ஆதார் அட்டை இல்லாததால் வாசலில் குழந்தை பெற்ற பெண்: அரசு மருத்துவமனையில் அவலம்

பிரசவத்திற்கு முன் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காததால், பெண் ஒருவர் அவசர பிரிவின் வாசலில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

By: February 10, 2018, 5:13:54 PM

ஹரியானா மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாததால், பிரசவத்திற்கு முன் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காததால், பெண் ஒருவர் அவசர பிரிவின் வாசலில் குழந்தை பெற்றெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கோவன் மாவட்டத்தில், முன்னி (25) என்ற பெண் பிரசவத்திற்காக சென்றுள்ளார் அப்போது, அவரிடம் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவத்திற்கு முன் எடுக்க வேண்டிய ஸ்கேன் ஒன்றை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவரிடம் பிரசவத்திற்காக சென்றபோது, அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டை கேட்டுள்ளார். ஆனால், ஆதார் அட்டை இல்லாமல் ஸ்கேன் எடுக்காததால், முன்னியை பிரசவத்திற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு வெளியே உள்ள பார்க்கிங் தளத்தில் முன்னி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இச்சம்பவத்திற்கு காரணமான மருத்துவர் மற்றும் செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Denied ultrasound test for not carrying aadhaar card gurgaon woman delivers baby in the open

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X