நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் உள்ள முக்கிய சிறுபான்மை சமூகத்தினருடன் நெருங்கிப் பழகும் முயற்சியில், கிறிஸ்தவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்று ஆர்எஸ்எஸ் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தது. மேலும் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களுடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் மாநில பிரந்த காரியவாஹக் பி.என் ஈஸ்வரன் மற்றும் பிரந்த சங்க சாலக் கே.கே பல்ராம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சமூகம் இனி ஆர்எஸ்எஸ்ஸை கண்டு பயப்படபோவதில்லை. ஒரு காலத்தில் கிறிஸ்தவ சமூகம் ஆர்எஸ்எஸ்ஸைக் கண்டு பயந்திருந்தது. கிறிஸ்தவ தலைவர்களுடன் நாங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம், பேச்சுவார்த்தை தொடரும். கிறிஸ்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாநில மற்றும் மாவட்ட அளவிலான வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம் என்றார்.
"கேரளாவில் உள்ள முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்வதில் ஆர்எஸ்எஸ் ஆர்வமாக உள்ளது. இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் இதுவரை பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. அவர்கள் முன்வந்தால், சிக்கலை சரி செய்து பரிசீலிக்கலாம். அதே சமயம், தேச விரோதிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்காது" என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறினர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கூறுகையில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தீவிரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் பார்க்கவில்லை. ஐ.யூ.எம்.எல் இனவாத நலன்களைக் கொண்டிருந்தாலும் தீவிரவாத அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு ஜனநாயக கட்சி. மலப்புரத்தில் த.மு.மு.க எம்எல்ஏ ஒருவருடன் பேச்சு வார்த்தை நடந்தது என்றார்.
இந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளுடன் நடத்திய உரையாடலைக் குறிப்பிட்ட ஈஸ்வரன், இந்த உரையாடல் ஜமாஅத்-இ-இஸ்லாம் அமைப்புடன் மட்டும் இல்லை என்றார். ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த முஸ்லிம் தலைவர்களில் அவர்களின் ஜமாத் பிரதிநிதியும் இருந்தனர். ஜமாஅத் தங்கள் சமூக விரோத நிலைப்பாட்டை கைவிடத் தயாராக இருந்தால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று கூறினார்.
சமீபத்தில், டெல்லியில் முஸ்லீம் அமைப்புகளுடனான ஆர்எஸ்எஸ் உரையாடலில் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னிலையில், ஆளும் சி.பி.எம் பேச்சு வார்த்தையால் கேரளாவில் அரசியல் சர்ச்சையைத் தூண்டியது. நாட்டில் மதச்சார்பற்ற சமூகம் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகப் போராடும் நேரத்தில் இந்த உரையாடல் சிறுபான்மையினருக்கு உதவாது என்று சி.பி.எம் கருதியது.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2025-ல் ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்கும் எனக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பல்ராம், இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான கோவிந்தனின் கருத்து அவரது பயத்தில் இருந்து வந்தது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.