/tamil-ie/media/media_files/uploads/2020/06/image-96.jpg)
India China
SHUBHAJIT ROY
India-China Relations: எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சவுத் ப்ளாக்கில் அதிர்ச்சியை எற்படுத்தியது. கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள எல்லைக் கட்டுபாட்டு கோட்டை சீனா "ஒருதலைப்பட்சமாக" மாற்ற மேற்கொண்ட முயற்சியின் விளைவாக மோதல் ஏற்பட்டதாக புது டெல்லி தெரிவித்தது.
1967 ஆம் ஆண்டு தற்போதைய சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட எல்லை மோதல் உயிரிழப்புக்குப் பின்பு அதிகப்படியான மரணங்கள் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தேறியுள்ளது. 1975 க்குப் பிறகு (கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்) ஏற்பட்ட முதல் ராணுவ உயிரிழப்பாகவும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட எல்லை மோதல், 1993ம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதியான, ஸ்திரமான மற்றும் சமன்பாடான உறவுகளைப் பேணி காக்கும் நோக்கில் போடப்பட்ட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும், அமைதிக்கான புரிதலையும் கேள்வியாக்கியுள்ளது.
எல்லையில் இருநாடுகளுக்கு இடையேயான பதட்டமான சூழல் 40 நாட்களுக்கு மேலாக நீடித்த நிலையில்," லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஏற்கும் மனநிலையிலிருந்து சீனா ஒருதலைபட்சமாக விலகி செல்கிறது” என்று கருத்தை தற்போதுதான் இந்தியா முதன்முறையாக தெரிவித்தது.
இந்திய அரசின் இந்த அறிக்கையும் கூட,"திங்களன்று, எல்லையில் இரு நாடுகள் கொண்டுள்ள ஒருமித்த புரிதலை மீறி, சட்ட விரோதமாக இரண்டு முறை எல்லையைத் தாண்டி, சீன துருப்புகள் மீது ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக, கடுமையான மோதல்கள் ஏற்பட்டன" என்று சீனா வெளிவிவகார அமைச்சகத்தின் செய்திகுறிப்பு வெளியான பின்புதான் வெளியிட்டது.
எனவே, கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பான ஒருமித்த புரிதலில் இருந்து ஒருதலைபட்சமாக வெளியேறுவதாக புது டெல்லியும், பெய்ஜிங்ம் மாறி மாறி குற்றம் சாட்டின. என்பது கடந்த, ஜூன் 6ம் தேதி லெப்டினென்ட் ஜெனரல் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பு "ஒருமித்த கருத்து" எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, நேற்று பெய்ஜிங்கில் சீன துணை வெளியுறவு மந்திரி லூவோ ஜாஹூயை சந்தித்தார்.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்து கூறுகையில், கிழக்கு லடாக்கில் பதட்டங்களை குறைப்பது குறித்து இந்தியாவும் சீனாவும் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் விவாதித்து வந்தது. இரு நாடுகளைச் சேர்ந்த லெப்டினென்ட் ஜெனரல்கள் கடந்த ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். மேலும், பதட்டத்தைத் தணிப்பதற்கான செயல்முறையும் ஒப்புக் கொள்ளப்பட்டது. உயர் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த செயல்முறையை, நடைமுறைப்படுத்த தரை தளபதிகள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்" என்று தெரிவித்தார்.
சுமூகமாக செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்த நிலையில், கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பான ஒருமித்த கருத்தை மதிக்கும் நிலையில் இருந்து விலகி செல்கிறது" என்று தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை (ஜூன் 15) மாலை மற்றும் இரவில் நடந்த எல்லை மோதல் சம்பவங்கள் குறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக நேருக்கு நேர் வன்முறை ஏற்பட்டது. இரு தரப்பினரும் உயிரிழப்புகளை சந்தித்தனர். சீன துருப்புகள் அதன் உயர்மட்டத்தில் வழங்கிய கட்டளையை தீவிரமாக பின்பற்றப்பட்டிருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்படலாம், ”என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.
எல்லை நிர்வாகத்தில் பொறுப்பான அணுகுமுறையைப் இந்தியா பின்பற்றுவதாக கூறிய ஸ்ரீவஸ்தவா, இந்தியா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளன. கட்டுப்பாட்டு கோட்டை குறித்த எங்கள் அணுகுமுறை மிகவும் தெளிவாக உள்ளது. இதுபோன்ற தெளிவை, சீனாவிடம் இருந்தும் நாங்கள்நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று தெரிவித்தார்.
"நிர்மாணிக்கப்பட்ட நடைமுறைகள் மூலமாக ஒருமித்த கருத்துகளை உருவாக்கவும், கருத்து வேறுபாடுகளை களையவும், அமைதியை நிலைநாட்ட முடியும் பேச்சுவார்த்தை முக்கியமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதே நேரத்தில், இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,”என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக,“கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா எப்போதும் தனது இறையாண்மையைக் கொண்டுள்ளது…… இராணுவத் தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளின் போது செய்யப்பட்ட ஒருமித்த கருத்தை இந்திய துருப்புக்கள் கடுமையாக மீறன.... இரு நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டது” என சீனா அரசு செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ், மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) மேற்கத்திய படைப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங் சுய்லி மேற்கோளிட்டுக் கூறியது.
ஜூன் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் மோதல் நடந்தேறியுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அடுத்த இரண்டு காலத்திற்கு இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம்.
இதற்கு முன்னதாக, 1975ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அருணாச்சல பிரதேசப் பகுதியில் துலுங் லாவில் ரோந்து பணியில் இருந்த நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய எல்லை மோதலால், பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2014 ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இருநாட்டு தலைவர்களும் குறைந்தது 18 முறை சந்தித்துள்ளனர். இருநாட்டு சந்திப்பு மற்றும் பலதரப்பு உச்சிமாநாடுகளின் சந்திப்பும் இதில் அடங்கும். பிரதமராக நரேந்திர மோடி ஐந்து முறை சீனாவுக்கு பயணம் செய்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் எந்தவொரு இந்திய பிரதமரும் மேற்கொள்ளாத பயணம் இதுவாகும்.
சென்னையில் கடந்த ஆண்டுஅக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் மகாபலிபுரத்தில் சந்தித்தனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், இருநாட்டுத் தலைவர்களின் மூனறாவது சந்திப்பாக இந்த உச்சிமாநாடு அமைந்தது.
எல்லைப் பிரச்சினை உட்பட, இருநாடுகள் இடையே தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து இந்தியாவும் சீனாவும் 1993 ஆண்டு முதல், தொடர்ச்சியான பல இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டுக் கொள்கையை கையெழுத்திட்டு வருகின்றன.
1988 ஆம் ஆண்டு இருநாட்டு உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட பயணத்தின் விளைவாக ஒப்பந்தங்கள் உருவாகத் தொடங்கின.
1993 ஆம் ஆண்டில், அப்போதைய பாரத பிரதமர் பி.வி. நரசிம்மராவ் சீனாவிற்கு பயணம் செய்தார். சீன அதிபர் லி பெங் மற்றும் பி.வி. நரசிம்மராவ் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அரசியல் நடைமுறைகள் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர். இதன் விளைவாக, வந்தது தான் 1993ம் வருட "இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுதல்" என்ற ஒப்பந்தம்.
1996ஆம் ஆண்டும் சீன அதிபர் ஜியாங் ஜெமினின் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போதைய பிரதமர் எச். டி.தேவேகவுடாவும், சீனா அதிபரும், " கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை உறுதி செய்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் சீனாவிற்கு பயணம் சென்ற போது, எல்லை மோதல் தொடர்பாக இருநாடுகள் இடையே தீர்வு காணப்பட சிறப்புக் குழு என்ற செயல்முறை நிறுவப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனையில் உண்மையான, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்புடைய தீர்வை உருவாக்கும் பொறுப்பு இந்த சிறப்புக் குழுவுக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில், மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. எல்லைப் பிரச்சனையில் கடைபிடிக்கப் படவேண்டிய அரசியல் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுக் கொள்கை குறித்த ஒப்பந்தம் 2005-ல் கையெழுத்திடப்பட்டது; இந்தியா-சீனா எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான செயல்பாடுகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் 2012ல் கையெழுத்திடப்பட்டது; எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு எனும் ஒப்பந்தம் 2013ல் கையெழுத்திடப்பட்டது .
இந்த ஒப்பந்தங்களுக்கு மேலாக, வூகான் உணர்வு’ (ஏப்ரல் 2018) மற்றும் ‘மகாபலிபுரம் சந்திப்பு’ அடிப்படையில் தலைவர்கள் அளவிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தி பேச்சுவார்த்தையை விரிவுப்படுத்தப்படும் என்று இருநாட்டு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.