Advertisment

இலக்குகள் எட்டப்பட்டதாக நீதிபதிகள் கூறவில்லை: பண மதிப்பிழப்பு தீர்ப்பு குறித்து சிதம்பரம் கருத்து

ஆனாலும் ஒரு நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்- சிதம்பரம்

author-image
WebDesk
New Update
p chidambaram

Majority did not say objectives achieved: Chidambaram on noteban order

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 6 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு எடுத்த முடிவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்கள்கிழமை உறுதி செய்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 4 நீதிபதிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகவும், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பண மதிப்பிழப்பிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினர்.

Advertisment

இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது சமூக வலைதளங்களில் தீர்ப்பு பற்றிய கருத்துக்களை தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.

“உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தவுடன், நாங்கள் அதை ஏற்க கடமைப்பட்டுள்ளோம். எவ்வாறாயினும், பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு நியாயத்தை நிலைநாட்டவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்; அல்லது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூறப்பட்ட நோக்கங்கள் எட்டப்பட்டதாக முடிவு செய்யவில்லை.

ஆனாலும் ஒரு நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உள்ள சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற கருத்து வேறுபாடுகளில் இந்த மாறுபட்ட தீர்ப்பு இடம் பெறும்.

பாராளுமன்றத்தின் முழுமையான சட்டமியற்றும் அதிகாரம் மற்றும் நிறைவேற்று அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கும் இடையே உள்ள ஆழமான வேறுபாட்டை சிறுபான்மை இந்த தனி நீதிபதியின்  தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தின் முக்கிய பங்கை இந்த  தீர்ப்பு வலியுறுத்தியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எதிர்காலத்தில் ஒரு கட்டுப்பாடற்ற அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் மக்கள் மீது பேரழிவுகரமான முடிவுகளைத் திணிக்காது என்று நாங்கள் நம்புகிறோம் என்று ப.சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்த பேரழிவுகரமான முடிவின்” கூறப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பு நீக்கம் அறிவிப்பதற்கு முன், ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26(2) சரியாகப் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி ஒருவர் மட்டும் தனது மாறுபட்ட கருத்தில், நாடாளுமன்றத்தை புறக்கணித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

ஒரு பேரழிவு முடிவான பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் பற்றி தீர்ப்பில் எதுவும் கூறவில்லை. இது வளர்ச்சி வேகத்தை சேதப்படுத்தியது, சிறு குறு தொழில்களை முடக்கியது, முறைசாரா துறையை தொழில்களை சிதைத்து, லட்சக்கணக்கான  ஏழைகளின் வாழ்வாதாரங்களை அழித்தது, என்று ரமேஷ் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேறியதா இல்லையா என்பது குறித்து தீர்ப்பு எதுவும் கூறவில்லை.

புழக்கத்தில் உள்ள நாணயத்தை குறைத்தல், பணமில்லா பொருளாதாரத்திற்கு நகர்த்துதல், கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்துதல், பயங்கரவாதம் மற்றும் கறுப்புப் பணத்தை ஒழித்தல் இந்த இலக்குகள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவில் அடையப்படவில்லை. பெரும்பான்மை நீதிபதிகளின், உச்ச நீதிமன்ற தீர்ப்பு முடிவெடுக்கும் செயல்முறையின் வரையறுக்கப்பட்ட சிக்கலைக் கையாள்கிறது, அதன் விளைவுகளுடன் அல்ல. மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று அவர் மேலும் கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்திய குழு உறுப்பினருமான தாமஸ் ஐசக்,  பணமதிப்பு நீக்கம் சட்டப்பூர்வமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை முடிவு, இந்தியாவின் 8% வளர்ச்சியை முறியடித்த இமாலயத் தவறை பற்றி பேசவில்லை, இதன் விளைவாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது மற்றும் மக்களுக்கு பயங்கர துன்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள் என்று தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பேசியதற்காக நீதிபதி பி.வி.நாகரத்னா மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாக கூறினார்.

தெலுங்கானாவின் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி தீர்ப்பு வெளியான உடனேயே, பணமதிப்பு நீக்கம் என்ற சொல்லைக் குறிப்பிடாமல்,, தெலுங்கில் பகிர்ந்த ட்வீட்டில்; மத்தியில் பாஜக ஆட்சியில் நாட்டின் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மங்கி வருகிறது... 2022ல் இந்தியாவின் தரவரிசை 12 குறியீடுகளில் சரிந்துள்ளது. எட்டரை ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் தோல்விகளுக்கு 2022 ஆம் ஆண்டு ஒரு ஊமை சாட்சியாக இருந்து வருகிறது” என்றது.

பிஆர்எஸ் தலைவரும், கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளருமான ஒய் சதீஷ் ரெட்டி, மத்திய நடவடிக்கையின் பின்விளைவுகள் குறித்த பல்வேறு செய்தி அறிக்கைகளின் தொகுப்பு வீடியோவைப் பகிர்ந்து, இந்த பேரழிவு பணமதிப்பு நீக்கத்தால் இழந்த உயிர்களை எதுவும் ஈடுசெய்ய முடியாது! என்றார்.

இதற்கிடையே பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, கடுமையாக உழைத்து, நேர்மையான வாழ்க்கையை நடத்தி, தலை நிமிர்ந்து வாழும் நேர்மையான நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளை ஊக்கப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

பணத்தைக் குவித்த ஊழல்வாதிகளுக்கு அது அபராதம் விதித்தது. எதிர்க்கட்சிகள், இவர்களுக்காக குரல் கொடுத்தன. உச்ச நீதிமன்றத்தின்  முடிவு அவர்களை மேலும் அம்பலப்படுத்துகிறது என்றார்.

பெங்களூரு மத்திய தொகுதியின் பாஜக எம்பி பிசி மோகன், இந்தத் தீர்ப்பு ராகுல் காந்தி மற்றும் அணிக்கு பெரும் அடி என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக தலைவருமான சந்திரகாந்த் பாட்டீல் இந்தத் தீர்ப்பை உச்ச முத்திரை என்று குறிப்பிட்டு, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என்று உச்சநீதிமன்றமும் இப்போது அறிவித்துள்ளது. இது மோடிஜியை குறிவைக்க நினைப்பவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் அறைந்த அடியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment