence Families of dead say divided in violence

இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஜி.டி.பி, லோக் நாயக், ஜக் ப்ரவேஷ் சந்திரா, மேக்ஸ் போன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜி.டி.பி மருத்துவமனையில் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் மருத்துவமனையில் மொத்தம் 150க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 13 பேர் இறந்துள்ளனர். அதில் 5 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர் குறித்த தகவல்களை இனி தான் கூற முடியும். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டினால் பலியாகியுள்ளனர். அவை அனைத்தும் பெல்லட் வகை குண்டுகளா அல்லது நாட்டுத்துப்பாக்கி குண்டுகளா என்பதை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று டாக்டர் சுனில் குமார், ஜி.டி.பி. மருத்துவமனை இயக்குநர், அறிவித்தார்.

செவ்வாய் கிழமை மாலை வரையில் ஒரே ஒரு பிரேத பரிசோதனை மட்டுமே நடந்ததூ. டெல்லி காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற நபர்களின் உடல்களை பெற உறவினர்கள் காத்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் மற்றொருவர் ஷாகித் கான். ஆட்டோ ஓட்டுநர். தன்னுடைய வண்டியில் சவாரி வந்தவரை இறக்கிவிட்ட போது இந்த தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். “நாங்கள் புலந்த்ஷாஹரில் இருந்ந்து டெல்லிக்கு வந்தோம். சாகித்திற்கு கடந்த செப்டம்பரில் தான் திருமணம் ஆனது. நாங்கள் இந்த 6 வருடத்தில் இப்படியான ஒரு கலவரத்தை பார்த்ததே இல்லைஇ. இவை அனைத்திற்கும் மிஸ்ரா தான் காரணம். பிரேத பரிசோதனை இன்னும் முடியவில்லை. சாகிதின் உடலை புலந்த்ஷாஹர் பகுதிக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கூறூகிறார் அவருடைய சகோதரர் இம்ரான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

செவ்வாய் கிழமை, இந்த கலவரத்தில் சிக்கியவர்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை ஆட்டோவிலும், இரு சக்கர வாகனங்களிலும், காவல்துறை வண்டிகளிலும் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்தனர். முதாஸ்ஸிர் கானும் ஆட்டோ ஓட்டுநர் தான். அவர் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு வரும் போதே உயிரிழந்த நிலையில் தான் எடுத்து வரப்பட்டார். கார்தம்பூரியில் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தை, ஒரு வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்த அவர் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக வெளியேறினார் என்று அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர்.

Delhi Violence Families of dead say divided in violence
Mob beating a person during the clash between two groups at Khajuri Khass crossing in New Delhi on Tuesday. EXPRESS PHOTO BY PRAVEEN KHANNA 25 02 2020.

திங்கள் கிழமை மாலை நான்கு மணி அளவில் “10 -15 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதாகவும், அவரை யாரோ ஒருவர் சுட்டுவிட்டதாகவும் கூறினார்கள். நாங்கள் காவல்துறையினர் மற்றும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸை வரவைக்க தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை என்கிறார் அஷியானா. முதாஸ்ஸிரின் நண்பர் கூறும் போது “சாலையில் நடந்த கலவரத்தை பார்த்த போது எங்களுக்கு வீட்டுப் போகவே பயமாக இருந்தது. எங்களின் கடைகளை எல்லாம் ஒன்றுமில்லாமல் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் முஸாத்தீர் போராட்டம் கூட நடத்தவில்லை. அவனை ஏன் கொன்றார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

முகமது ஆசிஃப் (32), சலீம் கானின் மகனான இவரின் வலது தோள்பட்டையில் துப்பாக்கிச் சூட்டினால் காயம் பட்டிருந்தார். மிஸ்ராவின் பேச்சினை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை எங்களின் சாலைகளும், தெருக்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எங்களுடன் நண்பர்களாக இருந்த அண்டைவீட்டினர் ஒரே நொடியில் ஒருவருக்கு ஒருவர் எதிராளிகளாக மாறினார்கள். இந்த மருத்துவமனையை அடைவது அவ்வளவு கடினமாக இருந்தது. சாலைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, ஆம்புலன்ஸூக்கும் கூட வழி தராமல் கலகக்காரர்கள் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார்.

Delhi Violence Families of dead say divided in violence

விவேக் சௌத்ரி (19) தலையில் மோட்டர் மெஷினால் ட்ரில் போடப்பட்ட நிலையில் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய நண்பர் ஷிவ் விஹாருடன் கரவால் நகருக்கு சென்ற போது கலகக்காரர்கள் அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டைகளைக் கேட்டனர். அதனை அவர் தர மறுத்ததால் ஒரு குழு வந்து அவரை தாறுமாறாக தாக்கி அவருடைய தலையில் மோட்டர் கொண்டு கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். 1.5 இன்ச் அளவுள்ள மோட்டர் அவருடைய தலையில் இன்னும் அப்படியே இருக்கிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவன் வீட்டுக்கு ஒரே ஒரு பையன் என்று கூறுகிறார் அவருடைய நண்பன் பாராஸ்.

சுல்ஃபி கான், யமுனா விஹாரில் வசித்து வரும் இவருடைய காதில் குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்க வந்த அவருடைய குடும்பத்தினர் மீண்டும் வீட்டுக்கு செல்லவே இல்லை. திங்கள் கிழமை மாலை 8 மணியில் இருந்து மருத்துவமனையில் தான் இருக்கின்றோம். வீட்டுக்கு போவதற்கான வழியே தெரியவில்லை என்று கூறுகின்றனர் அவருடைய உறவினர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

சைய்தி (12), ஜி.டி.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன். தன்னுடைய இடுப்பில் குண்டடி பட்ட நிலையில் தன்னுடைய தம்பியை தேடிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அடிபட்ட மற்றொருவரை காப்பாற்ற முயற்சி செய்து சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

மோட்டர் சைக்கிளில் வைத்து எடுத்துவரப்பட்ட ராஜ்பிரோ போராட்டத்தில் பங்கேற்கவே இல்லை. தன்னுடைய வீட்டின் வெளியே அமர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென குண்டு சத்தம் கேட்டு திரும்பினால், அவர் வாசலில் கீழே விழுந்து கிடக்கிறார் என்று அவருடைய மனைவி கூறுகிறார். முகத்தில் குண்டடிபட்ட அவரை மோட்டர் சைக்கிளில் வைத்து மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர் அண்டை வீட்டில் வசித்து வந்தவர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

ப்ரிஜ்பூரி பகுதியில் வசித்து வந்த ராகுல் தாக்கரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக என்ன நடக்கிறது என்பதை வீட்டுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சில் குண்டடிபட்ட அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் கலகக்காரர்கள் ஆம்புலன்ஸை மேற்கொண்டு நகரவிடாமல் தடுத்தனர். எப்படியோ தப்பித்து பிழைத்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம். தற்போது அவர் ஐ.சி.யுவில் இருக்கிறார் என்கிறார்கள் அவருடைய உறவினர்கள்.

32 வயதான ஆட்டோ ஓட்டுநர் பப்பு கல்லடி தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளார். கஜூரி காஸ் பகூதியில் தன்னுடைய ஆட்டோவை பார்க் செய்யும் போது 30 பேர் கொண்ட குழு அவரை சரமாரியாக கற்களை வைத்து தாக்கியுள்ளது. சாலையின் நடுவில் வீழ்ந்து கிடந்தவரை காப்பாற்ற நாங்கள் ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் காவல்துறையின் உதவியை நாடினோம் என்று அவருடைய உறவினர்களும் நண்பர்களும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : டெல்லி வன்முறை : மற்றவர்கள் இந்த போட்டோவை பார்ப்பதை நான் விரும்பவில்லை – தாக்குதலுக்குள்ளான நபரின் அழுகுரல்

முஸ்தஃபாபாத்தில் உள்ள அல்-இந்த் மருத்துவமனையில் 22 பேர் காயத்துடன், ஆம்புலன்ஸ் ஏதும் கிடைக்காத காரணத்தால் பெறும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஹாம்தார்த் மருத்துவமனையில் ஒரு மருத்துவக் குழு தொடர்ந்து மருத்துவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் அங்கிருந்து இந்த மருத்துவமனைக்கு வருவதற்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏதும் இல்லை. 22 பேர்களில் 10 பேர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹர்ஜித் சிங் பாட்டி அறிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi violence families of dead say divided in violence united in grief