/indian-express-tamil/media/media_files/4cQlTjSuvNNO9F17ydyk.jpg)
அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி கட்சியும் அடுத்த அமைச்சரவை விரிவாக்கம் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) மத்தியில் புதிய நரேந்திர மோடி அரசாங்கத்தில் சுயேட்சை பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் (MoS) வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் கேபினட் அமைச்சர் பதவிக்கு ஆர்வமாக இருந்ததால் கட்சி அதை ஏற்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். டெல்லியில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ajit Pawar-led NCP was offered MoS post but wanted Cabinet berth: Devendra Fadnavis
“என்.சி.பி-க்கு சுயேச்சை பொறுப்புடன் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இது முழு அளவிலான கேபினட் பதவிக்கு சமம். மோடி அமைச்சரவையில் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரபுல் படேலின் பெயரை என்.சி.பி முன்மொழிந்துள்ளது. படேல் மூத்தவர் மற்றும் கேபினட் அமைச்சராக பணியாற்றியதால், அவர்களால் இணை அமைச்சர் பதவியை ஏற்க முடியவில்லை." என்று அவர் கூறினார்.
இதுபற்றி பிரபுல் படேல் பேசுகையில்,"பா.ஜ.க மற்றும் என்.சி.பி இடையே எந்த குழப்பமோ பிரச்சினையோ இல்லை. நேற்றிரவு, நாங்கள் சுயேச்சையான பொறுப்புடன் ஒரு இணை அமைச்சர் பதவி பெறப் போகிறோம் என்ற தகவல் கிடைத்தது. ஆனால், நான் ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்ததால், பதவி இறக்கம் என்பதால் என்னால் இந்த பதவியை எடுக்க முடியாது. நாங்கள் பா.ஜ.க தலைமையிடம் தெரிவித்துள்ளோம், அவர்கள் ஏற்கனவே எங்களிடம் சில நாட்கள் காத்திருக்குமாறு கூறியுள்ளனர், அவர்கள் சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுப்பார்கள்." என்று அவர் கூறினார்.
அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி கட்சியும் அடுத்த அமைச்சரவை விரிவாக்கம் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அஜித் பவார் தலைமையிலான என்.சி.பி கட்சியில் இருந்து எந்த தலைவரும் அமைச்சர்கள் குழுவில் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதாகவும், பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாகவும் அஜித்பவார் தெரிவித்தார்.
"கடந்த காலத்தில் கேபினட் அமைச்சராக இருந்த போதிலும், அவர் [பிரபுல் படேல்] ஒரு இணை அமைச்சராக சுயாதீன பொறுப்பை வைத்திருப்பது பொருத்தமாக இருக்காது. அது சரியென்று நாங்கள் உணரவில்லை. எனவே, நாங்கள் சில நாட்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என்று (பா.ஜ.க தலைமைக்கு) தெரிவித்தோம். பா.ஜ.க ஒப்புக்கொண்டது. ” என்று அஜித் பவார் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில், என்.சி.பி போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ராய்காட் என்ற ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாராமதியில் கடும் போட்டி நிலவிய போதிலும், அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவால் தற்போதைய எம்.பி சுப்ரியா சுலேவை தோற்கடிக்க முடியவில்லை. சரத் பவாரின் மகள் சுலே பாராமதியில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.