டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் நிலவிவரும் நிலையில் காற்றின் தரம் நேற்றை விட மேலும் மோசமடைந்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு கடுமையாக குறைந்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆனந்த் விஹாரில் AQI 473, துவாரகாவில் 458, முண்ட்காவில் 460, சாந்தினி சௌக் 407 எனப் பதிவாகி உள்ளது.
24 மணி நேர சராசரி PM10 (365 ug/m3) மற்றும் PM2.5 அளவுகள் (224 ug/m3) காலை 7 மணி நிலவரப்படி அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. புகையின் அடர்த்தி காரணமாக டெல்லி நகரம் முழுவதும் தெரிவுநிலை குறைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடர்ந்த மூடுபனியால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) குறைந்த தெரிவுநிலை நடைமுறைகளை வைத்துள்ளது. டெல்லி விமான நிலையத்தில் குறைந்த தெரிவுநிலை நடைமுறைகள் நடந்து வருகின்றன. அனைத்து விமானச் செயல்பாடுகளும் தற்போது இயல்பாக உள்ளதாகவும் விமானங்கள் நேரம் குறித்த புதிய அப்டேட்களுக்கு பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு விமான நிலைய ஆபரேட்டர் டையல் X தளத்தில் பதி்விட்டுள்ளார்.
மோசமான வானிலை காரணமாக, குறைந்தது 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் ஏராளமான விமானங்கள் நேற்று தாமதமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த குளிர்காலத்தில் காற்றின் தரம் கடுமையான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் (CAQM) காற்றின் தரம் திடீரென சரிந்ததற்கு அடர்த்தியான மூடுபனியே காரணம் என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. வலுவான காற்று காரணமாக, இன்று முதல் மாசுபடுத்தும் செறிவு குறைய வாய்ப்புள்ளது மற்றும் ஐஐடிஎம் முன்னறிவிப்பின்படி, AQI மிகவும் மோசமான பிரிவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகள் மற்றும் BS III பெட்ரோல் மற்றும் BS IV டீசல் LMVகள் (4-சக்கர வாகனங்கள்) ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“