Advertisment

மகாராஷ்டிரா புதிய அரசு: ஃபட்னாவிஸ் சந்திப்பு; துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்க வாய்ப்பு

“ஷிண்டேஜி வருத்தம் அடைந்ததாகக் கூறப்படும் பேச்சுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நாளை மகாயுதி தலைவர்கள் கூட்டம் நடைபெறும்" என சிவசேனா செய்தித் தொடர்பாளர் கிரண் பவாஸ்கர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Fadnavis and Eknath Shinde

பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செவ்வாய்கிழமை மாலை சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மும்பையின் ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்களின் பதவியேற்பு விழாவிற்கான அறிகுறிகளைக் குறிக்கிறது.

Advertisment

“பிரமாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஷிண்டே மற்றும் (என்சிபி தலைவர்) அஜித் பவார்  துணை முதல்வர்களாக பதவியேற்பார்கள்” என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஃபட்னாவிஸ் மற்றும் ஷிண்டே சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதுபற்றி சிவசேனா தலைவர் ஒருவர் கூறுகையில், “இரு தலைவர்களும் பதவியேற்பு குறித்து பேசினர். இலாகாக்கள் பகிர்வு மற்றும் அமைச்சரவை அமைப்பு தொடர்பான விவரங்கள் நாளை மற்றொரு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை தங்கள் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்வு செய்தவுடன், ஃபட்னாவிஸ், ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment
Advertisement

செவ்வாய்க்கிழமை மாலை, மத்திய நிதியமைச்சரும், குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானி, பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கான இரண்டு மத்திய பார்வையாளர்கள் மும்பை வந்தனர். புதன்கிழமை அவர்களும் ஷிண்டேவை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஷிண்டேவை துணை முதல்வர் பதவி ஏற்க வைக்க பாஜக தலைமை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவசேனா வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:     Maharashtra govt formation: Devendra Fadnavis reaches out, Eknath Shinde likely to take oath as Deputy CM

ஃபட்னாவிஸ் ஷிண்டேவை சந்திப்பதற்கு முன்னதாக, பாஜக தனது தூதரான கிரிஷ் மகாஜனை கடந்த 24 மணி நேரத்தில் ஷிண்டேவை சந்திக்க இரண்டு முறை அனுப்பியது - திங்கள் இரவு தானேவிலும், பின்னர் செவ்வாய்கிழமை மீண்டும் வர்ஷாவிலும் சந்திப்பு நடந்தது. 

சிவசேனா உள்துறை அமைச்சர் பதவியை வலியுறுத்துகிறது. பாஜக இந்த கோரிக்கையின் சாதக பாதகங்களை எடைபோடுவதால், மகாராஷ்டிராவில் கடந்த 4-5 நாட்களாக அரசு அமைக்கும் பணி நடக்காமல் உள்ளது. திட்டமிட்டபடி பதவியேற்பு நடைபெறும் அதே வேளையில், அமைச்சர்கள் தொடர்பான பிரச்னைகள் அடுத்த இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment