மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், தனக்கு எதிராக சதி செய்ததாக ஒரு பெண் வடிவமைப்பாளர் மற்றும் அவரது தந்தை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, ஃபட்னாவிஸ் இந்த வழக்கு ஒரு பொறி என்றும் பணப்பை வீடியோ அவரது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்கான அச்சுறுத்தல் என்று கூறினார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் வியாழக்கிழமை அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு ஃபட்னாவிஸ் இந்த விவகாரம் குறித்து பேசினார்.
“இந்த விவகாரத்தை எழுப்பியதற்காக நான் அஜித் பவாருக்கு நன்றி கூறுகிறேன். என் மனைவி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். சிலர் என்னை வற்புறுத்துவதற்காக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அதில் கூறியுள்ளார். அனில் ஜெய்சிங்கனி தலைமறைவாக உள்ளவர் மற்றும் அவர் மீது வழக்குகள் உள்ளன. பின்னர் அது நின்றுவிட்டது. அவர் மீண்டும் 2021-ல் அம்ருதாவைச் சந்திக்கத் தொடங்கினார். அவர் ஒரு வடிவமைப்பாளர். அவர் பல கதைகளைச் சொல்லி அம்ருதாவின் நம்பிக்கையைப் பெற்றார். மேலும், ஒரு புத்தகத்தை வெளியிட்டதாகக் கூறினார்” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
மேலும், ஜெய்சிங்கனியின் மகள் அம்ருதாவுக்கு சில டிசைனர் ஆடைகளை வழங்கியதாக துணை முதல்வர் குற்றம் சாட்டினார்.
“பின்னர் அவர் அம்ருதாவிடம் தனது தந்தையைப் பற்றி கூறினார். அவர் மீது போலி வழக்குகள் இருப்பதாகக் கூறி உதவி கோரினார். எனது தந்தைக்கு குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டுபவர்கல்ளைத் தெரியும் என்றும், அவர்களை ரெய்டு செய்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். என் மனைவி மறுத்துவிட்டார். அவர் (ஜெய்சிங்கனியின் மகள்) மீண்டும் அணுகி, தனது தந்தையைக் காப்பாற்ற ரூ. 1 கோடி வழங்குவதாகக் கூறினார்” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
ஃபட்னாவிஸ் தனது மனைவி அந்த பெண்ணின் போன் நம்பரை பிளாக் செய்ததாகக் கூறினார். அதன் பிறகு அவருக்கு (அம்ருதா) தெரியாத எண்ணிலிருந்து வீடியோக்கள் மற்றும் செய்திகள் வந்தன. “ஒரு தீவிரமான வீடியோ இருந்தது. அதில், அந்தப் பெண் ஒரு பையில் பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறாள், அந்த பை என் வீட்டில் காணப்படுகிறது” என்று ஃபட்னாவிஸ் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
மேலும், “இந்த வீடியோ எனது அரசியல் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் என்று எனது மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி அம்ருதா என்னிடம் கூறியதையடுத்து, நாங்கள் காவல்துறையை அழைத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம். ஆனால், அதை பகிரங்கப்படுத்தவில்லை. பைகள் வித்தியாசமாக இருப்பதைக் காட்டுகிற வீடியோவின் தடயவியல் அறிக்கையை நாங்கள் அளித்தோம்.
"காவல்துறையின் உதவியுடன், நாங்கள் அந்த நபருடன் தொடர்ந்து ஈடுபட்டோம், ஒரு உரையாடலில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் வெளிப்பட்டன. முந்தைய போலீஸ் கமிஷனர் வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையைத் தொடங்கினார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நமது அரசு வந்தவுடன் அது நின்று போனது. அனைத்தையும் பதிவு செய்துள்ளோம். தலைமறைவாக இருந்தவர் இப்போது சென்றுவிட்டார்.” என்று ஃபட்னாவிஸ் சட்டசபையில் கூறினார்.
“அந்தப் பெண் தகவல் கொடுத்த விதம், என்னை கைது செய்வது பற்றி நான் கொடுத்த குறிப்பை நிரூபிக்கிறது. என் குடும்பமும் சிக்கியிருப்பதாக எனக்கு ஒரு தகவல் இருந்தது. நம்மிடம் பல பெரிய போலீஸ் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளனர்” என்று அவர் சட்டசபையில் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.