scorecardresearch

கர்நாடக தேர்தல் களத்தில் நடக்கவிருப்பது இது தான்.. முன்னாள் பிரதமர் தேவ கவுடா கணிப்பு!

கூட்டணி பலத்தை கண்டு பாஜக தங்களது நம்பிக்கை இழந்து வருவதே உண்மை.

கர்நாடக தேர்தல் களத்தில் நடக்கவிருப்பது இது தான்.. முன்னாள் பிரதமர் தேவ கவுடா கணிப்பு!
Deve Gowda interview

johnson T A

Deve Gowda interview :

கர்நாடகாவில் துமக்கூரு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. தேவ கவுடா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்திருக்கும் பிரத்யேக பேட்டி.. தமிழில் உங்களுக்காக..

1. கேள்வி : நீங்கள் போட்டியிடும் துமக்கூரு தொகுதியில் விவசாய பிரச்சனை  அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த பிரச்சனையை நீங்கள் எப்படி எதிர் கொள்ள போறீர்கள்?

பதில் : அர்சிகெர், கடூர், சித்ரதுர்கா மற்றும் டவங்கரே பகுதிகளை எடுத்துக் கொண்டால் தென்னை விவசாயம் முதன்மையான தொழிலாக விளங்கி வருகிறது. ஆனால் இப்போது வறட்சி காரணமாக தென்னை விவசாயம் இந்த பகுதிகளில் முற்றிலும் அழிந்து வருகிறது. தென்னை மரங்கள் அழிந்து கீழே சரியும் புகைப்படங்களை எடுத்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பினோம். ஆனால் அங்கிருந்த எந்தவொரு பதிலும் வரவில்லை.

அழிவை சந்திக்கும் ஒவ்வொரு விவசாயிகளின் ஒரு தென்னை மரத்திற்கும் தலா ரூ. 500 வழங்கிட முறையும் செய்துள்ளோம். ஒரு ஏக்கரில் கிட்டத்தட்ட 40 மரங்கள் இருக்கிறது. தென்னை விவசாயிகளுக்கு  இழப்பீடு தொகையாக குமாரசாமி அரசாங்கம் ரூ. 150 கோடி அறிவித்துள்ளது. இந்த இழப்பு குறித்து மத்திய வேளாண்மை அமைச்சரகத்துக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் இறுதியில், வறட்சி நிவாரண மதிப்பீடுகளின் கீழ் இந்த பிரச்சினை கையாளப்பட வேண்டும் என்று எங்கள் பதில் கடிதம் வந்தது.

வறட்சி நிவாரணத்திற்கு 1,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தென்னை இழப்புகளுக்கு தனியாக எந்த தொகையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2. கேள்வி : நீங்கள் போட்டியிடும் தொகுதியில் உங்களுக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் மோடி பெயரை கொண்டு வாக்கு சேகரிக்கிறார். அப்படியென்றால் இது மோடி vs தேவ கவுடா இடையேயான போட்டியா?

பதில் : நான் பாஜக குறித்து எந்தவொரு விமர்சனத்தையும் முன் வைக்க விரும்பவில்லை. அதே போல் எனக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க எனக்கு விருப்பமில்லை. இதுவே அரசியல் வாழ்வில் நான் பின்பற்றும் கண்ணியம். நான் என் முழு கவனத்தை வாக்காளர்கள் மற்றும் தொகுதி மக்கள் மீதே செலுத்து வருகின்றேன்.தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் என் தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கட்டாயம் முழு முயற்சி எடுப்பேன்.

3. கேள்வி : காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கூட்டணிக்கு இடையே நிறைய குழப்பங்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இப்போது இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தல் களத்தில் செயல்படுகின்றனவா?

பதில் : கர்நாடகாவில் எங்களுடைய கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நோக்கமே பாஜக- வை தோற்கடிப்பது மட்டுமே. எங்கள் கூட்டணி பலத்தை கண்டு பாஜக தங்களது நம்பிக்கை இழந்து வருவதே உண்மை. தொகுதி ஒதுக்கீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். இந்த குழப்பங்கள் குறித்து காங்கிரஸ்-க்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜே.டி.எஸ் -க்கு இதுக் குறித்த எந்த குழப்பமும் இல்லை.

மைசூர் விஷயத்தில், எங்களுக்கு சந்தேகம் ஏதும் இல்லை. நான் குமாரசாமியின் பொறுப்பையும் எடுத்துக் கொண்டேன். முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா எதை விரும்பினாரோ அதை. ஆரம்பத்தில் காங்கிரஸ் எங்களுக்கு 5 இடங்களை மட்டுமே தர முன்வந்தது. பின்பு நான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து விளக்கமளித்தேன்.

நான் அவரிடம் சென்ற முறை காங்கிரஸ் வெற்றியை தவறவிட்ட 8 இடங்களை கேட்டேன். ஹஸ்ஸன் மற்றும் மாண்டி தவிர. ஆனால் காங்கிரஸ் மீண்டும் 5 இடங்களை வைத்து பேரம் பேசியது. ஆனால் ராகுல் காந்தி தனித்து முடிவெடுத்தார். அவர் 8 இடங்களை எங்களுக்கு ஒதுக்கி தர சம்மதித்தார். அந்த 8 இடங்களில் மைசூரும் ஒன்று. இதற்கு தான் சித்தராமையா தனது தரப்பு கருத்தை பதிவு செய்தார். அவர், மைசூரில் காங்கிரஸ் ஆளுமை அதிகம் இருப்பதாகவும், மைசூரை இழந்தால் அதிகாரம் கைமாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். இதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அந்த நேரத்தில் தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், துணை முதல்வருமான பரமேஸ்வராவ் மற்றும் எம்.பி. ஹனோம் கவுடா என்னை துமக்கூரில் போட்டியிட கூறினர்.

4. கேள்வி: தேசிய அளவில் இணைந்துள்ள உங்கள் கூட்டணி குறித்து பிரதமர் மோடி ’கலப்படமான கூட்டணி’ என விமர்சித்துள்ளார். அதுக் குறித்து.

பதில் : தேசிய அளவில் காங்கிரஸ் நான்கு ஆண்டுகளில் 19 மாநிலங்களில் அதிகாரத்தை இழந்தது. இது தான் மோடியை வானத்தில் பறக்க வைத்தது. இப்போது அவர் வானத்தில் இருந்து பூமியை தொட மறுத்து வருகிறார். இதைப்பற்றி நான் நன்கு யோசித்த பின்பே ஒரு சரியான தீர்வு வேண்டும், என்று முடிவு செய்தேன்.

நான் எல்லா எதிர்க்கட்சிகளுடனும் பணிபுரிந்து உள்ளேன் . நாங்கள் 2018 ல் காங்கிரஸால் கூட்டணிக்கு வரும்போது, ஆறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நான் ஆலோசனைகளை நடத்தினேன், பின்னர் கூட்டணி இழுபறி தொடர்ந்தது அப்போது பி.ஜே.பி தொடர்ந்து 11 இடங்களில் அதிகாரத்தை இழந்தது.

மோடி அவ்வளவு எளிதாக அதிகாரத்திற்கு மீண்டும் திரும்ப நான் விடமாட்டேன். அதே நேரம் இரண்டு கட்சிகளுமே மெஜாரிட்டி பெறும். . மாயாவதி, ”நான் காங்கிரஸ் அல்லது பிஜேபியுடன் போக விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். மம்தாவும் இதே போல் கடுமையான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர்களை அனைவரும் தேர்தலுக்கு பிறகு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அப்படி இணைந்தால் அது கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக மாறும்.

5. முதல்வர் குமாரசாமி புல்வாமா தாக்குதல் மற்றும் பால்கோட் தாக்குதல் பற்றி எதிராக பேசி வாக்கு சேகரிபில் ஈடுப்படுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். அதுப்பற்றி.

பதில் : புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல் குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கங்கள் வெளியிடாத போது, அதை வைத்து பிரச்சாரம் செய்யும் பாஜக- வை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அரசாங்கம், ‘ நம்பாதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்” என்று பதில் கூறுவது மட்டும் எந்தவிதமான நியாயம்.

6. நீங்கள் கலந்துக் கொண்ட சில பிரச்சாரத்தில் பாஜக அரசு காஷ்மீர் அமைதியை கெடு விட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறீர்கள். அப்படியென்றால் மீண்டும் அங்கு அமைதி நிலவ நீங்கள் வழி மொழிவது?

பதில் : 1996 ஆம் ஆண்டில் நான் பிரதமராக இருந்த சமயத்தில் எந்த பிரதமரும் 10 ஆண்டுகளில் காஷ்மீர் பக்கம் செல்லவில்லை. நான் ஹுரியத் தலைவர்கள் உட்பட அனைத்து குழுக்களையும் சந்தித்தேன். இந்தியா – காஷ்மீர் சுற்றுலா அழிந்து கிடந்தது. நான் வெவ்வேறு குழுக்களை சந்தித்தபோது, ​​’சுற்றுலாவை நம்பி கடன்களை வாங்கி கடைகளை அமைத்து இப்போது சிக்கலில் கிடக்கிறோம். எங்களை மீட்க உதவுங்கள்” என்றனர்.

நாங்கள் உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று கடன்களை தள்ளுபடி செய்தோம். காஷ்மீர் மக்களின் அடிப்படை வாழ்வாரத்தை மேம்படுத்த்க உதவினோம். மக்கள் எங்களை முழுமையாக நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு நாங்கள் பாத்திரமாக இருந்தோம்.

கர்நாடகாவில், நாங்கள் முஸ்லிம்களுக்கு நிறைய நலத்திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். காஷ்மீருக்கு நான் செல்வதை சில பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்தன.இருந்த போதும் நாங்கள் சென்றோம். எங்களுக்கும் எதுவும் தவறாக நடக்கவில்லை.

காங்கிரசால் ஆதரிக்கப்பட்ட 13 கட்சிகளின் கூட்டணியில் நாங்களும் சேர்ந்தோம். நான் அவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலைப்பான்மையை உருவாகி இருந்தேன். இந்த காலத்தில் காஷ்மீர் பிரச்சனை சுயாட்சி மற்றும் காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு மற்றும் நிதி தவிர, நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைக் கோருகின்றனர். பிரதமர் நரசிம்ம ராவ் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். நாங்கள் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது, ​​அது 58 சதவீதமாக உயர்ந்தது.

7. தேர்தலை சந்திக்கும் உங்கள் 2 பேரன்கள் பிரஜ்வால் ரேவன்னா, நிகில் குமாரசாமிக்கு  நீங்கள் சொல்ல விரும்புவது.

பதில் : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிட கூடாது என்று முடிவு செய்திருந்தேன். கட்சி தலைவர் என்னை அழைத்து நான் மரணிக்கும் வரையில் அரசியல் வாழ்வில் என் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றார். என்னுடைய இந்த முடிவை சபாநாயக்கரிடமும் கூறி இருந்தேன். அவர் என்னை அழைத்து மூத்த அரசியல் தலைவரான நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார். என் பணியை தொடர்கிறேன். இவை எல்லாம் என் பேரன்களுக்கும் தெரியும்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Deve gowda interview there is no problem in the coalition in karnataka