Puducherry | புதுச்சேரி வந்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பிரிஜிலால் அவர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து பலமுறை கடந்த 40 ஆண்டுகாலமாக 14 முறைக்கும் மேல் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 16–வது நிதிக்குழுவில் பங்கேற்பதில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் விளக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் எங்களுக்கு வரவேண்டிய நிதிப்பகிர்வு முன்பு இருந்த 75 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு கீழாக குருகிவிட்டது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி முழுமையாக தடைபட்டிருக்கிறது. ஆகவே, இந்த 16–வது நிதிக்குழுவில் புதுச்சேரியை இணைப்பதற்கு வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “கிடப்பில் உள்ள சென்னை – நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை இரயில் தடம், திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட இக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“