Disquiet over jobs and prices: புதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளுக்கும் இடையே நிறைய இடைவெளி இருப்பதும், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றிய அதிருப்தி மற்றும் பொருளாதாரம் எப்படி, எப்போது மாறும் என்ற கவலையும் அவர்கள் மத்தியில் உள்ளது.
ஆனாலும் யோகி அரசு மீதான அதிருப்தி கோபமாக மாறவில்லை என்பது தெளிவு. “மாற்றம் தெளிவாக உள்ளது, ”நேர்மையான எண்ணமும், கடின உழைப்பும்” போன்ற கோஷங்களுடன் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றனர். ஆனால், மேம்படுத்தப்பட்ட சட்ட ஒழுங்கு பாஜகவிற்கு சிறப்பான ஆதரவை வழங்குவது போல் தெரிகிறது. கூடவே கொரோனா தொற்று காலத்தில் இலவச ரேஷன் மற்றும் தடுப்பூசி திட்டங்களும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது. ஒரு சிலர் மட்டும் “யோகிஜீ அவர்களுக்கு அவர்களுடைய இடம் எது என்று காட்டியுள்ளார்” என்றும் கூறுகின்றனர். ”அவர்கள்” யார் என்பதை யாரும் தெளிவுபடுத்தவில்லை.
கொரோனா தொற்றால் இழந்த வேலைகள் தொடர்பான வெறுப்பு, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்தியில் நிலவும் ஏமாற்றம் மற்றும் உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய போராட்டங்களை அரசு கையாண்ட விதம் போன்றவை தேர்தலில் தீவிரமான சண்டையாக உருமாறவில்லை. பாஜகவைப் பொறுத்தவரை, அதன் மிகப்பெரிய துருப்புச் சீட்டு, எப்போதும் போல 2014-ல் இருந்து, வாக்காளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியாகவே இருக்கிறார்.
மதுரா மாவட்டத்தில் உள்ள மந்த் தொகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ஷர்மா கூறுகையில் BJP மற்றும் SP-RLD கூட்டணிக்கு இடையே ஒரு வலுவான மோதல் உள்ளது என்று தெரிவித்தார்.
அதிகரித்துவரும் வெறுப்பு
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மதுராவில், குறிப்பாக விருந்தாவன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை கண்டது. ஆனால் இந்த முறை, பாங்கி பிஹாரி மந்திர் நுழைவாயிலில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர் முதல் யாத்ரீகர்களுக்காக பிரதான சாலையில் காத்திருக்கும் இளம் சுற்றுலா வழிகாட்டிகள் வரை, அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள துயரங்கள் மட்டுமே உள்ளன.
இளைஞர்களுக்காக அரசு ஒரு வேலையையும் உருவாக்கித் தரவில்லை. ரயில்வே ஆகட்டும், பாதுகாப்பு மற்றும் எந்த துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. நானும் தொடர்ந்து விண்ணப்பங்களை எழுதி அனுப்புகிறேன். ஒன்றும் நடந்ததாக இல்லை என்று சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் பாஜக தொண்டர் ரிஷி கூறுகிறார். பல்தௌனி கிராமத்தை சேர்ந்த அவர் 12ம் வகுப்பு முடித்துள்ளார். 25 வயதான அவர், வேலையற்ற இளைஞர்களுக்கு தரப்படும் என்று கூறப்பட்ட ரூ. 500 தரப்படவில்லை என்று கூறினார். ஆனால் ரயில்வேயால் நடத்தப்பட்ட தொழில்நுட்பம் அல்லாத பாப்புலர் கேட்டகிரியில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றதாக கூறினார். இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை குறித்து விருந்தாவன் பகுதியில் வசித்து வரும் அமித் ஷர்மா மற்றும் உமேஷ் குமார் உபாத்யாய் போன்றோர்கள் பேசினார்கள். மற்றொரு வழிகாட்டியான நரேந்திர குமார் தெருவில் விடப்படும் மாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தார். மாடுகள் தற்போது விவசாயிகளுக்கு பெரிய தலைவலியாகிவிட்டது. 10 பிகா நிலம் வைத்திருப்பவர்கள் இந்த மாடுகள் வராமல் இருப்பதற்காக தங்கள் நிலத்தில் ரூ. 15 ஆயிரத்திற்கு விளக்குகள் போட வேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளரான மோஹித் குமார், 2012 – 2017 கால கட்டங்களில் அகிலேஷ் யாதவ் அரசு நிறைய வேலை வாய்ப்புகளை வழங்கியது என்று தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக பலரும் தங்களின் வேலையை இழந்துவிட்டோம் என்று கூறிய அவர், இந்த கட்சியின் ஆட்சியின் போது வேலை உருவாக்கத்திற்கான ஒரு அறிகுறியும் இல்லை என்று குறிப்பிட்ட்டார்.
