சென்சார் போர்டில் சலசலப்பு: ஒரே ஆள் ராஜ்ஜியமா? 6 ஆண்டுகளாக கூட்டமில்லை, அறிக்கை இல்லை

ஆஸ்கர் போட்டியில் உள்ள 'ஹோம் பவுண்ட்' படத்திலும், தில்ஜித் தோசாஞ்சின் 'பஞ்சாப் '95' படத்திலும் தணிக்கை வாரியம் விதித்த கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கத்தால், இந்தியத் திரைப்படத் துறை அதிருப்தி அடைந்துள்ளது.

ஆஸ்கர் போட்டியில் உள்ள 'ஹோம் பவுண்ட்' படத்திலும், தில்ஜித் தோசாஞ்சின் 'பஞ்சாப் '95' படத்திலும் தணிக்கை வாரியம் விதித்த கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கத்தால், இந்தியத் திரைப்படத் துறை அதிருப்தி அடைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Disquiet in film board

சென்சார் போர்டில் சலசலப்பு: ஒரே ஆள் ராஜ்ஜியம்? 6 ஆண்டுகளாகக் கூட்டமில்லை, அறிக்கை இல்லை

அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் மார்ட்டின் ஸ்கார்செஸி நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய, உலகளவில் பாராட்டப்பட்ட "ஹோம் பவுண்ட்" (Homebound) திரைப்படம், ஆஸ்கர் 2026-க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பதிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பெருமைக்குரிய அறிவிப்பு, அப்படத்தின் பயணத்தில் ஏற்பட்ட கடுமையான தடைகளையும், சர்ச்சைக்குரிய தணிக்கை முடிவுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

Advertisment

தணிக்கை வாரியம் விதித்த தொடர்ச்சியான காட்சி நீக்கத்தால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் விளைவாக, முதல் கட்ட போஸ்டர்களில் மார்ட்டின் ஸ்கார்செஸியின் பெயர் வேண்டுமென்றே நீக்கப்பட்டது. பின் அடுத்த பதிப்புகளில் மீண்டும் சேர்க்கப்பட்டது. தேசிய விருது பெற்ற நீரஜ் கைவான் இயக்கிய இத்திரைப்படம், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருந்தது. இது கேன்ஸ் மற்றும் டொராண்டோவில் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், உள்நாட்டின் மாற்றங்களால் "பாதிக்கப்பட்டதாக" படக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

படத்தைப் பார்க்க நாசாவிடம் இருந்து அனுமதி பெற 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கடும் சோதனைகளுக்குப் பிறகு, படத்திலிருந்த பல்வேறு சாதியக் குறிப்புகளை மாற்றும்படி அல்லது நீக்கும்படி வாரியம் உத்தரவிட்டது. தணிக்கை குழு முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோது, பெங்களூரைச் சேர்ந்த உறுப்பினர் நாகபரணா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு, மறுஆய்வுக் குழுவுக்குத் (RC) தலைமை தாங்கினார். அவர், சாதிய குறிப்புகளை நீக்குவதற்காக செய்யப்பட்ட அனைத்து காட்சி நீக்கங்களையும் நியாயப்படுத்தியதாக தணிக்கை வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

பிரபல நட்சத்திரம் தில்ஜித் தோசாஞ்ச் நடித்த, பஞ்சாபில் நிலவிய பயங்கரவாத நாட்களைப் பற்றிய திரைப்படமான 'பஞ்சாப் '95', கடந்த 3 ஆண்டுகளாக வெளியீடு காணாமல் முடங்கிக் கிடக்கிறது. தணிக்கை வாரியம் 100-க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்கக் கோரியதால், இயக்குநரான ஹனி ட்ரெஹான் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இப்படம், மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. டிசம்பர் 2022-ல் மத்திய திரைப்பட தணிக்கை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, வாரியம் பல காட்சிகளை நீக்கக் கோரியது.

Advertisment
Advertisements

படக்குழு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது. அப்போது, "இப்படம் சீக்கிய உணர்வுகளைத் தூண்டி, இளைஞர்களைத் தீவிரப்படுத்தக்கூடும்" என்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து தகவல் பெற்றதாக மத்திய தணிக்கை குழு வாரியம் கூறியது. நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்துகொண்டு 21 காட்சிகள் நீக்கி மீண்டும் சமர்ப்பித்த பிறகும், மறுஆய்வுக் குழு (RC) 4வது முறையாகப் பார்த்து 40 காட்சிகளை நீக்கக் கோரியது. மொத்தமாக 130 காட்சிகளை நீக்கியதால் இயக்குநர் ஏற்க மறுத்துவிட்டார். "நீதித்துறை கொலைகள்", "மத்திய அரசு", "டெல்லி கலவரம்" போன்ற சொற்களையும், "பஞ்சாப்" என்ற தலைப்புச் சொல்லையும் நீக்க தணிக்கை வாரியம் கோரியது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய திரைப்படச் சான்றளிப்பு வாரியத்தின் (CBFC) சர்ச்சைக்குரிய முடிவெடுக்கும் செயல்முறைகள், இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட ஒழுங்குமுறை நிழலைப் படரச் செய்துள்ளது. பல முன்னணி படத் தயாரிப்பாளர்களும், வாரிய உறுப்பினர்களும், மத்திய திரைப்படச் சான்றிளிப்பு வாரியத்துக்குள் "ஒரே ஆள் ஆட்சி" (One-man show) நடப்பதாகவும், இது "பிடிவாதமும், விசித்திரமும்" கலந்த "சூப்பர் சென்சார்ஷிப் ராஜ்யமாக" மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

'சினிமாட்டோகிராப் விதிகள் 2024'-ன் படி, 12 உறுப்பினர்களைக் கொண்ட வாரியம் 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்க வேண்டும். ஆனால், வாரியம் கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 31, 2019 அன்றுதான் சந்தித்தது. சி.பி.எஃப்.சி இணையதளத்தில் உள்ள கடைசி ஆண்டு அறிக்கை 2016-17 ஆம் ஆண்டுக்கானது. விதிகள் கட்டாயப்படுத்திய போதிலும், வாரியம் ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பிப்பதில்லை.

2017 ஆக.1 அன்று அமைக்கப்பட்ட வாரியத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல் முடிவடைந்தது. அதன் பிறகு எவருக்கும் அதிகாரப்பூர்வமாகப் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் தற்போதைய வாரியத்தின் சட்டபூர்வமான நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஏப்.2021-ல் திரைப்படச் சான்றளிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (FCAT) நீக்கப்பட்ட பிறகு, படத் தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடுவது கால விரயமாகவும், செலவு மிகுந்ததாகவும் உள்ளது.

"எங்கள் பதவிக்காலங்கள் காலவரையறைக்கு உட்பட்டவை (3 ஆண்டுகள்), ஆனால் 2017-க்குப் பிறகு யாரும் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நியமிக்கப்படவில்லை. வாரியக் கூட்டம் இல்லை, ஆண்டு அறிக்கை இல்லை, பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, மேல்முறையீட்டு அமைப்பு இல்லை... சி.பி.எஃப்.சி அதன் தலைவரின் விருப்பப்படி இயங்குகிறது" என்று வாரிய உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இந்த முறைகேடுகள் குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "சி.பி.எஃப்.சி ஆனது 1983 மற்றும் 2024 விதிகள் படி செயல்படுகிறது. சான்றளிப்பு அமைப்பு சீராகச் செயல்படுவதாகவும், ஆண்டு அறிக்கை விவரங்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையில் சேர்க்கப்படுவதாகவும்" பதிலளித்தார்.

2017-ல் பிரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் வாரியத்தின் செயல்பாடுகளில் ஒரு சில உறுப்பினர்களை மட்டுமே ஈடுபடுத்தி வருவதாகத் திரைப்படத் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். தணிக்கை முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் மேல்முறையீடு செய்யும் அதிகாரம் கொண்ட மறுஆய்வுக் குழுக்களுக்கு (Revising Committees - RC), வமன் கெண்ட்ரே, டி. எஸ். நாகபரணா மற்றும் ரமேஷ் படாங்கே போன்ற சிலரே தலைமை தாங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சி.பி.எஃப்.சி-ன் சமீபத்திய நடவடிக்கைகள், "கருத்தியல் அல்லது அரசியல் அடிப்படையில் கூட விளக்க முடியாத அளவுக்குத் தணிக்கையைத்" தூண்டிவிடுகிறது என்று ஒரு சி.பி.எஃப்.சி உறுப்பினர் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய பஹ்லாஜ் நிஹலானிக்குப் பிறகு ஜோஷி வந்தபோது, "சமஸ்கார் ஆட்சிக்கு" ஒரு முடிவு வந்துவிட்டது என்று நினைத்தோம், ஆனால் நிலைமை மாறவில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிரசூன் ஜோஷி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: