ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியாவின் சட்டப்பூர்வதாக எரிசக்தி பரிவர்த்தனைகள் குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்று இந்திய மறைமுகமாக கூறியுள்ளது.
உக்ரைன் மீதான் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக உலகளவில்லை பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
இந்த தாக்குதலில், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ரஷ்யாவின் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால், ரஷ்யா கச்சா எண்ணெய் விலைகளை குறைத்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் இந்தியா முதல்கட்டமாக நாட்டின் தலைசிறந்த எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ரஷ்யா 3 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ந் தேதி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கிய நாளில் இருந்து, ரஷ்யாவிடம் இருந்து இந்திய எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி ரஷ்யா மார்ச் மாதத்தில் இதுவரை இந்தியாவிற்கு ஒரு நாளைக்கு 360,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2021 சராசரியை விட இந்த அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், “எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளோ அல்லது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகளை அரசியலாக்கக் வேண்டாம் என்று கூறியுள்ளது.
மேலும் இந்தியா தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளது. "நமது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் (ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பாய்கள்) இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதில் பெரும்பாலான இறக்குமதிகள் மேற்கு ஆசியாவிலிருந்து (ஈராக் 23%, சவுதி அரேபியா 18%, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 11%) பெறப்படுகிறது.
இதில் அமெரிக்காவும் இப்போது இந்தியாவிற்கு (7.3%) முக்கியமான கச்சா எண்ணெய் ஆதாரமாக மாறியுள்ளது. நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதிகள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அநேகமாக சுமார் 11%. இதன் சந்தைப் பங்கு 8% ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகள் "புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. வெளிப்படையான காரணங்களுக்காக, ஈரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டியிருந்தது. இதற்காக மாற்று ஆதாரங்கள் பெரும்பாலும் அதிக விலைக்கு வந்துள்ளன.
மேலும் ரஷ்யா உக்ரைன் மோதலுக்குப் பிறகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு இப்போது நமக்கு கடுமையான சவால்களைச் சேர்த்துள்ளது. இதற்கான போட்டி ஆதாரங்களுக்கான அழுத்தம் இயற்கையாகவே அதிகரித்துள்ளது,” என்று கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு முன்பு ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ஒரு சிறிய சப்ளையராக இருந்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவால் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல் செய்யப்படுகிறது. "ரஷ்யாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 75% ஐரோப்பாவிற்கு (ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்றவை) ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்பவர்களாக இருக்கின்றன.
"ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதியில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய எரிசக்தி இறக்குமதி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியக் கட்டணங்களுக்கான முக்கிய வழிகள் ரஷ்ய வங்கிகள் விலக்கப்படவில்லை" என்றும் கூறப்பட்டுள்ளது
தற்போது தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ள இந்தியா, அனைத்து தயாரிப்பாளர்களிடமிருந்தும் இதுபோன்ற சலுகைகளை வரவேற்கிறோம். இந்திய வர்த்தகர்களும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் சிறந்த தேர்வுகள் குிறத:து ஆராய்கின்றனர், ”என்று டெல்லி வட்டாரம் தெரிவித்தது.
ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை வாங்குவதை இந்தியா நிராகரிக்கவில்லை, ஒரு பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக எல்லா நேரங்களிலும் எல்லா விருப்பங்களையும் தேர்வு செய்கிறோம் என்று கூறியுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது, எனவே எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதை எதிர்கொள்ளும் இந்த சூழ்நிலையின் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாங்கள் எப்போதும் ஆராய்ந்து வருகிறோம்.
இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ரஷ்யா பெரிய அளவில் சப்ளை செய்யும் நாடாக இல்லை. ஆனால் நாம் ஒரு பெரிய எண்ணெய் இறக்குமதியாளர். இதனால் எல்லா இடங்களிலும் அனைத்து விருப்பங்களையும் பார்க்கிறோம், எங்களுக்கு ஆற்றல் தேவை," என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.