மோஹித் மற்றும் அவருடைய நண்பர் அனூப் குமார் பாஜகவின் ”டிஜிட்டல் தரவுகள் மூலம் வேலை தேடும் தொழில்நுட்பத்திற்கு” பெரிதாக ஆதரவு அளிக்கவில்லை. நம்முடைய மாநிலம் நிறைய நகரங்களைக் காட்டிலும் கிராமங்களைக் கொண்டுள்ளது. இது எப்படி அந்த மக்களுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பினார்.
”பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்கும் தலைவர்கள் பலரும், உலக தரத்தில் சாலைகள் அமைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் இடையே போடப்பட்டிருக்கும் 5 கி.மீ சாலையில் நானூறு குழிகள் இருக்கின்றன” என்றும் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்தார் ரிஷி.
பாஜகவிற்கு சாதகமான அம்சங்கள்
மதுராவில் பாஜக வேட்பாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார். வேலைகள் மற்றும் நல்ல சாலைகள் இல்லாததால் ஏற்பட்ட ஆழ்ந்த அதிருப்தியின் மத்தியில் மேம்பட்ட மின்நிலைமை அவருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு காரணியாகத் தோன்றுகிறது. இந்த பகுதியில் பாஜகவினர், மோடி மற்றும் யோகி மீதான பிம்பம், உயர்சாதி இந்துக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ராமர் கோவில் ஆகியவற்றை நம்பியே களம் இறங்குகின்றனர்.
நிலைமை மாறும் என்று நம்புகின்றோம். நாங்கள் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவை தருவோம் என்று கூறுகிறார் சுற்றுலா வழிகாட்டி உபாத்யாய். மத்தியத்தில் மோடி மற்றும் மாநிலத்தில் யோகி ஆகியோரைக் கொண்ட இரட்டை இயந்திர அரசாங்கம் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று உபாத்யாயும் அவருடைய நண்பர் அமித் ஷர்மாவும் நம்புகின்றனர்.
ஹத்ராஸின் மெந்து சாலையில் கடை வைத்திருக்கும் யோகேஷ்வர் மித்தல், ஐந்தாண்டு ஆதித்யநாத் ஆட்சி தனது வாழ்க்கையிலோ அல்லது அவரது பகுதியிலோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். சமையல் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. என்னால் ஒரு சிறிய நிலத்தை கூட விற்க முடியவில்லை. சுற்றிலும் சாலை மோசமான நிலையில் இருப்பதால் சொந்தமாக ஒரு இடத்தை வாங்க பணம் திரட்ட வேண்டியுள்ளது என்கிறார் மித்தல், தன்னுடைய மளிகை கடையை நடத்த கட்டம் ஒன்றை வாடகைக்கு அவர் எடுத்துள்ளார்.
உள்ளூர் தலைவர்களில் 32 நபர்களை வேட்பாளர்கள் தேர்வுக்கு பரிந்துரை செய்த போதிலும் அக்கட்சி ஆக்ராவில் இருக்கும் அஞ்சுலா மஹோரை இத்தொகுதியில் வேட்பாளராக இறக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஆனாலும் என்னால் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க இயலாது ஏன் என்றால் என்னுடைய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அக்கட்சியை ஆதரிக்கின்றனர் எனவே நான் ஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளேன் என்று கூறுகிறார் மித்தல்.
