/indian-express-tamil/media/media_files/VPAmpJEguU5ZJeqn3EAf.jpg)
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் கலந்துகொண்டார். (பி.டி.ஐ)
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, மூத்த தலைவர் சோனியா காந்தி, “நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற சதி நடக்கிறது” என்று பா.ஜ.க.,வை கடுமையாக சாடினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Democracy in danger, conspiracy being hatched to change Constitution: Sonia Gandhi
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று (ஏப்ரல் 5) வெளியிடப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி பா.ஜ.க ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஜெய்ப்பூரில் நடந்த பேரணியில் சோனியா காந்தி பேசுகையில், “மோடிஜி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையில் பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு, பா.ஜ.க.,வில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்,” என்று கூறினார்.
"கடந்த 10 ஆண்டுகளில், வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை, அட்டூழியங்களை ஊக்குவிக்க அரசாங்கம் எந்தக் கல்லையும் விட்டுவைக்கவில்லை," என்றும் ராஜ்யசபா எம்.பி.,யான சோனியா காந்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.