மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணி ஒன்று வன்முறையாக மாறியது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள் காவல்துறையினரைத் தாக்கிய பின்னர் அவர்கள் மீது தடியடி பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
“இந்தப் பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்கள், அப்பகுதியில் இருந்த அதிகாரியின் ஆடைகளைக் கிழித்ததோடு தலைமுடியைப் பிடித்து இழுத்தனர். அவர்களுக்கு சட்டம் எவ்வளவு சின்ன விஷயமாக இருகிறது என்பது நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் மாவட்ட துணை மேஜிஸ்ட்ரேட்டை உதைத்தனர். அதிகாரிகளைத் தாக்கினர்” என்று மாவட்ட ஆட்சியர் நிதி நிவேதிதா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ பகிர்ந்த ஒரு நிமிட வீடியோவில், துணை மாவட்ட ஆட்சியர் பிரியா பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு சிலரை அடித்து இழுத்துச் சென்றபின், ஒரு போராட்டக்காரர் அவருடைய தலைமுடியை இழுத்துச் சென்றனர். அவர்கள் பாஜக தொண்டர்கள் என ஏ.என்.ஐ அடையாளம் கண்டுள்ளது.
பாஜக தொண்டர்கள் காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாக குற்றம் சாட்டினர். ஒரு எதிர்ப்பாளர் போலீஸார் அவரைத் தாக்கியதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, முழு சம்பவமும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.