இரு சிவசேனா பிரிவுகளுக்கு இடையே நடந்து வரும் மோதலில், தாராவி மறுசீரமைப்பு திட்டம் மற்றொரு பிளாஷ் பாயிண்டாக உருவெடுத்துள்ளது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரேவின் சிவசேனா இன்று (டிச.16) சனிக்கிழமை தாராவியில் இருந்து மும்பையில் உள்ள தொழிலதிபர் கவுதம் அதானியின் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், சிவசேனா எம்.பி ராகுல் ஷெவாலே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்துள்ளார்.
தாராவி மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது, 49 வயதான ஷேவாலே, 2014 முதல் இரண்டு முறை எம்.பி.யாக இருந்து வருகிறார். உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட ஷெவாலே, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனாவுடன் தொடர்புடையவர், கட்சி அமைப்பில் பல பதவிகளை வகித்து, மூன்று முறை பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தேர்தலில் வெற்றி பெற்றார். பி.எம்.சி நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார் மற்றும் இந்தியாவின் பணக்கார முனிசிபல் கார்ப்பரேஷனின் பர்ஸ் சரங்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
ஜூலை மாதம் 594 ஏக்கர் குடிசைப் பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கான டெண்டர் பணியை அதானி
குழுமம் பெற்றது. இத்திட்டத்தின் மூலம் ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு அதானி குழுமத்திற்கு அநியாயமாக ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டி, உத்தவ் பேரணி நடத்துவதாக அறிவித்தார். மேலும் மாநில அரசு "மும்பையை அதானிக்கு பரிசளிப்பதை “Gift Mumbai to Adani” கட்சி அனுமதிக்காது என்று கூறினார். தாராவி குடியிருப்பாளர்கள் தலா 400-500 சதுர அடி இடத்தைப் பெற வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளை நம்பியிருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்களை தாராவிக்குள் இடம் மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த பேரணி குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, ஷேவாலே, “(மோடி) சிலர் இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள், ஆனால் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசை மறுவாழ்வுத் திட்டம் என்பதால் டி.ஆர்.பியை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். எந்த தடையும் இன்றி விரைவில் நடைபெற வேண்டும் என்று கூறினார் என்றார்.
உத்தவ் பேரணி அறிவித்த உடன் ஷிண்டே மற்றும் பா.ஜ.க துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் உத்தவை தாக்கிப் பேசினர். அவர் "வளர்ச்சிக்கு எதிரானவர்" என்று விமர்சனம் செய்தனர்.
மேலும், அவர் ஏழை மக்களுக்கு வீடு கிடைப்பதைத் தடுக்க முயற்சிப்பதாக சாடினர்.
மேலும் ஷிண்டே கூறுகையில், உத்தவ் "பெரிய வணிக நிறுவனங்களை பயமுறுத்துகிறார் மற்றும் மகாராஷ்டிராவில் முதலீடுகளை வெளியேற்ற திட்டமிடுகிறார்" என்று கடுமையாக சாடினார்.
தாராவியின் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உத்தவ் கூறியிருந்தாலும், அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் மூலம் தாராவி குடியிருப்பாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். “மின்சாரக் கட்டண ஒப்பந்தமும் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. எப்படி எல்லா துறைகளும் அதானிக்கு கொடுக்கப்படுகிறது? அனைத்து தொழில்களையும் குஜராத்திற்கு கொண்டு சென்றால், மும்பைக்கு என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அதானியின் நிறுவனங்களுக்கு திட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் அரசு எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக மாநில அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் இரு சேனா பிரிவுகளுக்கும் அரசியல், தேர்தல் ரீதியாக முக்கியமானது. ஏனெனில் இந்தத் திட்டம் ஏராளமான வாக்காளர்களை கொண்டுள்ளது. மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தாராவியின் முக்கியத்துவத்தையும், அதன் குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் கடினமான பணியையும் கருத்தில் கொண்டு, லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அரசாங்கத்தை முட்டுக்கட்டை போடுவதற்கு சிவசேனா (UBT) ஒரு வழியைக் கண்டறிந்துள்ளது.
காங்கிரஸும், டி.ஆர்.பி குறித்து அரசாங்கத்தை தாக்கியது. திட்டத்தில் உள்ள "பெரிய குறைபாடுகளை" சுட்டிக்காட்டி உள்ளது. மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், தாராவி எம்.எல்.ஏவுமான வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், இந்தத் திட்டம் ஆசியாவின் "மிகப்பெரிய கட்டுமான ஊழல்" என்று குற்றஞ்சாட்டினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/in-the-war-of-shiv-sena-dharavi-the-latest-flashpoint-why-uddhavs-party-is-set-to-march-in-protest-today-9070136/
மேலும் அதானிக்கு இதன் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறினார். “பிரதமரின் நெருங்கிய நண்பர் இந்த கனவுத் திட்டத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே முந்தைய டெண்டர் நடைமுறையை அரசாங்கம் ரத்து செய்தது. அதன்படி, அதானிக்கு உதவ புதிதாக டெண்டர் தயார் செய்யப்பட்டது” என்று கெய்க்வாட் சமீபத்தில் மாநில சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.