Diwali 2020 : No ban on firecrackers this Diwali in Maharashtra : நாட்டில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் தீபாவளி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் களைகட்டி வருகிறது. காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க பல்வேறு நிபந்தனைகளும் கால நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை ஏதும் விதிக்கப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் வைரஸ் பரவல் தற்போது தான் குறைந்துள்ளது. காற்று மாசு அதிகரித்தால் நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்புகள் இருக்கிறது. நோய் தொற்று அதிகரித்தால் அடுத்த கட்ட பொதுமுடக்கத்திற்கு நாம் அனைவரும் தயார் ஆக வேண்டும். எனவே மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.