கேரளாவில் லோக்சபா தேர்தல் கடந்த 26-ம் தேதி நிறைவடைந்தது. 15 நாட்களுக்கு முன்பே தேர்தல் முடிந்து விட்டாலும், தேர்தல் பிரசாரத்தின் போது வகுப்புவாத உணர்வுகளை தூண்டியதாக வடகரா தொகுதியில் புகார் எழுந்தது. அது இன்னும் அங்கு பதற்றமான சூழ்நிலையையே கொண்டுள்ளன.
சி.பி.எம் தலைமையிலான LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UDF ஆகியவை வகுப்புவாதமாக அனுப்பபட்ட வாட்ஸ்அப் செய்தியில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன, அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பிலை "ஒரு நாளைக்கு 5 வேளை தொழுகை செய்யும் முஸ்லீம்" என்றும் மற்றும் சி.பி.எம் வேட்பாளர் கே.கே. ஷைலஜா-வை மறைமுகமாக சுட்டிக்காட்டி "காஃபிர் பெண்" (முஸ்லிம் அல்லாதவர்) என்றும் குறிக்கும் வகையில் வாட்ஸ்அப் செய்தி பரவியது.
2009 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் இடதுசாரி கோட்டையான வடகரா லோக்சபா தொகுதியில் இந்த முறை இரு கட்சிகளும் முன்னணி போட்டி வேட்பாளர்களை குறிவைத்து கடும் தேர்தல் போரை சந்தித்தன.
ஏப்ரல் 24 அன்று, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகி ஒருவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்ததாக கூறப்படும் அந்த வாட்ஸ்அப் செய்தி தொகுதி முழுவதும் வேகமாகப் பரவியது. அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டில், “ஷாபி ஒரு முஸ்லிம், அவர் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை செய்கிறார். மற்ற வேட்பாளர் ஒருவர் ‘காஃபிர்’ பெண். நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள். எங்களில் ஒருவருக்கு வாக்களியுங்கள்.’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த நாள், ஏப்ரல் 25 அன்று சி.பி.எம் தனது சமூக ஊடகங்களில் இதற்கு எதிர் பிரச்சாரத்தைத் தொடங்கின, “நிபா, வெள்ளம் மற்றும் தொற்றுநோய் நாட்களில், இந்த காஃபிர் பெண் (ஷைலஜா, முன்னாள் சுகாதார அமைச்சர்) நம்மை அனைவரையும் சாதி, மத வேறுபாடின்றி களப்பணி செய்து பாதுகாத்தார்' என்று பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/devout-muslim-versus-kafir-polls-over-but-communal-tensions-simmer-in-keralas-vadakara-9322712/
வடகரையில் யு.டி.எப் வகுப்புவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. சிபிஎம், தனது புகாரில், வடகரையில் உள்ள இளைஞர் கழகத் தொண்டர் ஒருவர் தான் இந்த செய்தியின் பின்னணியில் உள்ளவர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெறுவதற்காக சிபிஎம் உருவாக்கிய செய்தி என்று காங்கிரஸ் விரைவில் சிபிஎம் மீது குற்றச்சாட்டை சுமத்தியது.
“செய்தி திரிக்கப்பட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன். போலி ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்தி சிபிஎம் குற்றச்சாட்டை சுமத்துகிறது” என்று ஷாபி குற்றம் சாட்டினார்.
ஷைலஜாவை "காஃபிர் பெண்" என்று வர்ணித்த போலி ஸ்கிரீன் ஷாட்களின் பின்னணியில் உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கோரி கோழிக்கோடு எஸ்.பி அலுவலகத்திற்கு IUML வியாழக்கிழமை பேரணியாக நடந்து சென்று மனு அளித்தது. "தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் குற்றவாளி கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தமுமுக மாநிலச் செயலாளர் எம்.கே.முனீர் கூறினார்.
ஸ்கிரீன்ஷாட்டின் ஆதாரம் குறித்த குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஎம்)மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எதிராக வடகரா தொகுதி முழுவதும் பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் மாநாடுகளை நடத்தி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.