scorecardresearch

துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்: மாநிலங்களில் துணை முதல்வர்கள், ஒப்பந்தங்கள் ஒரு பார்வை

சமரசம் அல்லது கூட்டணி என்பது வழக்கமாக துணை முதல்வர் பதவிக்கு வழிவகுக்கும் ஒரு நிர்ப்பந்தம். இது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இப்போது ஆட்சி அமைப்பதற்கான குறுக்கு வழியாக உள்ளது.

dk shivakumar, karnataka deputy cm, karnataka cm siddaramaiah, karnataka congress government, துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார், மாநிலங்களில் துணை முதல்வர்கள், ஒப்பந்தங்கள் ஒரு பார்வை, டி.கே. சிவகுமார், சித்தராமையா, காங்கிரஸ், congress wins karnataka, congress rajasthan crisis, deputy cm explained
டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலியில் யார் அமரப் போகிறார்கள் என்பதற்கு நான்கு நாட்கள் முட்டுக்கட்டை நீடித்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்றும், மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என்றும் காங்கிரஸ் மத்திய தலைமை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையேயான ஒப்பந்தத்தில் முதல்வர் காலப் பகிர்வு ஒப்பந்தம் உள்ளதா என்பதை வெளியிட கட்சி மறுத்துவிட்டது.

முன்னதாக முதல்வர் பதவி மீது பிடிவாதமாக இருந்த சிவக்குமார், பின்னர் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும். மேலும், முக்கிய இலாகாக்களைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார்.

கர்நாடகாவைப் போலவே, துணை முதல்வர் பதவி பெரும்பாலும் சரிகட்டும் நடவடிக்கையாகவோ அல்லது சமரச நடவடிக்கையாகவோ அல்லது ஒரு ஏற்பாட்டின் பகுதியாகவோ பார்க்கப்படுகிறது. ஏனெனில், கட்சிகள் பலரின் நலன்களை சமநிலைப்படுத்த முயற்சி செய்கின்றன.

தற்போது, குறைந்தபட்சம் 10 மாநிலங்களில் (கர்நாடகாவைத் தவிர) துணை முதல்வர் நாற்காலியில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வடகிழக்கில், பல கட்சி கூட்டணி ஆட்சி என்பது வழக்கமாக இருப்பதால், 7 மாநிலங்களில் 4 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர்.

ஆந்திரப் பிரதேச அரசு அதிக துணை முதல்வர்களைக் கொண்டுள்ளது – ராஜண்ணா டோரா பீடிகா, புடி முத்தால நாயுடு; கோட்டு சத்தியநாராயணா; கே நாராயண சுவாமி; மற்றும் அம்சத் பாஷா ஷேக் பெபாரி உட்பட ஐந்து பேர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான உத்தரபிரதேசத்தில், இரண்டு துணை முதல்வர்கள் – கேசப் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் – வெவ்வேறு சமூகங்களுக்கு இடமளிக்கும் ஒரு சமநிலை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தின் மீது முழு அதிகாரத்தை வைத்திருக்கிறார்.

நாட்டிலேயே அதிக காலம் துணை முதல்வராக இருந்தவர்களில் பா.ஜ.க தலைவர் சுஷில் குமார் மோடி, பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாரின் துணை முதல்வராக பத்தாண்டு காலம் நவம்பர் 2005 முதல் ஜூன் 2013 வரையிலும், ஜூலை 2017 முதல் டிசம்பர் 2020 வரையிலும் இருந்தார்.

கூட்டணி அரசுகள்

ஹரியானாவில், 2019 சட்டமன்றத் தேர்தலின் போது, 90 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. புதிதாக உருவான இந்த கட்சி 10 எம்.எல்.ஏ.க்களை வென்று, கிங்மேக்கர் நிலைக்கு வந்தது.

இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் சமீபகாலமாக விரிசல் அடைந்துள்ளன. அடுத்த, சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிகள் இணைந்து போட்டியிடக்கூடாது என்ற ஆலோசனைகள் உள்ளன.

மகாராஷ்டிராவில், ஷிண்டே சேனா மற்றும் பா.ஜ.க.வின் அரசாங்கத்தை ஒரே மாதிரியான ஏற்பாட்டில் வைத்திருக்கிறது. இங்கு, பா.ஜ.க பெரிய கட்சியாக இருக்கும் போது, அது ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை அளித்தது. ஏனெனில், அவர் சிவசேனாவின் பெரும் பகுதியை உடைத்து பா.ஜ.க மேலே வரவும் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை மாற்றவும் உதவினார்.

முழு அதிகார மாற்றத்திற்கும் கருவியாகக் கருதப்பட்ட பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வராக இருப்பதில் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இருப்பினும், மாநிலத்தில் அதிகாரத்தின் கடிவாளத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக சிவசேனாவின் முதன்மைத் தலைவராக ஷிண்டேவின் நிலை (தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கி இருந்தபோதிலும்) உறுதியில்லாமல் இருக்கிறது.

பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் வைத்திருக்க, மகாகத்பந்தனின் மிகப்பெரிய கட்சியான ஆர்.ஜே.டி துணை முதல்வர் பதவியை எடுத்துக் கொண்டதால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, ஏற்பாடுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளன – இங்கே மீண்டும், பா.ஜ.க உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷுக்கு மகாகத்பந்தன் கூட்டணீ அரசாங்கத்தை அமைப்பது எளிதானது. மேலும், மிகவும் இளையவரான தேஜஸ்வி யாதவ் தனது மூத்த துணை முதல்வர் பதவிக்கு தள்ளி வைத்துள்ளார்.

