மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: இன்று மாநிலங்களவைக்கான துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமென மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களுடைய பெயரை ஆகஸ்ட் எட்டாம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாநிலங்களைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
மாநிலங்களவைத் தலைவராக இந்திய துணைக்கண்டத்தின் துணை குடியரசுத் தலைவரே பதவி வகிப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. துணைத் தலைவர் பதவிக்கு மட்டும் தேர்தல்கள் நடப்பது வழக்கம்.
இரண்டு முறை மாநிலங்களவை துணைத் தலைவராக பணியாற்றிய பி.ஜே. குரியன் அவர்களின் பதவி காலம் ஜூன் 30தோடு முடிவிற்கு வந்ததால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் வெங்கயா நாயுடு.
துணைத் தலைவர் தேர்தல் களம் எப்படி இருக்கும் ?
246 உறுப்பினர்களை கொண்டுள்ள மாநிலங்களவையில் பெரும்பான்மை 123 ஆகும். தற்போதைக்கு ராஜ்யசபையில் அதிக உறுப்பினர்களக் கொண்டிருப்பது பாஜக தான். சுமார் 73 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.
அவர்களுடைய கூட்டணிக் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் 102 உறுப்பினர்களை பாஜக பெற்றுவிடுவார்கள்.
காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆகும். அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆகும். அவர்களின் ஆதரவு யாருக்கு என்று சொல்லவில்லை என்றாலும் பாஜகவிற்கு அவர்கள் ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது.
அப்படியாக அமையும் பட்சத்தில் இரு தரப்பிலும் சுமார் 115 உறுப்பினர்கள் இருப்பார்கள். யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்பதை யூகித்து அறிய முடியாத நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் தமிழக உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு?
திமுக நான்கு உறுப்பினர்களையும் அதிமுக 13 உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. மேலும் அதிமுகவில் இருக்கும் லோக் சபா உறுப்பினர்கள் தற்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தார்கள்.
சமீபத்தில் அமித் ஷாவின் தமிழக வருகை, மற்றும் துணை முதல்வரின் டெல்லி பயணம் இரண்டுமே அதிமுகவின் ஆதரவு பாஜகவிற்கே என்பதை ஊர்ஜிதம் செய்தது.
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.பி சசிக்கலா புஷ்பா பாஜகாவிற்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்ற சந்தேகமும் நீடித்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.