Amrita Dutta :
Dinesh Gundu Rao on Karnataka crisis : கர்நாடக மாநிலத்தில் 23ஆம் தேதி மாலை குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் பெற்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாஜகவிற்கு ஆதரவாக 105 பேர் வாக்களித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் தினேஷ் குண்டுராவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்துள்ள பேட்டியை இங்கே காண்போம்!
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணியின் முடிவாக இதை எடுத்துக் கொள்ளலாமா?
நிச்சயமாக இல்லை பாஜக விற்கு எதிராக நாங்கள் ஒன்றாக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம். தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவோமா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு என்னால் இது குறித்து எதுவும் கூற இயலாது.
இந்த ஆட்சி முடிவு மக்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்குமா?
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து மக்கள் மத்தியில் இந்த பிரச்சனையை கொண்டு போய் சேர்ப்போம். கடந்தமுறை இதை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம். ஏனென்றால் எங்களின் முன்பு பல்வேறு வேலைகள் நிலுவையில் இருந்தன. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல். நாங்கள் இங்கு நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவு வெற்றியை கைப்பற்றவில்லை என்றாலும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். நாங்கள் மக்கள் மத்தியில் சென்று பாஜகவின் ஜனநாயகத்திற்கு எதிரான முறைகள் குறித்தும் அதன் பாசிச சிந்தனைகள் குறித்தும் உரையாடுவோம். அரசியல் ரீதியாக நாங்கள் நிச்சயமாக பாஜகவை எதிர்த்து குரல் கொடுப்போம். நாங்கள் ஒருங்கிணைந்த நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம். பாஜகவை விட எங்களிடம் தலைசிறந்த தலைவர்கள் உள்ளனர். புதிய சிந்தனைகளையும், புதிய தலைவர்களையும் நாங்கள் என்றுமே வரவேற்கின்றோம்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து உங்களின் கருத்து?
அதுகுறித்து கூறுவதற்கு ஒன்றும் கிடையாது. தற்போதைக்கு அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியில் மேற்கொண்டோம் . ஆனால் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை, இனி எங்களுக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை.
காங்கிரஸ் எம்.எல்.ஏ நாராயண ராவ் சட்டமன்றத்தில் நீங்கள் வேப்பங்கொட்டைகளை விதைத்து விட்டு மாம்பழத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னால் இருந்த பிரச்சனையை நீங்கள் கண்டறிந்தீர்களா?
எங்களுக்கு தெரியும் எங்கே தவறு நடந்தது என்று. அதுகுறித்து எங்களால் வெளிப்படையாக ஆலோசனை செய்ய முடியாது. இந்த கட்சியில் இருந்து விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி இருந்தனர். தற்போது அவர்கள் கிளம்பிவிட்டனர். அது இந்தக் கட்சிக்கு மிகவும் நல்லது தான். இப்போது கட்சியை சுத்தம் செய்யும் நேரம் வந்து விட்டது. அதை சீராக ஒழுங்குபடுத்தும் முறையை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கியும் மிகவும் சக்தி வாய்ந்த கமிட்மென்ட் இல்லாத காரணத்தால் தான் உங்கள் கட்சி எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாறுகின்றார்கள்?
பாஜக எம்.எல்.ஏக்களை வாங்குவதற்காக ஒரு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்களை மிரட்டுகிறார்கள். பயமுறுத்துகிறார்கள். சில நேரங்களில் 30 முதல் 50 கோடி வரை பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அமலாக்கத்துறை மற்றும் இதர மத்திய துறைகளை பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்துகிறார்கள். ஜனநாயகத்துக்கு முற்றிலும் மாறாக செயல்படும் பாஜகவை போன்று நாங்கள் வேறு எந்த ஒரு கட்சியும் பார்த்ததில்லை நிலைத்தன்மை இல்லாமல் ஒரு ஆட்சி கவிழ்ந்தது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்படி ஆக மோசமாக எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் அளவிற்கான ஒரு கட்சியை நாங்கள் தற்போது தான் பார்க்கிறோம். ஒரு வருடமாக ஆயிரம் கோடிக்கு மேலாக செலவு செய்து இந்த பிளானை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் பாஜகவினர். குறிப்பிட்டு சொல்ல போனால் தனி விமானங்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் என்று இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இருக்கிறார்கள். இது போன்ற கேள்விகளை எல்லாம் ஏன் ஊடகங்கள் பாஜக அவரிடம் கேட்க துணிவதில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள