டி.கே சிவகுமாருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் -முதல்வர் எடியூரப்பா

எடியூரப்பா :சிவக்குமார் விவகாரத்தில் எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை, வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வெளிவர நான்  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Karnataka, BS Yeddyurappa
Karnataka, BS Yeddyurappa

கர்நாடாகவின் அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவரவாக கருதப்படுவர் முன்னாள் அமைச்சரும், கர்நாடக காங்கிரஸின் நிர்வாகிகளில் ஒருவருமான டி.கே சிவகுமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென நேற்று கைது செய்தனர்.

ரூ.8.59 கோடி  முறைகேடாக பதுக்கி வைத்ததாக  அமலாக்க துறையினர் கடந்த 30ம் தேதியில் இருந்து டி.கே சிவகுமாரிடம் விசராணை நடத்தி வந்தனர். பிறகு,  நான்கு நாட்களாக டெல்லி உள்ள  அமலாக்க துறையினரிடம் தினமும் ஆஜராகி வந்திருந்தார். இந்நிலையில், நேற்று விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அதிகாரிகள் நேற்று இரவு டிகே சிவகுமாரை திடீரென கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையை , கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று ஒரு நாள் போரட்டத்தையும் அறிவித்துள்ளன.

கைது குறித்து கர்நாடகாவின் தற்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்களிடம்  “சிவக்குமார் கைது விவகாரத்தில் எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை, சட்டம் தனது கடமையை செய்துள்ளது. அவர் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வெளிவர நான்  இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார். டி.கே சிவகுமார் கைது நடவடிக்கையை பாஜக முதல்வர் எடியூரப்பா மறைமுகமாக எதிர்ப்பது போல் உள்ளதாக அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dk shivakumar arrest dk shivakumar congress protest dkshivakumar yediyurappa opinion

Next Story
லண்டனில் மாயமான தெலங்கானா பாஜக பிரமுகர் மகன் சடலமாக மீட்புUjwal Sriharsha,Khammam District President of BJP, BJP, Telangana BJP VIP, london, Ujwal Sriharsha, தெலங்கானா பாஜக பிரமுகர், பாஜக உதய் பிரதாப் மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, உஜ்வால் ஸ்ரீஹர்ஷா உடல் சடலமாக மீட்பு, Khammam District BJP President Uday Pratap, Uday Pratap son Ujwal Sriharsha dead, Indian in London
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express