டெல்லியின் ஹவுஸ் காஸில் மான் பூங்கா ஒன்று உள்ளது. இந்த மான் பூங்காவை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், ‘மினி மிருகக்காட்சி சாலையாக’ அங்கீகரித்ததை ரத்து செய்தது.
மேலும் இதனை மூட உத்தரவிட்டது. எனவே இங்குள்ள மான்கள் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள வனப்பகுதிகளில் விடப்பட உள்ளன.
இந்தப் பூங்கா மக்கள் அதிகமாக கூடும் இடமாக உள்ளது. இங்கு வேட்டையர்கள் பிரச்னை இல்லை என்பதால் மான்கள் குட்டிப் போட்டு பெருகின.
மேலும் பூங்காவில் முயல்கள், வாத்துக்கள் என மற்ற உயிரினங்களும் உள்ளன. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டே இங்குள்ள மான்களை ராஜஸ்தான் காடுகளுக்கு மாற்ற திட்டம் தீட்டப்பட்டது.
எனினும் மார்ச் மாத தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி இந்த மான்களில் சில டெல்லி அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்துக்கு ( Asola Bhatti Wildlife Sanctuary) மாற்றப்பட உள்ளன என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்த சரணாலயத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அதேபோல் 2022ல் 565 ஆக காணப்பட்ட மான்களின் எண்ணிக்கை தற்போது 600 ஆக உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து இந்த மான்கள் ராஜஸ்தான், டெல்லிக்கு 70:30 என்ற விகித கணக்கின்படி மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“