சமீப காலமாக, 2024 தேர்தலுக்குப் பிந்தைய ஒரு முக்கிய பங்கு வகிக்க நிதிஷ் தயாராகிவிட்டார் என்ற குறிப்புகள் வெளிவருகின்றன. தேஜஸ்வி இறுதியாக ஹாட் சீட்டில் நகர்கிறார்.

சமீபத்திய தேர்தல்கள்

நாகாலாந்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாகாலாந்து ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (என்.டி.பி.பி) கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வும் எளிதான வெற்றியைப் பெற்றதையடுத்து, என்.டி.பி.பி-யின் நெய்பூ ரியோ முதல்வரானார். அதே நேரத்தில் அக்கட்சியின் டி.ஆர். ஜெய்லாங் துணை முதல்வரானார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இமாச்சலப் பிரதேசத் தேர்தலில், முதல்வர் பதவிக்கு கர்நாடகாவைப் போலவே காங்கிரசும் சந்தித்தது. சுக்விந்தர் சிங் சுகுவை முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் முகேஷ் அக்னிஹோத்ரியை துணை முதல்வராகவும் தேர்ந்தெடுத்து, சமரசம் செய்ய காங்கிரஸ் கட்சி இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டது – துணை முதல்வர் என்பது இந்த மலை மாநிலத்திற்கு முதல் முறையாகும்.

ஏராளமான பிரச்சனைகள்

இமாச்சலப் பிரதேசத்தில், இதுவரை காங்கிரஸ் சுமூகமாக முன்னேறி வந்தாலும், 2018 தேர்தலுக்குப் பிறகு, அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே முதல்வர் பதவிக்கு தீர்வு காண, பல மணி நேரம் எடுத்துக்கொண்ட ராஜஸ்தானைப் போல, கர்நாடகா மாறாது என்று காங்கிரஸ் நம்புகிறது. கெலாட், சித்தராமையாவைப் போலவே, எம்.எல்.ஏ.க்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும், மாநிலம் முழுவதும் பிரபலமானவராகவும் காணப்பட்டாலும், பைலட், சிவக்குமார் போன்றவர், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஆண்டுகளில் கட்சியை அணிதிரட்டியதற்கு உண்மையிலேயே தகுதியான வேட்பாளராக தன்னைக் கண்டார்.

டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் இரண்டு நாட்கள் விவாதங்கள் நீடித்தன, இது வரை இரண்டு முறை முதல்வராக இருந்த கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அன்றிலிருந்து வந்த பிரச்னைகளும் பைலட்டின் தீர்க்கப்படாத லட்சியங்களும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இப்போது ஒரு சமீபத்திய போர் நடந்து கொண்டிருக்கிறது – அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ளன. அங்கு பா.ஜ.க-வுக்கு எதிராக கடுமையான போட்டியை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

சட்டரீதியாக துணை முதல்வர் பதவியின் நிலை

முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளைப் போல துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி அல்ல. மாநிலத்தில் இது கேபினட் அமைச்சரின் பதவிக்கு சமமானது. ஒரு கேபினட் அமைச்சருக்குத் தகுதியான ஊதியம் மற்றும் சலுகைகளை அனுபவிக்கலாம். கேபினட் அமைச்சர்கள் வரியில்லா ஊதியம் மற்றும் சலுகைகளைப் பெறுகிறார்கள், அதேபோல், துணை முதல்வரும் பெறுவார்.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாட்டின் வெவ்வேறு அரசியல் சிந்தனைகளின் பிரதிநிதிகளாகக் காணப்பட்ட இரு தலைவர்களுடன், முதலில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த துணைப் பிரதமர் பதவிக்கும் இது பொருந்தும்.

துணைப் பிரதமர் அல்லது துணை முதல்வர் பதவிகள் பிரிவு 75-ல் குறிப்பிடப்படவில்லை – இது மத்திய அமைச்சர்கள் குழு நியமனம் மற்றும் 164-வது பிரிவில் மாநில அமைச்சர்கள் நியமனம் பற்றியது.

1989ல், ஹரியானாவின் மிகப் பெரிய தலைவர் தேவி லால் சௌத்ரி துணைப் பிரதமராகவும் வி.பி. சிங் பிரதமராகவும் – கூட்டணி ஜனதா தள அரசாங்கம் அமைந்த பிறகு, அவரது நியமனம் நீதிமன்றத்தில் எதிர்க்கப்பட்டது. அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட பதவியேற்பு உறுதி மொழி அப்படி இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி என்று கூறப்பட்டது.

இறுதியாக, கே.எம்.சர்மா எதிர் தேவி லால் மற்றும் மற்றும் பிறர் என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் தேவிலாலின் நியமனத்தை உறுதிசெய்தது. “தெளிவான அறிக்கையின் அடிப்படையில் அவ்வாறு செய்வதாகக் கூறியது. பதிலளித்த அட்டர்னி ஜெனரலால், பதில் எண். 1, அமைச்சர்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களைப் போன்ற ஒரு அமைச்சர், அவர் துணைப் பிரதமர் என்று வர்ணிக்கப்பட்டாலும்… அவர் துணைப் பிரதமர் என்று கூறியுள்ளது அவருக்கு பிரதமரின் எந்த அதிகாரத்தையும் அளிக்காது.” என்று கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Dk shivakumar set to become dy cm a look at the deputies and the deals