டெல்லி ராணுவ அதிகாரியின் மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு, குற்றவாளியை தேடுவது போல் நடித்த ராணுவ அதிகாரியை கையும் களவுமாக போலீசார் கைது செய்துள்ளனர்.ராணுவ அதிகாரியான அமித் திவிவேதி, தனது மனைவி மற்றும் மகனுடன் டெல்லி மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரின் மனைவி சைலஜா திவிவேதி கடந்த சனிக்கிகிழமை ‘பிசியோதெரபி’ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பின்பு, அவரை அழைத்த வர கணவர் அமித் டிரைவரை அனுப்பியுள்ளார்.
ராணுவ அதிகாரி மனைவி சைலாஜா கொலை: நடந்தது எப்படி?
மருத்துவமனைக்கு சென்ற டிரைவரிடம் அங்கிருந்த மருத்துவர்கள் சைலஜா முன்னரே கிளம்பி விட்டதாக கூறியுள்ளனர்.தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்த டிரைவர், மறுபடியும் அமித்தியிடம் சென்று சைலாஜா, தான் செல்வதற்குள் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த கணவர் அமித், சைலாஜா வீட்டிற்கு வரவில்லை என்று கூறிவிட்டு , அவருடையை செல்ஃபோன் நம்பருக்கு தொடர்புக் கொண்டுள்ளார்.
பின்னர், சைலாஜா வழக்கமாக செல்லும் இடங்களிலும் அவரை தேடி அலைந்தார். இரவு ஆகியும் சைலாஜா வீடு திரும்பாததால், காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் சைலஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பிணமாக கிடந்துள்ளார். மருத்துவமனை சென்ற மனைவி பிணமாக வீடு திரும்பியதைக் கண்டு அமித் கதறி அழுதார். தனது மனைவியை கொன்ற கொலைக்காரனை உடனே கண்டுப்பிடிக்கும் படி காவல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
Army major arrested : ராணுவ அதிகாரி நிகில்
இந்நிலையில், தனது உற்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்லவதற்காக அமித்தின் நண்பரும், ராணுவ அதிகாரியான நிகில் ஹாண்டா டெல்லிக்கு வந்தார். சைலாஜா கொலை வழக்கை துரிதமாக விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்றும் நிகில் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்த கொலை வழக்கை விசாரித்த டெல்லி காவல் துறையினர், சைலஜாவின் செல்போன் நம்பரை வைத்து திடுக்கிடும் பல உண்மைகளை கண்டுப்பிடித்துள்ளனர்.
சைலாஜாவிற்கும் அமித் நண்பனான நிகில் ஹாண்டாவிற்கு சில வருடங்களாக பேச்சு வார்த்தை இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிகில், சைலாஜாவை திருமணம் செய்துக் கொள்ளுபடியும் வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று, சைலாஜாவின் செல்ஃபோனிற்கு தொடர்புக் கொண்ட நிகில், அவரை நேரில் சந்திக்க வரும்படி அழைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் நிகில், சைலாஜாவை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, அவரின் முகத்தின் மீது காரை ஏற்றி முகத்தையும் சிதைத்துள்ளார்.
இந்த தகவலையெல்லாம் கண்டுப்பிடித்த போலீசார் நிகிலை, அவரின் கார் டயரின் அடையாளத்தை வைத்து கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.