உங்களின் வருமானம் உயர்ந்துள்ளது. ரூ. 1000 சம்பாதித்தவர்கள் இப்போது ரூ. 6000 சம்பாதிக்கின்றனர் என்று விலைவாசி உயர்வுக்கு மதுராவில், அமித் சர்மா போன்ற ஆதரவாளர்கள் ஒரு நியாயத்தை வைத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இலவச உணவு பொருட்களும் பாஜகவிற்கு ஆதரவாக அமைந்துள்ளது. மாநிலத்தின் அதன் விநியோகம் ஆனாலும் அதன் பைகளில் மோடியின் புகைப்படம் இரட்டை இஞ்சினாக செயல்பட்டது.
இரண்டு மாவட்டங்களிலும் உள்ள பல வாக்காளர்கள், பாஜகவுக்கு வாக்களிக்காத சிலர் கூட, இலவச ரேஷன்களைக் குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உண்மையில் யோகி அரசை காப்பாற்றியது கொரோனா காலம் தான். இலவச ரேஷன் கிராமப்புற மக்களை கவர்ந்த அதே நேரத்தில் நகர்புறத்தில் தடுப்பூசி திட்டங்கள் பாஜகவிற்கு செல்வாக்கை பெற்றுத்தந்துள்ளது என்று சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர் அனூப் கூறியுள்ளார்.
“மேம்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு” வாக்காளர்களை திருப்திப்படுத்திய மற்றொரு காரணியாகும். அவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக உயர் சாதியினர் ஆதித்யநாத்தின் “கானூன் வ்யவஸ்தா”வைப் பாராட்டினர்.
முன்பு உயர்சாதி பெண்கள் வெளியே வர இயலாது. அவர்கள் ஏதேனும் துன்புறுத்தலுக்கு ஆளானாலும் கூட காவல்நிலையத்திற்கு செல்ல முடியாது. ஆனால் நிலைமை இன்று அப்படியாக இல்லை என ஹத்ராஸில் உள்ள விவசாயி சத்யென்பால் சிங் கூறுகிறார்.
மாநில போக்குவரத்து பேருந்து ஓட்டுநரான ராம் சிங் யாதவ், 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தனது அரசியல் விசுவாசத்தை சமாஜ்வாடி கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாற்றினாலும் கூட பாஜக அரசு மீது அதிருப்தியில் அவர் உள்ளார். கொரோனா தொற்று காலத்திலும் கூட பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களை அரசு நடத்திய விதத்தில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். நான் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமல்லாமல் அது தோல்வி அடைவதையும் பார்க்க வேண்டும் என்று மெந்து சாலையில் இருந்த யாதவ் குறிப்பிட்டார்.
மிகவும் தயக்கத்துடன் மித்தலுடன் அவர் உடன்படுகிறார். பாஜக ஒரு விசயத்தை திறம்பட செய்துள்ளது. சிறுபான்மையினருக்கு பாடம் புகட்டியுள்ளது.மேம்படுத்தப்பட்ட சட்ட ஒழுங்கை ஒருவர் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்று யாதவ் தெரிவித்தார்.
பங்கி பிஹாரி மந்திர் செல்லும் வழியில் பலகாரக்கடை வைத்திருக்கும் ரிஷப் சரஸ்வத் இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றமும், பாஜகவின் முக்கிய ஆதரவு தளமும் இருப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் தான் பாஜகவை காப்பாற்றியுள்ளது. மதுரா முழுமையாக சாதியத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி. அது பாஜகவிற்கு பெரிய அளவில் உதவுகிறது. அதே சமயத்தில் இளைஞர்கள் மீது பாஜகவின் ஐ.டி. செல் மூலம் நடத்தப்படும் சோசியல் மீடியா பிரச்சாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ரீகாந்த் சர்மாவை பொறுத்தவரையில் அவரை கட்சித் தலைவர்களும் கட்சியும் காப்பாற்றும் என்று சரஸ்வத் கூறினார்.
இங்குள்ள மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்களாக உள்ளனர், ஆனால் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மொத்தமாக சமாஜ்வாடி கட்சிக்கு தங்களின் ஆதரவை மாற்றிக் கொள்ளலாம் என்ற எச்சரிக்கையுடன் அவருடைய மேற்கூறிய கருத்து வெளிப்படுகிறது. முதற்கட்ட தேர்தலில், மதுரா பிப்ரவரி 10ம் தேதி அன்று தேர்தலை எதிர்கொள்கிறது. ஹத்ராஸ் பிப்ரவரி 14ம் தேதி அன்று தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil