/tamil-ie/media/media_files/uploads/2023/08/Patel-car-show.jpg)
சமந்தர் படேல் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க அலுவலகத்தில் சமர்பிப்பதற்காக தனது தொகுதியான ஜவாத்தில் இருந்து போபாலுக்குப் பயணம் செய்யும் போது, “1,200 கார் கான்வாய்” தலைமையில் சென்றார். (ஆதாரம்: @AnshumanSail/X)
2020 ஆம் ஆண்டில் ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்தொடர்ந்து பா.ஜ.க.,வுக்குச் சென்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்திய மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ சமந்தர் படேல் ஆளும் கட்சியில் "நெருக்கடி" என்று குற்றம் சாட்டி வெள்ளிக்கிழமை காங்கிரஸுக்குத் திரும்பினார்.
சமந்தர் படேல் தனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க அலுவலகத்தில் சமர்பிப்பதற்காக தனது தொகுதியான ஜவாத்தில் இருந்து போபாலுக்குப் பயணம் செய்யும் போது, “1,200 கார் கான்வாய்” தலைமையில் சென்றார். சமீபத்திய மாதங்களில் காங்கிரஸுக்குத் திரும்பிய மூன்றாவது ஜோதிராதித்ய சிந்தியா விசுவாசி இவர், அதுவும் இதே பாணியில், பெரிய கார் பேரணிகளைப் பயன்படுத்தி வலிமையைக் காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘தடுக்க முடியாது’: தந்தை ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கில் ராகுல் காந்தி பைக் பயணம்
Massive boost for Congress and set back for BJP in Madhya Pradesh as close Scindia confidante Sh. Samandar Patel on the way to Bhopal to join congress party.
— Anshuman Sail Nehru (@AnshumanSail) August 18, 2023
Sh. Patel alongwith his 5000 supporters are coming from over 1200 vehicles to show his strength and join congress. pic.twitter.com/2lezg0Vnxg
ஜூன் 14 அன்று, ஷிவ்புரி பா.ஜ.க தலைவர் பைஜ்நாத் சிங் யாதவ், ஜோதிராதித்ய சிந்தியாவுடனான உறவைத் துண்டித்து 700 கார் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பா.ஜ.க.,வின் ஷிவ்புரி மாவட்டத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராகேஷ் குமார் குப்தா ஜூன் 26 அன்று, கார் பேரணியை ஏற்பாடு செய்தார்.
“நான் மகாராஜுடன் (ஜோதிராதித்ய சிந்தியா) கட்சியை விட்டு வெளியேறினேன். ஆனால் விரைவில், பா.ஜ.க.,வுக்குள் நெருக்கடி ஏற்பட்டது. எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவில்லை. எனக்கு மரியாதை மற்றும் பதவி வழங்கப்படவில்லை,” என்று சமந்தர் படேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
மத்திய பிரதேச பா.ஜ.க.,வுக்குள் கருத்து வேறுபாடு
வெள்ளியன்று நடந்த நிகழ்வு, சமந்தர் படேல் காங்கிரஸுக்கு இரண்டாவது முறையாகத் திரும்புவதைக் குறிக்கிறது. 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் இருந்து முதலில் விலகினார். சமந்தர் படேல் அந்த ஆண்டு சுயேட்சையாகப் போட்டியிட்டார், காங்கிரஸின் வாய்ப்புகளைக் குறைத்து 35,000 வாக்குகளை சொந்தமாகப் பெற்று பா.ஜ.க.,வின் வெற்றிக்கு வழி வகுத்தார். அவர் 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் மீண்டும் சேர்ந்தார், விரைவில் 2020 மார்ச்சில் ஜோதிராதித்ய சிந்தியாவின் 22 எம்.எல்.ஏ.,க்கள் குழுவுடன் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
ஆனால் சமந்தர் படேல் ஆளும் கட்சியில் சேர்ந்ததால் பிரச்சனை தொடங்கியது மற்றும் அவர் மாநில கேபினட் அமைச்சர் ஓம்பிரகாஷ் சக்லேச்சாவுடன் வெளிப்படையாக கடுமையான மோதலில் சிக்கினார். “எனது ஆதரவாளர்கள் சக்லேச்சாவின் முகாமால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டனர். சின்னச் சின்ன சண்டைக்காக அவர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டன. அப்போதுதான் நான் வெளியேற முடிவு செய்தேன்,” என்று சமந்தர் படேல் கூறினார்.
ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று எம்.எல்.ஏ சமந்தர் படேல் கூறினார். “எனக்கு மகாராஜ்ஜி மீது இன்னும் மரியாதை உண்டு. அவர் எனது பிரச்சினையை தனிப்பட்ட முறையில் தீர்க்க முயன்றார், மேலும் என்னுடன் சண்டையிட்டதற்காக பா.ஜ.க தலைவர்களை திட்டினார். ஆனால் அவர் ஒரு பெரிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர், அவர் எப்போதும் எனக்கு உதவ முடியாது,” என்று சமந்தர் படேல் கூறினார்.
ஜோதிராதித்ய சிந்தியா சமீபகாலமாக மத்திய பிரதேச பா.ஜ.க பிரிவில் உள்ள உட்கட்சி சண்டையில் சிக்கித் தவிக்க வேண்டியிருந்தது, அவரது ஆதரவாளர்கள் குழுவிற்கும் கட்சியின் பழைய காலத்தினர்களுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஜோதிராதித்ய சிந்தியா முகாமைச் சேர்ந்த தலைவர் ஒருவர், படேலின் இந்த நடவடிக்கை பா.ஜ.க.,வுக்கு இழப்பாக இருக்கலாம் என்றார். “நீமுச் பகுதியில் சமந்தர் பட்டேல் ஒரு பெரிய தலைவர். அவர் நிதி ரீதியாக பலமாக இருந்தார் மற்றும் கட்சிக்கு ஆதரவளித்தார். ஜோதிராதித்ய சிந்தியா அவருடைய காட்பாதர். அவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் லெப்டினன்ட் போல இருந்தார்,” என்றும் அந்த தலைவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முகாமைச் சேர்ந்த மற்றொரு தலைவர், “இன்னும் பல ஆதரவாளர்கள் விரைவில் காங்கிரஸுக்குத் திரும்புவார்கள்” என்று கூறினார். “இந்தத் தலைவர்களுடன் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால் ஜோதிராதித்ய சிந்தியா விசுவாசிகளுடன் பா.ஜ.க தனது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றும் அந்த தலைவர் கூறினார். பா.ஜ.க.,வில் இருந்து வெளியேறிய பிறகு, சக்லேஷா மீது சமந்தர் படேல் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
லிம்போடி கிராமப் பஞ்சாயத்தின் தலைவராகத் (சர்பஞ்ச்) தொடங்கிய சமந்தர் படேல், 1994 முதல் 2015 வரை தொடர்ந்து நான்கு முறை தலைவராக பதவி வகித்தார். அவர் தாகாட் சமூகத்தைச் சேர்ந்தவர், இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஜவாத்தில் 24% வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் 89 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அறிவித்துள்ள அவர், மாநிலத்தின் பணக்கார தலைவர்களில் ஒருவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.