வங்கிகள் இணைப்பு: இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்குவதற்காக பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இணைக்கப்படுகிறது என நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார்.
Read more: To read this article in English
தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் பரோடா வங்கியுடன் இணைப்பு
ரிசர்வ் வங்கியின் ப்ராம்ப்ட் க்ர்ரெக்டிவ் ஆக்சன் மூலமாக (Prompt Corrective Action (PCA)) மூன்று வங்கிகள் இணைக்கப்படுகிறன. மத்திய அரசின் ஆலோசனைப்படி நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வங்கிகள் மற்றும் கொஞ்சம் தொய்வான நிலையில் இயங்கி வரும் ஒரு வங்கி என தேர்வு செய்யப்பட்டு இந்த வங்கி இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
ஏற்கனவே பாஜக ஆட்சியில் ஐந்து வங்கிகள் எஸ்.பி.ஐ வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஐடிபிஐ வங்கியின் அதிக பங்குகளை எல்.ஐ.சி வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கி இணைப்பு குறித்து யாரும் வருத்தமோ அச்சமோ படத்தேவையில்லை இவை வங்கிகளின் செயல்பாட்டினை மேலும் அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று 17/09/2018 இந்த அறிவிப்பினை வெளியிடும் போது அருண் ஜெட்லி குறிப்பிட்டு பேசினார்.
Alternative Mechanism under FM suggests @bankofbaroda, @VijayaBankIndia & @dena_bank to consider amalgamation; to create India’s 3rd largest globally competitive Bank @PMOIndia @FinMinIndia @PIB_India @DDNational @DDNewsLive pic.twitter.com/yGGtsN2eCA
— Rajeev kumar (@rajeevkumr) 17 September 2018
இந்த மூன்று வங்கிகளின் அசையா சொத்து மதிப்புகளை ஒன்றிணைக்கும் பட்சத்தில் மூன்று வங்கிகளின் சராசரி மதிப்பானது 5.71 என்ற சதவீதத்தில் இருக்கும் என்று அவர் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் குறிப்பிட்டிருக்கிறார்.
வங்கிகள் இணைப்பு குறித்து தலைமை செயல் அதிகாரி பி.எஸ். ஜெயக்குமார்
மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், மற்றும் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் அவ்வறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. விஜயா மற்றும் தேனா வங்கிகளின் பிராந்திய கிளைகளில் செயல்களை பரோடா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல் பரோடா வங்கி உலக அளவில் பெற்று வரும் ஆதாயங்களை தேனா மற்றும் விஜயா வங்கிகள் பெற்றுக் கொள்ளும் என பரோடா வங்கியின் தலைமை செயல் அதிகாரி பி.எஸ். ஜெயக்குமார் குறிப்பிட்டிருக்கிறார்.
பலமற்ற வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு
ஐடிபிஐ வங்கி மற்றும் தேனா வங்கிகள் போல் இந்தியாவில் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, யூனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி மற்றும் அலஹாபாத் போன்ற பலமற்ற வங்கிகளை மற்ற வங்கிகளுடன் இணைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.