Advertisment

டெல்லி வன்முறை : கடும் கட்டுப்பாடுகளுக்கு கீழ் வர இருக்கும் சமூக வலைதளங்கள்!

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் புதிய திருத்தங்கள் மூலம் இந்நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லி வன்முறை : கடும் கட்டுப்பாடுகளுக்கு கீழ் வர இருக்கும் சமூக வலைதளங்கள்!

Karishma Mehrotra , Liz Mathew

Advertisment

Delhi Violence Govt plans new norms for social media platforms to check hate messages : டெல்லியில் நடைபெற்ற கலவரங்களுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள்  குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், சமூக வலைதளங்கள் தான் பொய்யான தகவல்களையும், வெறுப்பு செய்திகளையும் பரப்பும்  கூடமாக செயல்படுகிறது என்று மத்திய அரசு கருதி வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய உள்துறை அமைச்சகத்தால் செவ்வாய் கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  அதில் சமூக வலைதளங்களின் பங்குகள் குறித்து பங்கிரமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் பக்கங்களில், பகிரப்பட்ட ட்வீட்கள் தான் வதந்திகளை பரப்புவதற்கு வசதியாக அமைந்தது என்று டெல்லி காவல்துறை ஆணையர் அறிவித்தார். உள்துறை செயலாளர்  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐ.டி மற்றும் ஒளிபரப்புத்துறை உறுப்பினர்கள், டெல்லி காவல்துறையினர், கூகுள், ட்விட்டர், முகநூல், டிக்டாக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இந்த சமூக வலைதளங்களின் வாயிலாக  தவறான செய்திகள், வெறுப்பு செய்திகள் பரப்பப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை திட்டவட்டமாக  அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : டெல்லி வன்முறை வெறியாட்டம் : வாட்ஸ்ஆப் உதவியால் தாக்குதல்களை அரங்கேற்றிய கலவரக்காரர்கள்…

உள்துறை அமைச்சகம், ஐ.டி அமைச்சகத்திற்கு “சமூக வலைதளங்கள்” தொடர்பாக முக்கிய  முடிவுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. நாங்கள் சில ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். இப்போது முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பதியப்படும் பதிவுகள் குறித்த புதிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளோம். விரைவில் அந்த வழிமுறைகள் மற்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று ஐ.டி. துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உறுதியான, வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எந்த ஒரு சமூக வலைதளத்தினையும் தடை செய்ய முடியாது. ஆனால் சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

ஒவ்வொரு மாதமும் சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறது. அதில் ஒவ்வொரு நிறுவனத்தின், ஐ.டி. சட்டம் 69ஏவின் இணக்க முறிவுகளின் விகிதங்கள் பட்டியலிடப்படுகிறது. மிகவும் குறைந்த அளவு இணக்கத்துடன் செயல்படுவது ட்விட்டர் என்று தெரிய வந்துள்ளது. அந்த வரிசையில் பேஸ்புக் (இதில் வாட்ஸ்அப் அடங்கும்), கூகிள் (இதில் யூடியூப் அடங்கும்) மற்றும் டிக் டோக் அதிக விகிதங்களை கொண்டுள்ளது. அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு அவ்வகை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பதில்களை தங்களின் நடவடிக்கைகளை முன்வைத்து வெளிப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் புதிய திருத்தங்கள் மூலம் இந்நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி கலவரத்தை “ஆபத்தான தனிநபர் மற்றும் அமைப்புகளின் கீழ் நிகழ்ந்த ஒரு நிகழ்வு” என்று வகைப்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கலவரத்தையும் இதன் கீழ் தான் வகைப்படுத்தியது. இந்த கொள்கையின் கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்பு அல்லது அளவுக்கு அதிகமான கொலைகள் சம்பந்தப்பட்ட செயல்பாட்டினை கண்டிக்கும் அல்லது நடுநிலைத் தன்மையுடன் விசாரிக்கும் சூழல்கள் குறித்து மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு வழிகாட்டுதலை அனுப்புகிறது. இந்த மதிப்பீட்டாளர்கள், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், குழுக்களுக்கு ஆதரவு தரும் அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கவிடுவார்கள். அதற்கான அதிகாரங்களை இந்த கொள்கை அவர்களுக்கு வழங்குகிறது.

பொதுமக்களை கொல்லுதல், அதற்கு ஆதரவு தருதல், ஹேட் க்ரைம்கள், துப்பாக்கிச் சூடுகள், தீவிரவாத நடவடிக்கைகளை ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம் என்பதில் அதிக தீவிரமாக உள்ளது முகநூல். டெல்லியில் நடைபெற்ற தாக்குதலில், முகநூலில் கபில் மிஸ்ரா டெல்லி காவல்துறையை அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோக்கள் மட்டுமே இருந்தது. ஆனால் ட்விட்டரில் மிஸ்ராவுக்கு ஆதரவாக பேசியவர்கள், அவர்களின் கருத்துகள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து பரப்பப்பட்ட வண்ணமே இருந்தது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் ”கோலி மாரோ” ஸ்லோகன்களும் அதிக அளவில் ட்விட்டரில் இருந்தது. ”ஒரு தனிநபருக்கோ, குழுவினருக்கோ அச்சுறுத்தல் தரும் வகையில் வன்முறையை தூண்டக்கூடாது. நாங்கள் வன்முறையை ஆதரிக்க மாட்டோம்” என்று ட்விட்டரின் உள்ளடக்க கொள்கை விவரிக்கிறது. இந்தக் கொள்கையின் கீழ், ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது மக்கள் குழு மீது வன்முறையைத் தூண்டும் நோக்கில் நீங்கள் எதையும் பதிவு செய்யக்கூடாது. “நான் செய்வேன்”, “நான் போகிறேன்” அல்லது “நான் திட்டமிட்டுள்ளேன்” போன்ற அறிக்கைகளையும் இதன் கீழ் அடங்கும்.

ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாகாதிகாரி ஜாக் டோர்சி வெளியேற இருப்பதால் அந்நிறுவனம், அதிக அழுத்தத்தை சந்தித்து வருகிறது. மற்ற சமூக வலைதள நிறுவனங்களைக் காட்டிலும் ட்விட்டர் ஒரு முடிவினை எடுக்க மிகவும் கால தாமதம் செய்யும். வெளிநாட்டு சர்ச்சைகளிலும் இது இப்படியே நடந்து கொண்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களின் வீடியோக்களை மட்டுமே இது போன்ற சூழலில் விசிபலாக வைத்துள்ளது. டிக்டாக் பொதுவாக ஒரு என்டெர்டெய்ன்மெண்ட் தளம் என்று அறியப்பட்டிருந்தாலும், கடந்த வாரம் ட்ரெண்டான ஹேஷ்டாக்குகளில் #IStandWithKapilMishra இதுவும் ஒன்றாகும்.

Twitter Delhi Facebook Violence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment