Advertisment

'இந்தியா நாடல்ல, துணைக் கண்டம்', ராமர் பற்றி கருத்து: ஆ.ராசா பேச்சும், விமர்சனமும்

தி.மு.கவின் ஆ.ராசா பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ஆர்.ஜே.டி அதிருப்தி தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
 A raja comme.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தி.மு.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசுகையில், இந்தியா ஒரு மொழி, ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரே பாரம்பரியம் கொண்ட தேசம் அல்ல. இது ஒரு நாடு அல்ல, ஒரு துணைக் கண்டம் என்று கூறினார். 

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோயம்புத்தூரில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது. விழாவில் நீலகிரி எம்.பி ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது. “ஒரே நாடு என்றால் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பாரம்பரியம் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம். இங்கு தமிழ்நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் கொண்ட நாடு. மலையாளம் என்பது மற்றொரு மொழி மற்றும் ஒரு கலாச்சாரம்... இவை அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கவே இந்தியா உருவாக்கப்பட்டது.  இது இந்தியாவை ஒரு துணைக் கண்டமாக ஆக்குகிறது, ஒரு நாடாக அல்ல என்றார். 

மேலும், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து பேசிய ராசா,  இவர்களின் விடுதலை செய்யப்பட்டபோது அவர்களின் ஆதரவாளர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டனர்.  “நீங்கள் பேசும் கடவுள் இதுவாக இருந்தால், இதுதான் உங்கள்  ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய் என்றால், இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இதை தமிழ்நாடு ஏற்காது. நாங்கள் ராமரின் எதிரிகள் என்று, நீங்கள் போய் எல்லோரிடமும் சொல்லுங்கள் என்று பேசினார். 

எவ்வாறாயினும், இவரது கருத்துக்கள் பா.ஜ.க மட்டுமல்ல,  இந்தியா கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டியாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் கூறுகையில், "இந்த மக்கள் சனாதன கலாச்சாரத்தை அழிக்க விரும்புகிறார்கள்" என்று கூறியபோது, ​​ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் இது ஆ.ராசாவின் தனிப்பட்ட கருத்து, இந்தியா கூட்டணியின் கருத்து அல்ல என்று கூறினார். 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் ஆ.ராசா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்,  அவர் கூறுகையில், “ஆ.ராசா பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதோடு, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்று தெரிவித்துள்ளார்”.

பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது 'X' பதிவில், “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் குறைவின்றி தொடர்கின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்த பிறகு இப்போது ஆ.ராசா இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அழைப்பு விடுக்கிறார், பகவான் ராமரை கேலி செய்கிறார். மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் கருத்துகளை கூறுகிறார் என்று விமர்சித்துள்ளார். 

தி.மு.க மீது பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் நடத்திய சில நாட்களில் ராசா பதிலடி தெரிவிக்கும் வகையில் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு திராவிடக் கட்சி முடிவுக்கு வரும் என்று மோடி கூறியிருந்தார். இந்தியா இருக்கும் வரை திமுக இருக்கும் என்றார் ராசா கூறினார். “தேர்தலுக்குப் பிறகு தி.மு.க இருக்காது என்று சொன்னார். தேர்தலுக்குப் பிறகு தி.மு.க இல்லை என்றால் இந்தியாவும் இருக்காது. அதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வார்த்தைகளில் விளையாடுகிறீர்களா?" என்று ஆவேசமாக பேசினார். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை குறிப்பிட்டு பேசிய ராஜா, “இந்தியா இங்கு இருக்காது என்று நான் ஏன் சொல்கிறேன்? என்றால் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா இங்கே இருக்காது, ஏனென்றால் இந்திய அரசியலமைப்பு இங்கே இருக்காது. இந்தியா இல்லாமல் போனால் தமிழ்நாடு தனி நாடாக மாறும். அந்த காட்சியை நாம் விரும்புகிறோமா?" என்றார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/dmk-a-raja-ram-india-comments-political-firestorm-9197601/?tbref=hp

மேலும், இந்தியா பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்றார். “தமிழ்நாட்டிற்கு வந்தால் கலாச்சாரம் ஒன்று தான். கேரளாவுக்கு இன்னொன்று உண்டு, டெல்லி மற்றும் ஒடிசாவில் வேறு கலாச்சாரம் உள்ளது. மணிப்பூரி மக்கள் நாய் இறைச்சி சாப்பிடுவது அவர்கள் கலாச்சாரம்.

ஆம். அது அவர்களின் கலாச்சாரம். காஷ்மீருக்கு ஒரு கலாச்சாரம் இருந்தால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். மணிப்பூரி மக்கள்  நாய் இறைச்சியை உண்ணும்போது, ​​அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு சமூகம் மாட்டிறைச்சி உண்கிறது என்றால் (அது) அதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதில் உங்கள் பிரச்சனை என்ன? அவர்கள் உங்களை மாட்டிறைச்சி சாப்பிடச் சொன்னார்களா? எனவே வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவிற்கு முக்கியம் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Dmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment