மருத்துவமனையில் அறுவைசிகிச்சை, அறுவைசிகிச்சை அல்லாத நடைமுறைகளுக்கு உள்ளாகும் அறிகுறி இல்லாத நோயாளிகள், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட நோயாளிகளுக்கு அறிகுறிகள் உறுதியாக இல்லாவிட்டால் அல்லது அறிகுறிகள் ஏற்படாத வரையில் கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது” என்று புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட புதிய பரிசோதனை வழிகாட்டுதல்களில், அறிகுறியில்லாத நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறியிருந்தாலும், டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்கும் நேரத்திலும், மருத்துவமனையில் பரவலைத் தடுக்கும் செயல்முறைகளுக்கு முன்பும் கோவிட்-19 பரிசோதனை செய்து வருகின்றன. தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முடிவுகள் மோசமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
மருத்துவமனையில் அறுவைசிகிச்சை, அறுவைசிகிச்சை அல்லாத நடைமுறைகளுக்கு உள்ளாகும் அறிகுறி இல்லாத நோயாளிகள், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட நோயாளிகளுக்கு அறிகுறிகள் உறுதியாக இல்லாவிட்டால் அல்லது அறிகுறிகள் ஏற்படாத வரையில் கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது” என்று புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளியின் குறைந்த ஆபத்து தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் பிற நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் அறிகுறி இல்லாத நபர்கள், அறிகுறி இல்லாத நோயாளிகளின் தேவைக்கேற்ப கோவிட் தொற்று பரிசோதனையை நிறுத்திய புதிய வழிகாட்டுதல்களுக்குப் பிறகு தலைநகரில் கோவிட்-19 சோதனைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசாங்கத்தின் கொரோனா பரிசோதனை மாதிரி சேகரிப்பு மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று டெல்லி அரசின் மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அமைச்சகத்தால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதை நாங்கள் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
இருப்பினும், நோயாளிகளை மருந்த்துவமனையில் அனுமதிக்கும் முன்பும், நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றுவதற்கு முன்பும், இந்த நடைமுறைகளுக்கு முன்பும் சோதனைகள் வழக்கமாக நடத்தப்படுவதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது உயிருக்கு ஆபத்தான நிலை அவசரம் இல்லாவிட்டால், எந்தவொரு நடைமுறைகளுக்கும் முன் நோயாளிகளுக்கு நாங்கள் பரிசோதனை செய்கிறோம். நோயாளிகள் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றப்படுவதற்கு முன்பும் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். எந்த வேலையும் இல்லை. ஒரு அறிகுறி இல்லாத நபர்கூட ஒரு வார்டில் உள்ள மற்ற நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தொற்று நோயை அளிக்கலாம். பின்னர், யாருக்கு கடுமையான நோய் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக்கு ஆளாவதைக் குறிப்பிட தேவையில்லை”என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் கூறினார்.
சஃப்தர்ஜங் மருத்துவமனையில், நோயாளிகள் சேர்க்கையின்போது விரைவான ஆன்டிஜென் பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்தால் அவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படுவார்கள்; அவை அறிகுறியாக இருந்தாலும், சோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்றால், அதே கட்டிடத்தில் உள்ள மற்றொரு பகுதிக்கு அனுப்பப்படுவார்கள்; அவர்கள் அறிகுறியற்றவர்களாக இருந்தால், பரிசோதனையில் நெகட்டிவ் என இருந்தால் அவர்கள் மற்ற வார்டுகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
“நோயாளிகள் மருத்துவமனையில் ஒரு செயல்முறையைப் பெற வேண்டியிருக்கும் போது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கோவிட்-19 பரிசோதனையைச் சேர்ப்பது நேரத்தையும் முயற்சியையும் அதிகமாக்காது. அதைச் செய்யாவிட்டால், பல பேர்களை தொற்றுநோய்க்கு ஆளாக்கும். நோயாளிகள் ஏதேனும் அறுவை சிகிச்சை அல்லது சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ போன்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்போது நாங்கள் பரிசோதனையை செய்யச் சொல்லி கேட்கிறோம்” என்று பெயர் குறிப்பிடாத மருத்துவமனையின் மருத்துவர் கூறினார்.
கொரோனா வைரஸின் புதிய திரிபு வைரஸ் எந்தளவுக்கு பரவியுள்ளது என்றால், கடந்த சில வாரங்களாக ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுகாதாரப் பணிகளில் மனிதவள பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
“எங்களுடைய மருத்துவமனையில் உள்ள 380 செவிலியர்களில் 71 பேருக்கு 3 நாட்களில் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுளது. மருத்துவமனையை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிகளை பரிசோதிக்க இது மட்டும் காரணமல்ல” என்று ஹோலி பேமிலி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுமித் ரே கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “தொற்று உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை விளைவு மோசமாக இருக்காது என்று கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. முந்தைய இரண்டு அலைகளின் போது கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை மோசமாக இருந்தன. அவசர உயிர்காக்கும் அறுவை சிகிச்சை என்றால், நிச்சயமாக, அது நடக்க வேண்டும். பரிசோதனை இல்லாமல் நடத்தப்படுகிறது. ஆனால், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கு ஏன் பரிசோதனை செய்யக்கூடாது; அவர்கள் 10 நாட்களுக்குள் திரும்பி வந்து அதைப் பெறலாம்.” என்று கூறினார்.
டெல்லியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் கூறுகையில், “நாங்களும் குடும்பங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஒரு வார்டில் உள்ள மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அல்லது அறுவை சிகிச்சை சரியாக இல்லை என்றால் என்ன செய்வது? எங்கள் மீது வழக்கு தொடரப்படும். அதனால், நாங்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.